செய்திகள் :

எளிய மக்களின் உணர்வுகளுக்கு இசையால் மகுடம் சூட்டிய தேவா

post image

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்

தேனிசைத் தென்றல் தேவா...   

நம்முடைய மகிழ்ச்சியிலும்,

காதலிலும் ,

வலியிலும்,

கண்ணீரிலும்

இப்படி ஏதோ ஒரு தருணத்தில் தேவாவின் இசை நம்முடன் பயணத்திருக்கும் .

இதை யாராலும் மறுக்க முடியாது. 

வெறும் கானா பாடல்களை மட்டும் கொடுத்தவர் என்று இவரை ஒரு வட்டத்திற்குள் அடக்கி விட முடியாது இவரின் இசை...

மாஸ் கிளாஸ் காதல் வீரம் சென்டிமென்ட் சோகம் என அத்தனை உணர்வுகளுக்கும்   பொருந்தக்கூடியதே!

மறக்க முடியாத சில பாடல்கள்

சூப்பர் ஸ்டார் நடித்த பாட்ஷா,

' ரா ரா ராமையா எட்டு எட்டா மனுஷ வாழ்வை பிரிச்சுக்கோ' பாடல். 

தத்துவப் பாடல்கள் பொதுவாக கடினமான ராகங்களில் இருக்கும் ன்ற வழக்கத்தை உடைத்து சாதாரண பாமர மக்களும் எளிதாக பாடும் வகையில் அமைந்தபாடல். அமைதியான, அதேசமயம் சிந்திக்க வைக்கும் ஓட்டத்தை கொண்ட பாடலில் மனிதனின் இதயத்துடிப்பு மற்றும் கடந்து போகும் காலத்தின் காலடி சத்தம் போல மென்மையாக வடிவமைத்திருப்பார் தேவா .

 பாடலின் இடையே வரும் புல்லாங்குழல் ஒருவித அமைதியையும், ஞானத்தையும் மனதிற்குள் கடத்தும்

தேவாவால் மிகச் சிறந்த தத்துவப் பாடலைக் கொடுக்க முடியும் என்பதற்கு இந்தப்பாடல் ஒரு உதாரணம்.

தேவா
தேவா

அவ்வை சண்முகி

டைட்டில் சாங்

சுறுசுறுப்பான வெஸ்டர்ன் பீட்ஸ்

படம் ஆரம்பிக்கும் போதே ரசிகர்களை இருக்கையில் நுனிக்கு வரவழைக்கும் வகையில் வேகமான மற்றும் துள்ளலான வெஸ்டர்ன் பாப் பாணிஇசை

 படத்தில் கமலஹாசன் டப்பிங் தியேட்டரில் வேலை பார்ப்பது, மனைவியை பிரிந்து குழந்தையை பார்க்க ஏங்குவது ,விவாகரத்து வழக்கு என படத்தின் ஆரம்பகட்ட கதை ஓட்டத்தை இந்த ஒரு பாடலுக்குள் காட்சிப்படுத்தி இருப்பார் தேவா .

காட்சியின் வேகத்திற்கு ஏற்ப தேவாவின் இசையும் தாளக்கட்டுகளும் மிக நேர்த்தியாக ஒரே நேர்கோட்டில் பயணிக்கும் .

பம்மல்கே. சம்பந்தம்

'ஏண்டி சூடாமணி'

சோகமான ராகம் ... ஆனால் நகைச்சுவை படம் என்பதால் பாரத்தை தராத வண்ணம் மென்மையான மெலடி யா soft beats போட்டிருப்பார் தேவா.பாடலின் இடையே வரும் வயலின் மற்றும் கீபோர்டு ஒலிகள் பிரிவின் ஏக்கத்தை அழகாக வெளிப்படுத்தும்.

பஞ்சதந்திரம் 

' காதல் பிரியாமல் காக்கின்ற தேவன் எங்கே ....' மென்மையான மற்றும் உணர்வு பூர்வமான இசையால்  பாடலுக்கு உயிர் கொடுத்து இருப்பார் . தேவா என்றாலே துள்ளல் இசை கானா என்ற பிம்பத்தை உடைத்த பாடல்களில் இதுவும் ஒன்று.

பாடலின் பல்லவியே மிக மெதுவாக சோகமாக ஆரம்பிக்கும். இதயத்தை மயிலிறகால் வருடக்கூடிய இசை.

குஷி #VikatanReview

குஷி

' மேகம் கருக்குது'

தேவாவின் வெஸ்டர்ன் மெலடி திறமைக்கு மகுடமாக அமைந்த இந்தப் பாடலை முழுக்க முழுக்க மேற்கத்திய கிளப் நடன பாணியில் அமைத்திருப்பார்.

பாடலின் தொடக்கத்தில் இருந்தே வரும் அந்த அதிவேக தாளக்கட்டு ... வரிகளுக்கு ஏற்ப பின்னணியில் இடி முழக்கம் மற்றும் மழையின் ஒலிகளை எஃபெக்ட் ஆக தேவா பயன்படுத்திய விதம் வேற லெவல்.

 உழைக்கும் வர்க்கத்தின் சிறப்பை சிவப்போடு ஒப்பிட்டு வைரமுத்து எழுதிய வரிகளுக்கு தேவா ட்ரம்பெட் ஒலிகளை பயன்படுத்தி கம்பீரமாக இசையமைத்த பாடல் தான் ரெட் படத்தின் மாஸ் டைட்டில் ஓப்பனிங் சாங்.

