செய்திகள் :

'என்னுடைய பொறுமைக்கும் எல்லை உண்டு.!' - பாஜகவுக்கு கெடு விதித்த சரத்குமார்

post image

இரண்டாண்டுகளுக்கு முன்பு தன்னுடைய சமத்துவ மக்கள் கட்சியை கலைத்துவிட்டு பாஜகவில் இணைந்த நடிகர் சரத்குமார், திடீரென தன்னுடைய ஆதரவாளர்களை தனியாக திரட்டி சந்தித்திருக்கிறார். கூட்டத்தில் பாஜகவில் சரத்குமாருக்கு எந்த பொறுப்பும் கொடுக்கப்படாததால் அவரது ஆதரவாளர்கள் கொந்தளித்து பேசினர்.

சரத்குமார்
சரத்குமார்

ஆதரவாளர்கள் மத்தியில் சரத்குமார் பேசியவை, 'உங்களின் ஆதங்கத்தையெல்லாம் மனதில் வைத்திருக்கிறேன். எடுக்கிற முடிவு எல்லாருக்கும் சாதகமாக இருக்க வேண்டும். பதவி கிடைக்கவில்லை என்பதற்காக எடுத்தோம் கவிழ்த்தோம் என முடிவெடுத்தோம் என்று இருக்கக்கூடாது.

கட்சியினரான நீங்கள்தான் என் குடும்பத்தினர். 'இப்போதும் பாருங்கள். இரவில் மனைவியிடம் கேட்டு ஒரு முடிவெடுப்பார்' என கிண்டலடிக்கிறார்கள். அவர்களெல்லாம் முட்டாள்கள்.

-

என்னுடைய பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு. நான் யாருக்கும் பயந்தவன் கிடையாது.

நம் கட்சி சார்பில் முன்னோடிகள் பாஜக மாநிலத் தலைவரிடம் கடிதம் கொடுத்து கோரிக்கை வையுங்கள். கோரிக்கையை நிறைவேற்றவில்லையென்றால் என்ன செய்வதென பார்ப்போம்.

நம் நாடு சிறப்பாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் தேசிய நீரோட்டத்தில் இணைந்தேன். அண்ணாமலை, நயினார் நாகேந்திரனிடம் நாம் பலமுறை கோரிக்கை வைத்திருக்கிறோம்.

SarathKumar
SarathKumar

அவர்களுக்கு எதோ தடங்கல் இருக்கிறது. ஆனால், இதற்கு மேல் தாமதப்படுத்தினால் நன்றாக இருக்காது. அத்தனை தகுதியும் உடைய எனக்கு ஏன் அங்கீகாரம் இல்லை? என்னுடைய மனைவி அறிவு, திறமை, ஆற்றல் மிக்கவர். திமுகவுக்காக பிரசாரம் செய்தவர். அப்படிப்பட்டவரிடம் கருத்து கேட்காமல் யாரிடம் கேட்பது? சமூகவலைதளங்களில் தற்குறிகளாக இருக்கிறார்கள். 41 பேரை கொன்றுவிட்டு அவர்களின் வீட்டாரை ஹோட்டலுக்கு அழைத்து துக்கம் விசாரித்த கூட்டம் இது.

நம்முடைய கோரிக்கையை பாஜகவுக்கு தெரியப்படுத்துவோம். அதன்பிறகு முடிவெடுப்போம்.' என்றார்.

-

பெரம்பூரிலிருந்து பிரசாரம் தொடக்கம்; தொண்டர்களுடன் போட்டோ ஷூட்! - விஜய்யின் Election பிளான் என்ன?

சட்டமன்றத் தேர்தலுக்கான வேலைகளை தவெக முகாம் முடுக்கிவிட தொடங்கியிருக்கிறது. ஏற்கனவே, முதற்கட்டமாக 100 வேட்பாளர்களை உறுதி செய்திருக்கும் விஜய், அடுத்தக்கட்டமாக வேக வேகமாக பிரசாரத்தை தொடங்க ஆயத்தமாகி வர... மேலும் பார்க்க

`சிபிஎம் கட்சிக்கு 5 அல்லது 6 சீட்டுகளா?'- ஸ்டாலின் சொன்னது என்ன? - பெ.சண்முகம் பேட்டி

திமுக கூட்டணியில் தங்களுக்கு 6 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தி வரும் சிபிஎம் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் பெ.சண்முகம் அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலினை சந்தித்து ... மேலும் பார்க்க

`புதுச்சேரியிலும் திராவிட மாடல் ஆட்சி' திமுக காங்கிரஸ் கூட்டணி இழுபறி; பின்னணியில் ஸ்டாலின் பிளான்

``புதுச்சேரிக்கு திராவிட மாடல் ஆட்சி தேவை...”புதுச்சேரி 2021 சட்டமன்றத் தேர்தலில் மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் காங்கிரஸ் 15 தொகுதிகளிலும், தி.மு.க 13 தொகுதிகளிலும் வி.சி.க மற்றும் இந்திய க... மேலும் பார்க்க

'பரப்புரை குழுவில கூட நாட்டாமை பெயர் இல்லை' -பாஜகவுக்கு எதிராக கொந்தளிக்கும் சரத்குமார் ஆதரவாளர்கள்!

இரண்டாண்டுகளுக்கு முன்பு தன்னுடைய சமத்துவ மக்கள் கட்சியை கலைத்துவிட்டு பாஜகவில் இணைந்த நடிகர் சரத்குமார், திடீரென தன்னுடைய ஆதரவாளர்களை தனியாக திரட்டி சந்தித்திருக்கிறார். கூட்டத்தில் பாஜகவில் சரத்குமா... மேலும் பார்க்க

"திமுக கூட்டணியிலிருந்து அதிகாரபூர்வமாக விலகுகிறோம்"- த.வா.க தலைவர் வேல்முருகன் அதிரடி

தமிழக சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் இருந்த வேல்முருகனின் தமிழக வாழ்வுரிமை கட்சி அதிருப்தியில் இருந்தது. அந்த கட்சியின் 10 அம்ச கோரிக்கையை ஏற்காதது மற்றும் கூடுதல் சீட் ஒதுக்க திமுக மறுப்பது தான... மேலும் பார்க்க

ஈரானிய எண்ணெயை இந்தியா வாங்கப் போகிறதா? 'குறுக்கே' நிற்கும் இரண்டு காரணங்கள் என்ன?

கடலில் நிற்கும் கப்பல்களில் உள்ள தடை செய்யப்பட்ட ஈரானிய எண்ணெயை வாங்கிக் கொள்ளுங்கள் என்று நேற்று முன்தினம் (மார்ச் 20) அமெரிக்கா 'அனுமதி' அளித்துள்ளது.அந்தந்த நாடுகள் ஈரானிய எண்ணெய் வாங்க அமெரிக்காவி... மேலும் பார்க்க