செய்திகள் :

ஏ.டி.எம் கார்டு, ஓ.டி.பி நம்பரைப் பயன்படுத்தி மோசடி - ரூ.10.96 லட்சத்தை இழந்த கரூர் முதியவர்!

post image

கரூர் மாவட்டம், குளித்தலை, காவேரி நகரை சேர்ந்தவர் ராமசாமி (வயது: 71). இவருடைய மொபைல் எண்ணை தொடர்பு கொண்ட மர்ம நபர்கள், இந்தியன் வங்கியில் இருந்து பேசுவதாக கூறி, ``உங்கள் ஏ.டி.எம் கார்டு லாக் ஆகி விட்டதால், அதை சரி செய்ய ஏ.டி.எம் கார்டு எண் மற்றும் ஓ.டி.பி நம்பர் வேண்டும்" எனக் கேட்டுள்ளனர். அதை உண்மை என நம்பிய ராமசாமி, ஏ.டி.எம் கார்டு எண் மற்றும் ஓ.டி.பி நம்பரை தெரிவித்துள்ளார். இதையடுத்து, ராமசாமியின் சேமிப்பு கணக்கில் இருந்த, 10 லட்சத்து, 96 ஆயிரத்து, 90 ரூபாயை மர்ம நபர்கள் எடுத்தனர்.

karur

அதற்குரிய குறுஞ்செய்தி ராமசாமி மொபைல் எண்ணுக்கு வந்துள்ளது. இதனால், அதிர்ச்சியடைந்த ராமசாமி அளித்த புகாரின்படி, கரூர் சைபர் கிரைம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர். ராமசாமியை ஏமாற்றி பணம் பறித்த மர்ம கும்பலை தேடி வருகின்றனர். ஏ.டி.எம் கார்டு நம்பர் மற்றும் ஓ.டி.பி மூலம் முதியவரின் வாங்கி கணக்கில் இருந்து லட்சக்கணக்கில் பணம் பறித்துள்ள சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அஸ்ஸாம் நபரின் ஆவணம் மூலம் போலி வங்கிக் கணக்கு; ரூ.2.28 லட்சம் லஞ்சம் பெற்ற இன்ஸ்பெக்டர் மீது வழக்கு

கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம், வைக்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இயங்கும் டிப்பர், டாரஸ் லாரிகள், சட்டவிரோத மண் கடத்தல் கும்பல்கள் மற்றும் பல்வேறு வழக்குகளின் குற்றவாளிகளை தப்பிக்க வைக்க... மேலும் பார்க்க

"ஒன்றுமில்லாதவரை அமைச்சராக்கினேன்"- ரூ.210 கோடிக்கு ஊழல் செய்ததாக BJP பெண் அமைச்சர்மீது கணவர் புகார்

உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த அமைச்சர் ரேகா ஆர்யா, தனது கணவர் பப்பு கிர்தாரி என்று அழைக்கப்படும் கிர்தாரி லால் சாஹு தன்னை அடித்து கொடுமைப்படுத்தியதாகவும், கொலை செய்ய முயன்றதாகவும், தனது மைனர் குழந்த... மேலும் பார்க்க

நாகப்பட்டினம்: ரூ.270 கோடி மதிப்பிலான 135 கிலோ மெத் கடத்தல்; சிக்கிய தவெக நிர்வாகி; 4 பேர் கைது

நாடப்பட்டினம் சிந்தாமணி மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் பூபாலன்(42) தவெக-வில் மாவட்ட செயற்குழு உறுப்பினர். இவரது மனைவி பிரேமியா இலங்கையைச் சேர்ந்தவர். வழக்கறிஞரான பூபாலன் தவெகவின் நாகை மாவட்டச் செயலா... மேலும் பார்க்க

ஈரோடு: பள்ளி மாணவர்களைக் குறிவைத்து போதை மாத்திரை விற்பனையா? 420 மாத்திரைகள் பறிமுதல்; 6 பேர் கைது

ஈரோடு மாநகர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் போதை மாத்திரை புழக்கம் அதிகரித்து வரும் நிலையில், குறிப்பிட்ட சில பகுதிகளில் விற்பனை நடைபெறுவதாக மக்கள் தகவல் தெரிவித்துள்ளனர். இதன் அடிப்படையில் ஈர... மேலும் பார்க்க

"Drishyam 3 படத்தைப் பார்த்து செய்தோம்" - நண்பனைக் கொன்ற மைனர் நண்பர்கள் சிக்கியது எப்படி?

மும்பை அருகில் உள்ள தானேயைச் சேர்ந்த 17 வயது நண்பர்கள் மூன்று வெவ்வேறு கல்லூரிகளில் படித்து வந்தனர். அவர்களில் ஒருவர் தங்க செயின் அணிந்து இருந்தார். மூன்று பேரும் 10வது வகுப்பு படித்து வந்த நிலையில் த... மேலும் பார்க்க

ஏழை பெண்களிடம் ரூ.25000 கொடுத்து கருமுட்டை எடுக்கும் கும்பல்; வெளிச்சந்தையில் அதிக விலைக்கு விற்பனை

மகாராஷ்டிரா பத்லாப்பூர் பகுதியில் பெண்களிடம் சட்டவிரோதமாக கருமுட்டை எடுத்து விற்பனை செய்யப்படுவதாக அமலாக்கப்பிரிவுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் சட்டவிரோதமாக கருமுட்டையை எ... மேலும் பார்க்க