செய்திகள் :

பகலில் 5 ஸ்டார் ஹோட்டல் சமையல்காரர்; இரவில் திருடன் - விரைவில் பணம் ஈட்ட நினைத்த இளைஞர் சிக்கினார்

post image

டெல்லி ஆர்.கே புரம் பகுதியில் வசிக்கும் சென் என்பவர் குடும்பத்தோடு ராஜஸ்தானில் நடந்த ஒரு திருமணத்திற்குச் சென்று இருந்தார். அவர் திருமணம் முடிந்து வீடு திரும்பியபோது வீட்டில் இருந்த நகை மற்றும் பணம் திருட்டு போய் இருந்தது.

வீட்டிற்குள் பூட்டை உடைந்து நுழைந்ததற்கான எந்த அறிகுறியும் இல்லை. வீட்டின் பூட்டு முறைப்படி திறக்கப்பட்டு திருடப்பட்டு இருந்தது. வீட்டின் உரிமையாளர் இது குறித்து போலீஸில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். போலீஸார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தபோது திருட்டு நடந்த வீட்டிற்கு வெளியில் ஒரு நபர் வாயிலில் நீண்ட நேரம் நின்று கொண்டிருந்தார்.

பூட்டை திறப்பதற்கு சிறிது நேரம் போராடி, உள்ளே நுழைந்து, திருடிவிட்டு 30 நிமிடங்களுக்குப் பிறகு வெளியேறுவது பதிவாகி இருந்தது. திருடிய பிறகு முகத்தில் சால்வையை மூடியபடி ஸ்கூட்டரில் தப்பிச் சென்ற திருடனை கண்டுபிடிப்பதற்காக, ஆர்.கே.புரம் காவல் நிலைய ஆய்வாளர் ரவீந்தர் குமார் தியாகி தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது.

திருடன் சென்ற ஸ்கூட்டர் எங்கு செல்கிறது என்பதை தெரிந்து கொள்ள போலீஸார் ரிங் ரோடு வரை கண்காணித்தனர்.

அது துவாரகாவில் உள்ள ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலுக்கு சென்றது. அங்கு விசாரித்தபோது அந்த ஸ்கூட்டர் அதே ஹோட்டலில் வேலை செய்யும் நிலேஷ் என்பவருக்கு சொந்தமானது என்று தெரிய வந்தது. இதையடுத்து அவரது வங்கி பரிவர்த்தனைகளை போலீஸார் ஆய்வு செய்தனர். அதன் அடிப்படையில் நிலேஷிடம் விசாரித்தனர். நிலேஷ் தான் இரவு நேர பணியில் இருந்ததாக தெரிவித்தார்.

​​ஆனால் நிலேஷ் சம்பந்தப்பட்ட வீட்டில் திருடிக்கொண்டு வந்தபோது முகத்தை மூட பயன்படுத்திய சால்வையும், தற்போது அவரிடம் இருந்த சால்வையும் ஒன்றாக இருந்ததையும், வங்கிக்கணக்கில் நடந்துள்ள பரிவர்த்தனை குறித்தும் விசாரித்தபோது திருடியதை நிலேஷ் ஒப்புக்கொண்டார். இது குறித்து போலீஸ் துணை கமிஷனர் அமித் கோயல் கூறுகையில், ''அதிகாலை 2 மணி முதல் அதிகாலை 3 மணிக்குள் இத்திருட்டு நடந்துள்ளது. நிலேஷுக்கு புகார்தாரரின் தம்பியை தெரியும். எனவே புகார்தாரரின் குடும்பம் பிப்ரவரி 14 அன்று ஒரு திருமணத்திற்கு புறப்பட்டுச் செல்கிறது என்பதை நிலேஷ் அறிந்திருந்தார்.

அந்த நேரத்தில் வீட்டில் யாரும் இருக்க மாட்டார்கள் என்பதை தெரிந்து கொண்டு திருட்டில் ஈடுபட்டுள்ளார். சீனப் பூட்டுகளைத் திறக்க மாஸ்டர் சாவியைப் பயன்படுத்தியுள்ளார். திருடப்பட்ட நகைகளை தனது பணியிடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த திருட்டு ஸ்கூட்டருக்குள் மறைத்துவைத்ததார். நிலேஷிடம் இருந்து சுமார் 2.7 லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளது.

