செய்திகள் :

Doctor Vikatan: தூக்கமின்மையால் சருமம் அதிக வறட்சியாக மாறுமா?

post image

Doctor Vikatan: எனக்கு மாதத்தில் அதிகபட்சமாக பத்து நாள்கள்தான் சருமம் நன்றாக இருக்கிறது. மற்ற நாள்களில் அதிக வறட்சி அல்லது பருக்கள் அல்லது பொலிவே இல்லாதது என எனக்கே என் சருமத்தைப் பார்க்கப் பிடிக்கவில்லை. சருமம் இப்படி மாறிக்கொண்டே இருக்குமா... சரியாகத் தூங்காவிட்டால் சருமம் வறட்சியாக மாறும் என்பது உண்மையா?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த சருமநல மருத்துவர் பூர்ணிமா.

சருமநல மருத்துவர் பூர்ணிமா
சருமநல மருத்துவர் பூர்ணிமா

சீதோஷ்ண நிலைக்க்கேற்ப நம் சருமம் மாறிக்கொண்டே இருக்கும். அதாவது வெயில் காலத்தில் சருமம் ஒரு மாதிரியும், பனிக்காலத்தில் ஒரு மாதிரியும் இருப்பதை உணர்ந்திருப்போம். அது மட்டுமல்ல, முந்தைய நாள் இரவு என்ன சாப்பிட்டோம், எவ்வளவு தண்ணீர் குடித்தோம், எத்தனை மணி நேரம் தூங்கினோம் என்பதெல்லாம்கூட சரும ஆரோக்கியத்தில் பிரதிபலிக்கும்.

ஸ்ட்ரெஸ்ஸில் இருந்தாலும் அது உங்கள் சருமத்தை பயங்கரமாக பாதிக்கும். மணப்பெண்ணாக இருப்பார்... விடிந்தால் திருமணம் என்ற நிலையில், காலையில் அவரது கன்னத்திலோ, நெற்றியிலோ திடீரென ஒரு பரு கிளம்பியிருக்கும். காரணம், ஸ்ட்ரெஸ். இன்டர்வியூவுக்கு செல்லும் நாள் அல்லது தேர்வெழுதப் போகும் நாளில், வாயெல்லாம் வறண்டு, உதடுகள் வெடித்துக் காணப்பட்ட அனுபவம் பலருக்கும் இருக்கும். அதுவும் ஸ்ட்ரெஸ்ஸின் அறிகுறியே...

உணவுக்கும் உங்கள் சரும ஆரோக்கியத்துக்கும்கூட தொடர்புண்டு. முதல்நாள் இரவு உங்களுக்கு மிகவும் பிடித்த சைனீஸ்   உணவு சாப்பிட்டிருப்பீர்கள்... அதிலுள்ள அதிகபட்ச சோடியம் காரணமாக, மறுநாள் உங்களுக்கு உடல் எடையும் ஒன்றிரண்டு கிலோ அதிகரித்திருக்கும். சருமத்தின் தன்மையிலும் மாற்றத்தைப் பார்ப்பீர்கள்.

'பியூட்டி ஸ்லீப்' ( Beauty sleep) என்றே ஒரு வார்த்தை உண்டு.

இவை எல்லாவற்றையும் தாண்டி, தூக்கத்துக்கும் சரும அழகுக்கும் மிக நெருங்கிய தொடர்பு உண்டு. 'பியூட்டி ஸ்லீப்' ( Beauty sleep) என்றே ஒரு வார்த்தை உண்டு. இரவில் 6 முதல் 8 மணி நேரம் ஆழ்ந்த தூக்கம் இருந்தால், அது சரும ஆரோக்கியத்தில் வெளிப்படும்.  8 மணி நேரம்தானே கணக்கு என நள்ளிரவு 2 மணிக்குத் தூங்கி, மறுநாள் முற்பகலில் கண் விழிப்பதெல்லாம் தூக்க ஆரோக்கியத்தில் வராது.  இரவு 9 மணிக்குத் தூங்கி, காலை 4 மணிக்கு எழுந்திருப்பதுதான் சரியானது. அந்த நேரத்தில் உங்கள் உடல் தன்னைத்தானே பழுதுபார்த்துக் கொள்ளும். புதிய செல்கள் உருவாகும். இரவு சரியாகத் தூங்கவில்லை என்றால் உடலில் நீரிழப்பு ஏற்பட்டு, காலையில் எழுந்திருக்கும்போது சருமம் அதீத வறட்சியோடு இருப்பதை உணர்வீர்கள். 

