செய்திகள் :

`எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவுக்கு எப்படி வழிகாட்டியாக இருந்தேனோ அதேபோல், விஜய்க்கும்..!' - செங்கோட்டையன்

post image

அதிமுக-வில் இருந்து தவெக-வில் அண்மையில் இணைந்த செங்கோட்டையன் தனது சொந்த ஊரான கோபிசெட்டிபாளையத்துக்கு இன்று மாலை (28.11.2025) வந்தார். அவருக்கு கோபிசெட்டிபாளையத்தில் தவெக தொண்டர்கள் பிரமாண்டமான வரவேற்பு அளித்தனர். இதைத் தொடர்ந்து, தொண்டர்கள் மத்தியில் பேசிய செங்கோட்டையன், "மூன்று முறை முதல்வராக இருந்தவர் எம்ஜிஆர், ஐந்து முறை முதல்வராக இருந்தவர் ஜெயலலிதா. அந்த வரிசையில் நாளை தமிழகத்தை ஆளப் போகிறார் தவெக தலைவர் விஜய். நான் முதல்முறை எம்ஜிஆரு-டன் பயணம் செய்தேன். வெற்றியை எட்டினோம். இரண்டாம் முறை அம்மாவுடன் பயணம் செய்தேன். அப்போதும் வெற்றியை எட்டினோம். மூன்றாம் தலைமுறையாக இளவல் விஜய்யுடன் பயணம் செய்யப் போகிறேன். 2026-இல் மக்கள் சக்தியால் விஜய் முதல்வராகப் போகிறார். அதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது. என்னைப் பார்த்து, 50 ஆண்டு கால அரசியலில் என்ன செய்திருக்கிறேன் என்று எடப்பாடி பழனிசாமி கேட்கின்றார். நாளை கோபிசெட்டிபாளையத்துக்கு வரும் அவரைப் பார்த்து நான் கேட்கிறேன்.

விஜய் - செங்கோட்டையன்
விஜய் - செங்கோட்டையன்

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக-வுக்கு வெற்றி கிடைத்ததா? அதிமுக-வில் எனக்கு வந்த வாய்ப்புகளை அவருக்காக விட்டுக் கொடுத்தேன். அவரை முதல்வர், பொதுச் செயலாளராக முன்மொழிந்தேன். ஆனால், அவரிடம் சமத்துவம் இல்லை. 50 ஆண்டு காலம் அதிமுக-வுக்காக உழைத்துள்ளேன். அதற்குப் பரிசாக என்னோடு இருக்கும் அனைவரையும் கட்சியில் இருந்து நீக்கினார். கட்சி நிர்வாகியின் வீட்டுக்கு நான் இரங்கல் செய்தி கேட்கச் சென்றதற்காக அவரையும் நீக்கினார். இதைவிட வெட்க கேடான செயல் ஏதாவது இருக்க முடியுமா? உங்கள் தலைவரை சந்திக்க முடியுமா? என்று கேட்டார்கள்.ஒன்னேகால் மணி நேரம் நான் அழைத்துச் சென்றவர்களுக்கு உங்கள் தலைவர் துண்டைப் போட்டு வரவேற்றார். நாளை நாம் வரலாறு படைக்கப் போகிறோம். ஆண்டவர்களே ஆள வேண்டும் என்று என்ன உள்ளது. புதிய தலைமுறை ஆள வேண்டாமா? படத்தில் நடித்தால் 500 கோடி வருமானம் கிடைக்கும். ஆனால், அது தேவையில்லை என்று மக்கள் பணிக்கு வந்துள்ளார் விஜய்.

