செய்திகள் :

மின்சாரத்தை துண்டித்து 2 டிரான்ஸ்பார்மர்கள் திருட்டு – திருடர்களை வலை வீசி தேடி வரும் போலீஸார்!

post image

பொதுவாக தோட்டங்கள், ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிகளில் மின் இணைப்பை துண்டித்து விட்டு மின் கம்பிகளை மர்ம நபர்கள் திருடிச் செல்வதுண்டு. ஆனால், நெல்லை மாவட்டம், இட்டமொழியில் விவசாய நிலங்களுக்கு மின் இணைப்பு வழங்கும் வகையில் இலங்கையாகுடிகுளம், வேலாயுதபுரம் ஆகிய காட்டுப்பகுதியில் மின்கம்பங்களில் ‘டிரான்ஸ்பார்மர்கள்’ நிறுவப்பட்டிருந்தன.

திருடப்பட்ட டிரான்ஸ்பார்மர்கள்

இந்த நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு இரவில் மினிலாரியில் வந்த ஒரு கும்பல், மின் கம்பத்தில் ஏறி டிரான்ஸ்பார்மரில் மின் இணைப்பினை துண்டித்துள்ளனர். பின்னர், டிரான்ஸ்பார்மரில் கயிறு கட்டி கீழே இறக்கி வாகனத்தில் ஏற்றி அப்பகுதியில் இருந்த 2 டிரான்ஸ்பார்மர்களையும் திருடிச் சென்றுள்ளனர். மறுநாள் காலையில் விவசாயிகள் தங்களின் தோட்டங்களுக்கு தண்ணீர் பாய்ச்ச வந்துள்ளனர்.

மோட்டார் ஓடவில்லை.  மின் இணைப்பு இல்லாததால் மின் வாரிய ஊழியர்களுக்கு தகவல் கூறியுள்ளனர். மின் வாரிய ஊழியர்களும் அப்பகுதியில் ஆய்வு செய்தபோது 2 இடங்களில் டிரான்ஸ்பார்மர்கள் திருடு போனது தெரிய வந்தது. இலங்கையாகுடிகுளம் அருகில் டிரான்பார்மர்களை கயிறு கட்டி இழுத்துச் சென்று வாகனத்தில் ஏற்றிச் சென்ற தடயங்களும் பதிவாகியிருந்தன.

திருடப்பட்ட டிரான்ஸ்பார்மர்கள்

இதுகுறித்து இட்டமொழி இளநிலை பொறியாளர் சங்கீதா திசையன்விளை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அப்புகாரின் அடிப்படையில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். அத்துடன் அப்பகுதியிலுள்ள சி.சி.டி.வி கேமரா பதிவுகளையும் ஆய்வு செய்து டிரான்ஸ்பார்மர்களை திருடியவர்களை தேடி வருகின்றனர். டிரான்ஸ்பார்மர்களையே திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.    

பள்ளி மாணவி கொலை வழக்கு: ஒரே ஸ்டைலில் கொலைகள் - குற்றவாளி மதுரை சிறைக்கு மாற்றப்பட்ட பின்னணி என்ன?

தூத்துக்குடி மாவட்டம், குளத்தூர் அருகேயுள்ள வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்த பன்னிரண்டாம் வகுப்பு மாணவி, கடந்த 10-ம் தேதி காட்டுப் பகுதியில் இயற்கை உபாதை கழிப்பதற்காக மாலை சுமார் 6 மணியளவில் சென்றவர் நீண... மேலும் பார்க்க

பகலில் 5 ஸ்டார் ஹோட்டல் சமையல்காரர்; இரவில் திருடன் - விரைவில் பணம் ஈட்ட நினைத்த இளைஞர் சிக்கினார்

டெல்லி ஆர்.கே புரம் பகுதியில் வசிக்கும் சென் என்பவர் குடும்பத்தோடு ராஜஸ்தானில் நடந்த ஒரு திருமணத்திற்குச் சென்று இருந்தார். அவர் திருமணம் முடிந்து வீடு திரும்பியபோது வீட்டில் இருந்த நகை மற்றும் பணம் த... மேலும் பார்க்க

`தடயமே இல்லாத வழக்குகளையும் வெற்றிகரமாகத் தீர்க்க முடியும்'- தூத்துக்குடி மாணவி வழக்கு குறித்து ஐ.ஜி

தூத்துக்குடியில் 12-ம் வகுப்பு மாணவி, கடந்த 10-ம் தேதி மாலை சுமார் 6 மணியளவில், இயற்கை உபாதை கழிப்பதற்காக அப்பகுதியில் உள்ள காட்டுப்பகுதிக்குச் சென்றவர், இரவு நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. மறு... மேலும் பார்க்க

சென்னை: `தனிமையில் சந்திக்கலாம் வா' - தனியார் ஊழியரிடம் பெண் குரலில் பேசி வழிப்பறி செய்த டிரைவர்கள்

சென்னை, அயப்பாக்கத்தில் வசித்து வருபவர் லோகநாதன் (23). இவர் தனியார் நிறுவனத்தில் கணக்காளராக வேலை செய்து வருகிறார். இவருக்கு 16.03.2026-ம் தேதி இரவு செல்போன் செயலி மூலம் பெண் ஒருவர் அறிமுகமாகியிருக்கிற... மேலும் பார்க்க

பாலியல் குற்றச்சாட்டு: கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் நிர்வாகி மதூர் சத்யா கைது!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் இளம் நிர்வாகியாக இருந்தவர் மதூர் சத்யா. சமூக வலைதளங்கள், ஊடக விவாதங்களில் தன்னுடைய அரசியல் கருத்துகளுக்காக பிரபலமடைந்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வெகுஜன அமைப்புகளான ... மேலும் பார்க்க

தூத்துக்குடி மாணவி கொலை வழக்கு: செயின் பறிப்பு டு மூதாட்டி வன்கொடுமை - கைதானவரின் அதிர்ச்சி பின்னணி

ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடியைச் சேர்ந்தவர் முனியசாமி. இவரது மனைவி லிங்கம்மாள். இவர்களுக்கு தர்ம முனீஸ்வரன், ஈஸ்வரன், அழகு முனீஸ்வரன் ஆகிய மூன்று மகன்கள் உள்ளனர். இதில், தர்ம முனீஸ்வரன், பள்ளிப்படி... மேலும் பார்க்க