செய்திகள் :

பெரம்பூரிலிருந்து பிரசாரம் தொடக்கம்; தொண்டர்களுடன் போட்டோ ஷூட்! - விஜய்யின் Election பிளான் என்ன?

post image

சட்டமன்றத் தேர்தலுக்கான வேலைகளை தவெக முகாம் முடுக்கிவிட தொடங்கியிருக்கிறது. ஏற்கனவே, முதற்கட்டமாக 100 வேட்பாளர்களை உறுதி செய்திருக்கும் விஜய், அடுத்தக்கட்டமாக வேக வேகமாக பிரசாரத்தை தொடங்க ஆயத்தமாகி வருவதாகவும் கூறுகின்றனர் பனையூர் வட்டாரத்தினர்.

TVK Vijay
TVK Vijay

இதுதொடர்பாக பனையூர் வட்டாரத்தினர் கூறுகையில், 'தலைவர் உட்பட கட்சியின் முக்கியஸ்தர்கள் அத்தனை பேரும் சென்னையிலுள்ள தொகுதிகளில் போட்டியிட முடிவெடுத்திருக்கின்றனர். அதன்படி, தலைவர் அவர் போட்டியிட பெரம்பூர் தொகுதியை டிக் அடித்திருக்கிறார்.

வேட்பாளர்களை இறுதி செய்யும் வேலைகள் முடிவடையப் போகிறது.

அடுத்தக்கட்டமாக மக்களிடம் சென்று வாக்கு கேட்பதுதான் முக்கியப் பணி. அதற்காக தலைவர் தன்னுடைய பிரசாரத்தை பெரம்பூர் மற்றும் ஆதவ் போட்டியிடும் வில்லிவாக்கத்திலிருந்து தொடங்கும் முடிவில் இருக்கிறார். வருகிற 24 அல்லது 25 ஆம் தேதியில் பெரம்பூருக்கு தலைவரை அழைத்து வரும் பணிகளை நிர்வாகிகள் செய்துகொண்டிருக்கின்றனர்' என்றனர்.

த.வெ.க - விஜய்
TVK - Vijay

மேலும் பேசியவர்கள், 'அதுமட்டுமல்லாமல் மார்ச் 26 ஆம் தேதி 2000 க்கும் மேற்பட்ட வட்ட, ஒன்றிய நகராட்சி லெவல் நிர்வாகிகளை நேரில் அழைத்து அவர்களுடன் உரையாடி போட்டோ ஷூட்டும் நடத்தப் போகிறார். அடிமட்ட நிர்வாகிகள் உற்சாகமாக வேலை செய்ய வேண்டும் என்பதற்காக இந்த ஏற்பாடு' என விவரித்தனர்.

`சிபிஎம் கட்சிக்கு 5 அல்லது 6 சீட்டுகளா?'- ஸ்டாலின் சொன்னது என்ன? - பெ.சண்முகம் பேட்டி

திமுக கூட்டணியில் தங்களுக்கு 6 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தி வரும் சிபிஎம் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் பெ.சண்முகம் அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலினை சந்தித்து ... மேலும் பார்க்க

`புதுச்சேரியிலும் திராவிட மாடல் ஆட்சி' திமுக காங்கிரஸ் கூட்டணி இழுபறி; பின்னணியில் ஸ்டாலின் பிளான்

``புதுச்சேரிக்கு திராவிட மாடல் ஆட்சி தேவை...”புதுச்சேரி 2021 சட்டமன்றத் தேர்தலில் மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் காங்கிரஸ் 15 தொகுதிகளிலும், தி.மு.க 13 தொகுதிகளிலும் வி.சி.க மற்றும் இந்திய க... மேலும் பார்க்க

'என்னுடைய பொறுமைக்கும் எல்லை உண்டு.!' - பாஜகவுக்கு கெடு விதித்த சரத்குமார்

இரண்டாண்டுகளுக்கு முன்பு தன்னுடைய சமத்துவ மக்கள் கட்சியை கலைத்துவிட்டு பாஜகவில் இணைந்த நடிகர் சரத்குமார், திடீரென தன்னுடைய ஆதரவாளர்களை தனியாக திரட்டி சந்தித்திருக்கிறார். கூட்டத்தில் பாஜகவில் சரத்குமா... மேலும் பார்க்க

'பரப்புரை குழுவில கூட நாட்டாமை பெயர் இல்லை' -பாஜகவுக்கு எதிராக கொந்தளிக்கும் சரத்குமார் ஆதரவாளர்கள்!

இரண்டாண்டுகளுக்கு முன்பு தன்னுடைய சமத்துவ மக்கள் கட்சியை கலைத்துவிட்டு பாஜகவில் இணைந்த நடிகர் சரத்குமார், திடீரென தன்னுடைய ஆதரவாளர்களை தனியாக திரட்டி சந்தித்திருக்கிறார். கூட்டத்தில் பாஜகவில் சரத்குமா... மேலும் பார்க்க

"திமுக கூட்டணியிலிருந்து அதிகாரபூர்வமாக விலகுகிறோம்"- த.வா.க தலைவர் வேல்முருகன் அதிரடி

தமிழக சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் இருந்த வேல்முருகனின் தமிழக வாழ்வுரிமை கட்சி அதிருப்தியில் இருந்தது. அந்த கட்சியின் 10 அம்ச கோரிக்கையை ஏற்காதது மற்றும் கூடுதல் சீட் ஒதுக்க திமுக மறுப்பது தான... மேலும் பார்க்க

ஈரானிய எண்ணெயை இந்தியா வாங்கப் போகிறதா? 'குறுக்கே' நிற்கும் இரண்டு காரணங்கள் என்ன?

கடலில் நிற்கும் கப்பல்களில் உள்ள தடை செய்யப்பட்ட ஈரானிய எண்ணெயை வாங்கிக் கொள்ளுங்கள் என்று நேற்று முன்தினம் (மார்ச் 20) அமெரிக்கா 'அனுமதி' அளித்துள்ளது.அந்தந்த நாடுகள் ஈரானிய எண்ணெய் வாங்க அமெரிக்காவி... மேலும் பார்க்க