செய்திகள் :

'உதய சூரியனில் நிற்க முடியாது; டார்ச் லைட்தான் வேண்டும்!' - அறிவாலயத்தில் அடம் பிடித்த கமலின் மநீம!

post image

திமுக மற்றும் கூட்டணி கட்சிகளிடையேயான தொகுதி பங்கீடு இழுபறியாகவே சென்று கொண்டிருக்கிறது. விசிகவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் ஏற்கனவே முரண்டு பிடித்துக் கொண்டிருக்கின்றன.

அருணாச்சலம்
அருணாச்சலம் - மநீம பொதுச்செயலாளர்

இப்போது அந்தப் பட்டியலில் மக்கள் நீதி மய்யமும் இணைந்துள்ளது. 'போட்டியிட்டால் தனி சின்னத்தில்தான் போட்டியிடுவோம்' என அறிவாலயத்திலேயே கறாராக பேசியிருக்கிறார் மநீம பொதுச்செயலாளர் அருணாச்சலம்.

திமுகவின் தொகுதி பங்கீடு குழுவுடன் இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தையை மநீம இன்று நடத்தியிருந்தது. சுமார் அரைமணி நேரம் நீடித்த இந்தப் பேச்சுவார்த்தையில் தாங்கள் தனிச்சின்னத்தில் போட்டியிடவே விரும்புவதாக மநீம கூறியிருக்கிறது. மநீம பொதுச்செயலாளர் அருணாச்சலம் பேசுகையில், 'தொகுதி எண்ணிக்கையில் பிரச்னை இல்லை. அது சம்பந்தமான பேச்சுவார்த்தை சுமுகமாகவே சென்றது. ஆனால், திமுக எங்களை உதய சூரியன் சின்னத்தில் நிற்க கோரிக்கை வைக்கிறது.

ஸ்டாலின் - கமல்
ஸ்டாலின் - கமல்

கடந்த தேர்தல்களில் டார்ச் லைட் சின்னத்தில் போட்டியிட்டு சராசரியாக 4% வாக்குகளை வாங்கியிருக்கிறோம். தொண்டர்கள் மற்றும் மக்களிடன் சென்று சேர்ந்த சின்னம் டார்ச் லைட் சின்னம். அதில் போட்டியிட வேண்டும் என்றே உறுதியாக இருக்கிறோம். சின்னம் குறித்துதான் இருதரப்புக்கும் மாற்று கருத்துகள் இருக்கிறது. தலைவரிடம் விஷயத்தை கூறுவோம். செயற்குழு கூடி முடிவெடுப்போம். இன்னும் ஓரிரு நாளில் மீண்டும் சந்திக்கிறோம்' என்றார்.

திமுக கூட்டணியில் கமலின் மக்கள் நீதி மய்யத்துக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்படவிருப்பதாக தகவல் சொல்கின்றனர் அறிவாலய வட்டாரத்தினர்.

'ஈரானிடம் அணு ஆயுதம் இல்லை; கமேனி தன் இறப்பிற்கு பயப்படவில்லை!' - ஜோ கென்ட் 'பரபர' தகவல்கள்

"ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் போர் இஸ்ரேலின் அழுத்தத்தால் தொடங்கப்பட்டது... மனசாட்சிக்கு விரோதமாக ட்ரம்ப் நிர்வாகத்தின் ஈரான் போரை ஆதரிக்க முடியாது..."- என்று கூறி நேற்று முன்தினம் தனது அமெரிக்காவின... மேலும் பார்க்க

”விஜய்யிடம் கூட்டணி குறித்து எந்த பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை!” - நயினார் நாகேந்திரன்

தமிழக பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன், தனது இல்லத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் மிகவும் சுமுகமாக நடைபெற்று வருகின்றன. தொகுதிப் பங்கீடு குற... மேலும் பார்க்க

கைகூடாத கூட்டணி கணக்கு! - தடுமாறும் தைலாபுரம்… தனித்துவிடப்பட்ட `ராமதாஸ்' பாமக!

``தனித்துப் போட்டியிடலாம்”`அன்புமணி அணி' `ராமதாஸ் அணி' என இரண்டாக பிரிந்து கிடக்கிறது பா.ம.க. அதேசமயம் கட்சியின் சின்னமும், பெயரும் அன்புமணியிடம் இருப்பதால், பெரும்பாலான நிர்வாகிகளும், தொண்டர்களும் அவ... மேலும் பார்க்க

`தமிழ்நாடுக்கு 5 தலைநகரங்கள்; பெண்களுக்கு தனித்தொகுதி!' - தேர்தல் அறிக்கையை வெளியிட்ட சீமான்

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று தேர்தல் அறிக்கையை வெளியிட்டிருக்கிறார். அதில் பல்வேறு திட்டங்கள் பட்டியலிட்டு பேசி வருகிறார். அதின் முக்கிய வாக்குறுதிகள் தொகுப்பு... * நாதக ஆ... மேலும் பார்க்க

திருச்சி: தோழர் நிர்மலா ராணியின் திடீர் மரணம்! - அதிர்ச்சியில் கம்யூனிஸ்ட்கள்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (CPI-M) மூத்த தலைவர்களான ஆர். உமநாத் மற்றும் பாப்பா உமநாத் ஆகியோரின் இளைய மகள் உ.நிர்மலாராணி. CPIM அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் தோழர் உ.வாசுகி அவர்களின் தங்கை, திர... மேலும் பார்க்க