பூட்டை எளிதாகத் திறக்கக்கூடிய வீடுகளை அடையாளம் கண்டு திருடியுள்ளார். இதே முறையைப் பயன்படுத்தி அம்பேத்கர் பஸ்தியில் உள்ள மேலும் இரண்டு வீடுகளில் திருட முயன்றுள்ளார். அவரிடம் விசாரித்தபோது வேகமாக பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கில் இத்திருட்டில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளார்''என்றார்.

`தடயமே இல்லாத வழக்குகளையும் வெற்றிகரமாகத் தீர்க்க முடியும்'- தூத்துக்குடி மாணவி வழக்கு குறித்து ஐ.ஜி

தூத்துக்குடியில் 12-ம் வகுப்பு மாணவி, கடந்த 10-ம் தேதி மாலை சுமார் 6 மணியளவில், இயற்கை உபாதை கழிப்பதற்காக அப்பகுதியில் உள்ள காட்டுப்பகுதிக்குச் சென்றவர், இரவு நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. மறு... மேலும் பார்க்க

சென்னை: `தனிமையில் சந்திக்கலாம் வா' - தனியார் ஊழியரிடம் பெண் குரலில் பேசி வழிப்பறி செய்த டிரைவர்கள்

சென்னை, அயப்பாக்கத்தில் வசித்து வருபவர் லோகநாதன் (23). இவர் தனியார் நிறுவனத்தில் கணக்காளராக வேலை செய்து வருகிறார். இவருக்கு 16.03.2026-ம் தேதி இரவு செல்போன் செயலி மூலம் பெண் ஒருவர் அறிமுகமாகியிருக்கிற... மேலும் பார்க்க

பாலியல் குற்றச்சாட்டு: கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் நிர்வாகி மதூர் சத்யா கைது!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் இளம் நிர்வாகியாக இருந்தவர் மதூர் சத்யா. சமூக வலைதளங்கள், ஊடக விவாதங்களில் தன்னுடைய அரசியல் கருத்துகளுக்காக பிரபலமடைந்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வெகுஜன அமைப்புகளான ... மேலும் பார்க்க

தூத்துக்குடி மாணவி கொலை வழக்கு: செயின் பறிப்பு டு மூதாட்டி வன்கொடுமை - கைதானவரின் அதிர்ச்சி பின்னணி

ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடியைச் சேர்ந்தவர் முனியசாமி. இவரது மனைவி லிங்கம்மாள். இவர்களுக்கு தர்ம முனீஸ்வரன், ஈஸ்வரன், அழகு முனீஸ்வரன் ஆகிய மூன்று மகன்கள் உள்ளனர். இதில், தர்ம முனீஸ்வரன், பள்ளிப்படி... மேலும் பார்க்க

"உன் கணவர் இறந்துவிடுவார்" - போதைப்பொருள் கொடுத்து பெண்களைப் பாலியல் வன்கொடுமை செய்த ஜோதிடர்

நாசிக்கில் ஜோதிடராக இருப்பவர் அசோக் கராட். தன்னை கேப்டன் என்று அழைத்துக்கொண்ட அசோக் கராட், தான் கப்பலில் வேலை செய்து ஓய்வு பெற்ற அதிகாரி என்று அனைவரிடமும் அறிமுகப்படுத்திக்கொண்டார். இவர் தன்னிடம் வரும... மேலும் பார்க்க

திருட்டு பைக்; கைகொடுத்த தரவுகள்.. மாணவி கொலை வழக்கில் குற்றவாளி சிக்கியது எப்படி?- எஸ்.பி விளக்கம்!

தூத்துக்குடி மாவட்டம், வேடநத்தம் கிராமத்தில் 12-ம் வகுப்பு மாணவி மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், 5 பேரின் டி.என்.ஏ மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. இதில், ஒருவரின் டி.எ... மேலும் பார்க்க