இந்தப் படத்தில் வரும் 'ஒல்லிக்குச்சி உடம்புக்காரி'  துள்ளலான வெஸ்டர்ன் ஃபீட்ஸை எலக்ட்ரானிக் ஒலிகளுடன் கலந்து தியேட்டரையே அதிர வைத்தப்பாடல்.

எத்தனை கவலைகள்

எத்தனை டென்ஷன்

ஸ்ட்ரெஸ் இருந்தாலும்

தேவாவின் இசையில் மலர்ந்த

பாடலைக் கேட்டால்

எனர்ஜி லெவல் கூடும். என்பதற்கு இந்த 'தூதுவளை அரைச்சு'பாடல் கிராமத்து நையாண்டியில் மிக எளிமையான தாளத்தில் அமைந்த பாடல்.

தேவாவின் குரலில் ஒலித்த மிக முக்கியமான பக்தி பாடல்களில் ஒன்று தேவி கருமாரி பாடல் உடுக்கை மற்றும் பம்பை ஒலிகள் நிறைந்த இசை

இப்படி எல்லா வகை உணர்வுகளையும் தன் இசையின் மூலம் கடத்திய தேவா அவர்களுக்கு தனி முத்திரையை கொடுத்தவை ' கானா' பாடல்கள்.

தேவாவின் கானா

அந்த நாளின்

மொத்த கசப்புகளையும்

விரட்டி விடும் .

சலோமியா பாடல் பிடிக்காதவர்கள் யாராவது இருக்க முடியுமா? கானாவையும் மேற்கத்திய பாப் இசையும் கலந்து தேவா உருவாக்கிய ஒரு மேஜிக்

அவர் தன் காந்த குரலில் இழுத்துப் பாடும்போது தியேட்டரேஅதிர்ந்தது

'கவலைப்படாதே சகோதரா' தேவாவின் கரியரில் மிக முக்கியமான மைல்கல்

வாழ்க்கை தத்துவத்தை மெட்ராஸ் கானா பாணியில் (தேவாவின் குரலில் ) எதார்த்தமாக சொல்லும் இந்தப் பாடல் பக்கா மாஸ் .

காற்றிருக்கும் வரை தேவாவின் கானாவும் இருக்கும்.

கடல் அலைகள் ஓய்ந்தாலும்

தேவாவின் மெலடிகளும் ஓயாது .

எளிய மக்களின் உணர்வுகளுக்கு தன் இசையால் மகுடம் சுட்டிய மாபெரும் கலைஞனே....

தலைமுறைகள் கடந்தும் உன் இசையில் மலர்ந்த பாடல்கள் காதுகளில் ஒலித்துக் கொண்டேதான் இருக்கும்.

காட்சிகளில் சொல்லப்படாத உணர்ச்சிகளைக் கூட இசையின் மூலமாக உணர வைத்த உங்களை எங்களால் என்றும் மறக்க முடியாது.

காற்றில் கலந்த தேனிசையே... சென்று வாருங்கள்.

என்றென்றும் அன்புடன்

ஆதிரை வேணுகோபால்.

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் முயற்சியே ‘My Vikatan’. இந்த ‘My Vikatan’ பிரிவில் பதிவாகும் கட்டுரைகளுக்கு என பிரத்யேகமான ஒரு வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப் உருவாக்கப்பட்டுள்ளது.

இதில் இணைந்திருப்பதன் மூலம், ‘My Vikatan’கட்டுரைகள், ‘My Vikatan’ தொடர்பான அறிவிப்புகள் என அனைத்தையும் உடனே தெரிந்து கொள்ளலாம்..!

இந்த வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப்பில் இணைய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க மக்களே...!

Link : https://chat.whatsapp.com/G7U0Xo0F63YA5PC6VgYMBQ

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏன் தேவாவின் இசை காலத்தைக் கடந்து வாழ்கிறது? – நமது இளமைப் பருவத்தை அழகாக்கிய பாடல்கள்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

தேவாவின் மறைவும் அழியாத இசை மரபும்! – மக்களிடம் நேரடியாகப் பேசிய எளிய இசையின் கதை

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

'மத்தாயும் மாக்ரபோலும்' - 86 வயதில் முதல் சிறுகதைத் தொகுப்பு; இலக்கிய உலகில் கவனம் ஈர்க்கும் SVR!

தென்னாசியாவின் மூத்த மார்க்ஸிய அறிஞர்களில் ஒருவராக விளங்கி வருபவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆய்வறிஞர் எஸ்.வி. ராஜதுரை. மார்க்ஸியம் மட்டுமின்றி பெரியாரியம், அம்பேத்கரியம் குறித்து தொடர் ஆய்வுகளை மேற்கொண்ட... மேலும் பார்க்க

தாய்மையே வெல்லும் - சிறுகதை

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

இமயத்தில் பெண்களின் நலன் காக்கும் மருத்துவ இமயம் - சோர்வறியா மருத்துவர் செரிங் லாண்டோல்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

ஜிலேபி முதல் ரசம் சாதம் வரை! – நடுத்தர வர்க்க இளைஞனின் மாஸ்டர்செஃப் கனவைச் சொல்லும் 'ரிசார்ட்'

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க