செய்திகள் :

'புகார் மட்டும் சொல்கிறார்கள்; ஆனால், உதவவில்லை; கோழைகள்" - NATO-வை சாடும் ட்ரம்ப்

post image

ஈரான் போர் தொடங்கி இன்றோடு நான்காவது வாரம் தொடங்குகிறது.

ஈரான், அமெரிக்கா, இஸ்ரேல் என எந்த நாடும் போர் நிறுத்தத்திற்குத் தயாராக இல்லை.

போர் நிறுத்தம் வேண்டாம்

'விரைவில் போர் முடிவுக்கு வரும்' என்று நேற்று முன்தினம் (மார்ச் 19), அமெரிக்கா சொன்னதில், உலகம் கொஞ்சம் ஆசுவாசமாகியது.

ஈரான் போர்
ஈரான் போர்

ஆனால், அதற்கும் நேற்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப், 'எனக்கு போர் நிறுத்தம் வேண்டாம். எதிரியை நாம் அடியோடு அழிக்கும் போது, போர் நிறுத்தம் செய்யமாட்டோம் என்று உங்களுக்கு தெரியும் தானே' என்று செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியுள்ளார்.

அமெரிக்காவிற்கு ஈரான் போரில் உள்ள மிகப்பெரிய பிரச்னையே 'ஹார்முஸ் ஜலசந்தி மூடலே'. இதை சரிசெய்ய தங்களது போர்க்கப்பலை அனுப்ப சொல்லி சீனா, ஜப்பான், நேட்டோ நாடுகளிடம் ட்ரம்ப் கேட்டார்.

சிலர் மறுத்துவிட்டனர்... சிலர் வாயைக் கூட திறக்கவில்லை.

நேட்டோ நாடுகள் - 'கோழைகளே'

இதை தற்போது கடுமையாக சாடியுள்ளார் ட்ரம்ப்.

"அமெரிக்கா இல்லையென்றால், NATO வெறும் காகிதப் புலிதான். அணு ஆயுதம் கொண்ட ஈரானுடன் சண்டையிட நேட்டோ நாடுகள் வரவில்லை.

இந்த நாடுகளுக்குக் குறைந்த ஆபத்தோடு ராணுவ ரீதியாக வெற்றி பெற்றிருக்கிறோம். ஈரான் உடனான போரில் உதவாத அவர்கள், எண்ணெய் விலை உயர்வை பற்றிப் புகார் கூறுகிறார்கள்.

ஆனால் அதற்கு காரணமான ஹார்முஸ் ஜலசந்தியைத் திறக்க உதவ மறுக்கிறார்கள். கோழைகள்... உங்களை மறக்கமாட்டோம்" என்று தனது ட்ரூத் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

"அமெரிக்க எங்களிடம் அனுமதி கோரியது, ஆனால் நாங்கள்.!"- அநுர குமார திசாநாயக்க சொல்வது என்ன?

ஈரான் போரில் ஈடுபட்டிருந்த விமானங்களை இலங்கையில் தரையிறக்குவதற்கான கோரிக்கையை நிராகரித்ததாக இலங்கை அதிபர் அநுர குமார திசாநாயக்க தெரிவித்திருக்கிறார். இஸ்ரேலும், அமெரிக்காவும் தொடர்ந்து ஈரான் மீது தாக்... மேலும் பார்க்க

`9 நாள்களுக்குப் பிறகு தகனம் செய்யப்பட்ட மாணவியின் உடல்' - கண்ணீரில் வேடநத்தம் கிராமம்!

தூத்துக்குடியில் கொலை செய்யப்பட்ட பள்ளி மாணவியின் உடல் இன்று பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மாணவர்கள், உறவினர்கள், ஊர்ப் பொதுமக்களின் அஞ்சலிக்குப் பிறகு தகனம் செய்யப்பட்டது. தூத்துக்குடி மாவட்டம், ... மேலும் பார்க்க

ராமதாஸ் - சசிகலா `தேர்தல் கூட்டணி' - தைலாபுரத்தில் கையெழுத்தான ஒப்பந்தம்!

வருகிற சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸை, இன்று வி.கே.சசிகலா சந்தித்திருந்தார். இந்நிலையில் ராமதாஸ் தலைமையிலான பாமக-வும், சசிகலாவின் அ.பு.த.ம.மு.க-வும் தேர்தல் கூட்டணிய... மேலும் பார்க்க

'நான் ஜெயிச்சா மட்டும் போதாது...' - விஜய் அறிவித்த அடுத்தக்கட்ட '50' வேட்பாளர்கள்! - முழு விவரம்!

தவெக சார்பில் இரண்டாம் கட்டமாக '50' வேட்பாளர்களை அக்கட்சியின் தலைவர் விஜய் இன்று உறுதி செய்துள்ளார். ஏற்கனவே முதற்கட்டமாக '60' வேட்பாளர்களை உறுதி செய்திருந்த விஜய், இன்று இரண்டாம் கட்டமாக மேலும் 50 வே... மேலும் பார்க்க

NDA: 'அத நீங்க தான் பாத்துக்கணும்' - அமித் ஷா சந்திப்பும் எடப்பாடியின் சந்திராஷ்டம கணக்கும்!

மதுரையிலும் திருச்சியிலும் அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன், மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நடத்திய சீட் பங்கீடு பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படாத சூழலே நிலவியது.பியூஷ் கோயலுமே,... மேலும் பார்க்க

காந்தியுடன் மோதும் 3 திமுக புள்ளிகள்; எஸ்.எம்.சுகுமார் எஸ்கேப் | ராணிப்பேட்டை மாவட்டம் யாருக்கு?

முந்துவது யார்?தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டது. தற்போதைய நிலவரப்படி, யார் களத்தில் முந்துகிறார்கள் என்பது குறித்து விவரிக்கும் பக்கம் தான் `முந்துவது யார்?'ராணிப்பேட்டை மாவட்ட நிலவரம்முந்துவது யார... மேலும் பார்க்க