செங்கோட்டையன்
செங்கோட்டையன்

ஜெயலலிதா படத்தை வைத்துக் கொண்டிருக்கிறீர்கள் என செய்தியாளர்கள் கேட்கின்றனர். இங்கு ஜனநாயம் உள்ளது. அதனால், அவர் படத்தை வைத்துள்ளேன். ஆனால், அதிமுக-வில் எடப்பாடி பழனிசாமி படத்தை மட்டும்தான் வைத்துக் கொள்ள முடியும். எல்லோருக்கும் எல்லாம் என்ற நோக்கில், ஊழலற்ற புனித ஆட்சி விரைவில் மலரும். இளைஞர்களோடு பணியாற்றுகின்ற நல்ல வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது. எம்ஜிஆருக்கும், ஜெயலலிதாவுக்கும் எப்படி வழிகாட்டியாக இருந்தேனோ அதேபோல், விஜய்க்கும், உங்களுக்கும் வழிகாட்டியாக இருப்பேன். நீங்கள் அசைந்தால் தமிழகம் அசையும். உங்களுடைய தளபதிதான் அடுத்த முதல்வர். டிசம்பருக்குப் பிறகு தவெக தலைமையில் வலுவான கூட்டணி அமையும். முன்னாள் அமைச்சர்கள் பலரும் இங்கு வர தயாராகவுள்ளனர். நாங்கள் வந்துவிட்டோம் என கவலைப்பட வேண்டாம். நாங்கள் உங்களுக்கு வழிகாட்டியாக இருப்போம்" என்றார் செங்கோட்டையன்.

திருப்பரங்குன்றம்: ``நீதிமன்ற உத்தரவை இந்து விரோத திமுக அரசு செயல்படுத்த வேண்டும்" - அண்ணாமலை

வருடந்தோறும் கார்த்திகை தீபம் தினத்தன்று திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றப்படும் உச்சிப் பிள்ளையார் கோயிலின் தீபத் தூணில் நேற்று (டிசம்பர் 3) தீபம் ஏற்றப்பட்டது.ஆனால், இந்து தமிழர் கட்சியின் ராம ர... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றம்: "நீதிமன்ற தீர்ப்பை நிறைவேற்றாதது ஏன்?" - அமைச்சர் ரகுபதி விளக்கம்!

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்ற வேண்டுமென எழுந்த கோரிக்கையும் அதைத்தொடர்ந்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அளித்த தீர்ப்பும் பேசுபொருளாகியிருக்கிறது. இந்த சூழலில் தமிழ்நாடு அரசு நீத... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றம்: ``தேவையில்லாத பதற்றத்தை உண்டாக்க திமுக கபட நாடகம்" - எடப்பாடி பழனிசாமி கண்டனம்

வருடந்தோறும் கார்த்திகை தீபம் தினத்தன்று திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றப்படும் உச்சிப் பிள்ளையார் கோயிலின் தீபத் தூணில் நேற்று (டிசம்பர் 3) தீபம் ஏற்றப்பட்டது.ஆனால், இந்து தமிழர் கட்சியின் ராம ர... மேலும் பார்க்க

'இவர்கள் சிக்கந்தர் தர்காவையே தரைமட்டமாக்கி விடுவார்கள்!' - கொதிக்கும் பெ.சண்முகம் | பேட்டி

திருப்பரங்குன்றத்தில் நேற்று பதட்டமான சூழல் நிலவிய நிலையில், மனுதாரர் கேட்ட இடத்திலேயே தீபம் ஏற்ற மதுரை உயர்நீதிமன்றம் மீண்டும் உத்தரவிட்டுள்ளது. பரபரப்பான இந்த சூழலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிய... மேலும் பார்க்க

Madurai, Coimbatore Metro: நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பிய தயாநிதி மாறன்!

சென்னையைத் தொடர்ந்து கோவை மற்றும் மதுரை மாநகரங்களில் மெட்ரோ போக்குவரத்து வசதியை அமைக்க தமிழ்நாடு அரசு வகுத்த திட்டத்தை சமீபத்தில் திருப்பி அனுப்பியது மத்திய அரசு. Metro திட்டம் நிராகரிப்பு: மத்திய அரச... மேலும் பார்க்க

திண்டுக்கல்: `கோயில் தீபம் விவகாரம்'- ஒரே சமூகத்தினரிடையே பிரச்னை; 144 தடை உத்தரவு- என்ன நடந்தது?

திண்டுக்கல் மாவட்டம், சின்னாளப்பட்டி அருகே உள்ள பெருமாள் கோயில் பட்டியில் வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்த இந்து மக்கள் மற்றும் கிறிஸ்துவ மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இப்பகுதியில் மண்டு கருப்பணசாமி கோயில... மேலும் பார்க்க