செய்திகள் :

ஏழு கடல் ஏழு மலை: ``ஐந்து ஆறு முறை பார்த்துவிட்டேன்; ஆனாலும்.."- இயக்குநர் மாரி செல்வராஜ் நெகிழ்ச்சி

post image

‘கற்றது தமிழ்’, ’தங்கமீன்கள்’, ’பேரன்பு’, ’பறந்து போ’ உள்ளிட்ட படங்களை தொடர்ந்து ராம் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் படம் ‘ஏழு கடல் ஏழு மலை’. நிவின் பாலி, அஞ்சலி, சூரி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் இசையமைத்துள்ளார். சுரேஷ் காமாட்சியின் ‘வி ஹவுஸ் புரொடக்சன்’ நிறுவனம் இப்படத்தைத் தயாரித்துள்ளது.

‘ஏழு கடல் ஏழு மலை’ திரைப்படம் குறித்து இயக்குநர் மாரி செல்வராஜ் வெளியிட்டிருக்கும் வீடியோவில், ``இயக்குநர் ராமின் 'ஏழு கடல் ஏழு மலை' திரைப்படம் இன்று அக்டோபர் 1-ம் தேதி வெளியாகிறது.

மாரி செல்வராஜ்
மாரி செல்வராஜ்

பொதுவாக சினிமா என்பது பலருக்கு ஒரு சாதாரண விஷயமாத் தோன்றலாம். ஆனால், அதை உருவாக்கும் படைப்பாளிக்குத்தான் அது எவ்வளவு பெரிய உணர்ச்சிப்பெருக்கு என்பது புரியும். இந்தப் படத்தை நான் ஐந்து ஆறு முறை பார்த்துவிட்டேன். ஒவ்வொரு முறை பார்க்கும்போதும், இயக்குநர் இதை எப்படி யோசித்திருப்பார், எப்படி இதனுள் பயணித்திருப்பார், மனிதர்களோடும் சமூகத்தோடும் இந்த பேரிரைச்சலுக்குள் எப்படி இவ்வளவு ஆழமாக இறங்கியிருப்பார் உள்ளிட்ட கேள்விகளும் வியப்பும் தோன்றி உந்திக்கொண்டே இருக்கும்.

அந்த அளவிற்குச் சிந்திக்க வைத்த, வியப்பில் ஆழ்த்திய ஒரு படைப்புதான் 'ஏழு கடல் ஏழு மலை'. திரைப்படம் என்பது வெறும் கொண்டாட்டங்களையும் தாண்டி, ஒரு பேரமைதியையும் பேரிரைச்சலையும் கொடுக்கக்கூடியது. பல கேள்விகளுக்குப் பதிலளிப்பது. இவையனைத்தையும் உள்ளடக்கிய படமாகவே 'ஏழு கடல் ஏழு மலை' உருவாகியுள்ளது. இந்தப் படத்தை பெரிய திரையில் (திரையரங்கில்) பார்க்கும்போது, அதில் உள்ள காட்சிகளோடும் மனிதர்களோடும், இயக்குநர் உருவாக்கியுள்ள அந்த அருமையான கற்பனை உலகத்திற்குள் நீங்களும் பயணித்து, ஒரு மறக்க முடியாத அனுபவத்தைப் பெறுவீர்கள் என்பது உறுதி.

மாரி செல்வராஜ்
மாரி செல்வராஜ்

நான் இப்போது வகாஸமத்தில் 'மஞ்சனத்தி' திரைப்படத்தின் படப்பிடிப்பில் இருப்பதால், என்னால் திரையரங்கிற்கு நேரடியாகச் செல்ல முடியவில்லை. ஆனால், நீங்கள் திரையரங்கிற்குச் சென்றால் வார்த்தைகளால் விவரிக்க முடியாத ஒரு சிறப்பான அனுபவம் உங்களுக்காகக் காத்திருக்கிறது. எனவே, இந்த அரிய அனுபவத்தைத் தவறவிடாமல் அனைவரும் திரையரங்கிற்குச் சென்று 'ஏழு கடல் ஏழு மலை' திரைப்படத்தைப் பாருங்கள்." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

"டோரதி, பேசாப் பொருளைப் பேசத் துணிந்திருக்கிறார்கள்"- பாராட்டிய சூர்யா

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் 'டோரதி' திரைப்படம் செப்.25 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. கீர்த்தி சுரேஷ், ரிஷிகாந்த், சனந்த் ஆகியோர் நடித்திருக்கும் இந்தப் படத்திற்கு இளையராஜ... மேலும் பார்க்க

"ஒரே சூரியன், ஒரே சந்திரன் மாதிரி ஒரே தலைவன் என்றால் அது என்னோட அப்பா மட்டும்தான்"- சௌந்தர்யா

'காதலில் சொதப்புவது எப்படி’, ‘வாயை மூடி பேசவும்’, ‘மாரி’ ஆகிய படங்களை இயக்கிய பாலாஜி மோகன் இயக்கத்தில் உருவாகியுள்ள வெப் சீரிஸ் ‘லவ்’. இதில் அர்ஜுன் தாஸ், ஐஸ்வர்யா லக்ஷ்மி உள்ளிட்ட பலர் நடித்திருக்கின... மேலும் பார்க்க

Dorothy: "என்னை விமானத்தில் ஏற்ற மறுத்தபோது அதிர்ச்சியாக இருந்தது" - ஜீவா சுப்ரமணியம் பேட்டி

கார்த்திக் சுப்புராஜ் இயக்கியிருக்கும் 'டோரதி' படத்திற்கு நல்ல பாராட்டுகள் கிடைத்து வருகின்றன. கீர்த்தி சுரேஷ், சனந்த், ரிஷிகாந்த் ஆகியோர் நடித்துள்ள இந்தப் படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். இந்தப... மேலும் பார்க்க

Amala Paul: ``ஆடை படம்போல இன்னொரு படம் நடிக்க மாட்டேன்" - நடிகை அமலா பால் ஓபன் டாக்!

2019-ஆம் ஆண்டு வெளியாகி பெரும் விவாதத்தை ஏற்படுத்திய திரைப்படம் 'ஆடை'. இந்தப் படத்தில் நடிகை அமலா பால் நிர்வாணமாக நடித்திருப்பார். வி ஸ்டுடியோஸ் தயாரிப்பில் ரத்னா குமார் இயக்கத்தில் வெளியான இந்தப் படத... மேலும் பார்க்க

Meesaya Murukku 2: "நானே அவரை 'ஆதி அண்ணா'ன்னுதான் கூப்பிடணும் போல" - சுந்தர்.சி கலகல

'ஹிப் ஹாப்' தமிழா ஆதி, எழுதி, இசையமைத்து, இயக்கி, நடித்திருக்கும் 'மீசைய முறுக்கு 2' படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. கேதிகா சர்மா, ரம்யா ரங்கநாதன், சைத்ரா பி அச்சார், ஹர்ஷத் கான் ஆ... மேலும் பார்க்க

Meesaya Murukku 2: "'என்னை அப்பானு கூப்பிடுற உரிமை உனக்கு இருக்கு'னு தேவா சார் சொன்னார்"- HipHop ஆதி

ஹிப் ஹாப் தமிழா ஆதி, எழுதி, இசையமைத்து, இயக்கி, நடித்திருக்கும் 'மீசைய முறுக்கு 2' படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. கேதிகா சர்மா, ரம்யா ரங்கநாதன், சைத்ரா பி அச்சார், ஹர்ஷத் கான் ஆகி... மேலும் பார்க்க