செல்போன் பார்த்துக்கொண்டே விழித்திருக்கும்போது, அந்த வெளிச்சத்தை மூளையானது பகல் எனப் புரிந்துகொண்டு, பகலில் செய்ய வேண்டிய வேலைகளைச் செய்யக் கட்டளையிடும். உடலுக்கு ஓய்வு கிடைக்காது.  செல்கள் பழுதுபார்ப்பது நடக்காது. நீங்கள் ஆசைப்படுகிற பளபள சருமமோ, முதுமையே தெரியாத அழகோ சாத்தியமே ஆகாது. மேற்குறிப்பிட்டவற்றில் உங்களுக்கு எது பிரச்னையாக இருக்கிறது என்பதைப் பார்த்து அதைத் தவிரத்தாலே, மாதத்தின் எல்லா நாள்களிலும் உங்கள் சருமம் மின்னும்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.    

Doctor Vikatan: வெயிட்லாஸ்... அங்கீகரிக்கப்பட்ட மருந்துகளை நாமாகப் பயன்படுத்தலாமா?

Doctor Vikatan: சமீபகாலமாக சமூக ஊடங்களில் உடல் எடையைக் குறைக்கும் வெயிட்லாஸ் மாத்திரைகள், மருந்துகள் பற்றிய செய்திகளை அதிகம் கேள்விப்படுகிறோம். மருத்துவ அமைப்புகளால் அங்கீகரிக்கப்பட்ட மருந்துகள் என்று... மேலும் பார்க்க

Doctor Vikatan: AB பிளட் குரூப்பைச் சேர்ந்தவர்களுக்கு எல்லா வகை ரத்தமும் ஏற்றுக்கொள்ளுமா?

Doctor Vikatan: ரத்த தானம் பற்றிய பொதுவான தகவல்கள் நிறைய கேள்விப்படுகிறோம். உதாரணத்துக்கு, O பிரிவு கொண்டவர்கள், யாருக்கு வேண்டுமானாலும் ரத்தம் கொடுக்கலாம் என்றும் AB பிளட் குரூப்பைச் சேர்ந்தவர்களுக்க... மேலும் பார்க்க

இளைஞர்களிடம் அதிகரிக்கும் மாரடைப்பு: `அதீத மகிழ்ச்சி, உடற்பயிற்சியும் ஆபத்தே'- மருத்துவரின் பகிர்வு!

ஹரியானா மாநில சட்டமன்றத்தில் புதன்கிழமை சமர்ப்பிக்கப்பட்ட ஒரு அறிக்கை பொது சுகாதாரத் துறையில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆறு ஆண்டுகளில் மட்டும் அந்த மாநிலத்தில் 18 முதல் 45 வயதுக்குட்பட... மேலும் பார்க்க

Doctor Vikatan: மாத்திரை சாப்பிட்ட பிறகு எடுக்கும் சுகர் டெஸ்ட்... ரிசல்ட் சரியாக இருக்குமா?!

Doctor Vikatan: குறிப்பிட்ட கால இடைவெளியில் சர்க்கரைநோய்க்கான பரிசோதனைகளைச் செய்து பார்க்கிறோம். முந்தைய நாள் இரவும் சர்க்கரைநோய்க்கான மாத்திரைகள் போட்டுக்கொண்டு, மறுநாள் காலையும் மாத்திரைகளைப் போட்டு... மேலும் பார்க்க

Doctor Vikatan: அடிக்கடி செல்லப் பிராணிகளிடம் கடி; எத்தனை நாள்களுக்கொரு முறை டிடி, ரேபிஸ் ஊசி?

Doctor Vikatan: எங்கள் வீட்டில் 2 நாய்க்குட்டிகளும், 3 பூனைகளும் வளர்க்கிறோம். என் மகனுக்கு 20 வயதாகிறது. அவற்றுடன் விளையாடும்போது வாரா வாரம் அவற்றின் நகங்களால் கீறுகின்றன. சில நேரங்களில் பற்களும் படு... மேலும் பார்க்க

பழசெல்லாம் மறக்காம இருக்கணுமா... பல் தேய்ங்க பாஸ்! - ஆய்வறிக்கையும் அல்சைமர் அலெர்ட்டும்

வாய் சுகாதாரமின்மைக்கும் அல்சைமர் உள்ளிட்ட மறதி நோய்களுக்கும் நெருங்கிய தொடர்புள்ளதாகச் சொல்கிறது 'கேர்க்வெஸ்ட் இன்ஸ்டிட்யூட்'டின் சமீபத்திய ஆய்வு ஒன்று. அதன்படி 2040-ல், அமெரிக்காவில் மறதி நோயால் பாத... மேலும் பார்க்க