செய்திகள் :

'ஒருகாலத்தில் ரூ.300 வாடகை கொடுக்கக் காசு இல்லாமல் அழுதிருக்கிறான்னு எங்க அம்மா..!'- சூரி எமோஷனல்

post image

'விடுதலை', 'கொட்டுக்காளி', 'கருடன்', 'மாமன்', படத்தைத் தொடர்ந்து மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில், 'மண்டாடி' படத்தில் நடித்திருக்கிறார் நடிகர் சூரி.

வெற்றிமாறனின் 'விடுதலை' படத்தைத் தயாரித்த எல்ரெட் குமாரின் ஆர்.எஸ். இன்ஃபோடெய்ன்மென்ட் இப்படத்தைத் தயாரித்திருக்கிறது.

இப்படத்தில் கிரியேட்டிவ் தயாரிப்பாளராக வெற்றிமாறன் பணியாற்றி இருக்கிறார். ஜி.வி. பிரகாஷ் இந்தப் படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.

இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று (ஆக. 28) அன்று நடைபெற்றது.

மண்டாடி
மண்டாடி

இதில் கலந்துகொண்டு பேசிய நடிகர் சூரி, " சில வார்த்தைகளை எத்தனை முறை சொன்னாலும் சலிக்காது. இன்றைக்கு எனக்கு கிடைக்கக்கூடிய இந்த விசிலும், கைத்தட்டலும் அனைத்தும் வெற்றிமாறனுக்கு தான் சேரும்.

நான் இதுவரை வந்ததற்கும், இதற்கு மேல் நான் பயணிப்பதற்கும் காரணம் அவர்தான். எவ்வளவு புயல் காற்று வந்தாலும் நீங்கள் போட்ட விதை முளைத்துக் கொண்டே இருக்கிறது.

இதற்கு மேல் பலத்த காற்று கூட அடிக்கலாம். எது வந்தாலும் அந்தச் செடி ஒடியாமல் பார்த்துக் கொண்டிருக்கிறேன். இளையராஜா பெரிய ஹீரோக்களுக்கும் இசையமைப்பார், சிறிய ஹீரோக்களுக்கும் இசையமைத்து கொடுப்பார்.

அவரால் பல இயக்குநர்கள் உருவாகியிருக்கிறார்கள். அதேபோல் ஜி.வி.பிரகாஷ் குமாரும் அனைவருக்கும் பாடல்கள் கொடுத்து வருகிறார்.

இந்தப் படத்தில் ரிஸ்க் இல்லை, ரிஸ்க்கையே படமாக எடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று கூறினேன்.

இந்தப் படத்தை எடுப்பது மிகவும் கடினமாக இருந்தது. ஆனால் ராமநாதபுரம் சுற்றுவட்டார ஊர் மக்கள் எங்களுக்கு அவ்வளவு ஆதரவு கொடுத்தார்கள்.

அவர்கள் ஒருநாள் வராமல் இருந்திருந்தால் கூட இந்தப் படம் கண்டிப்பாக வந்திருக்காது. என் குடும்பம் இப்போதும் என்னுடன் வந்திருக்கிறது.

தனது தாயுடன் சூரி
தனது தாயுடன் சூரி

நான் இந்த இடத்தில் நிற்பதற்கு என் குடும்பம்தான் காரணம். என் அம்மா இந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறார்கள்.

அவர் காரில் வரும்போது கூட, 'ஒருகாலத்தில் 300 ரூபாய் வாடகைகொடுக்கக்கூட காசு இல்லாமல் அழுதிருக்கிறான்.

ஆனால் இன்றைக்கு அவனுக்காக இத்தனை பேர் போஸ்டர் அடித்து ஒட்டியிருக்கிறார்கள்' என்று சொல்லிக் கொண்டே வந்தார். எங்க அம்மா என்னுடைய சாமி" என்று நெகிழ்ச்சியாகப் பேசியிருக்கிறார்.

Mandaadi: "தமிழரின் கதையை உலகம் பேசுமாறு செய்வதே பெருவெற்றி!" - 'மண்டாடி'க்கு சீமான் பாராட்டு!

சூரியின் 'மண்டாடி' படத்திற்கு வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் மகிமா நம்பியார், சத்யராஜ், சுஹாஸ் ஆக... மேலும் பார்க்க

Venkat Prabhu: "இதுனாலதான் நான் லண்டனுக்கு போகல!"- 'லெனின் பாண்டியன்' பட நிகழ்வில் வெங்கட் பிரபு

அறிமுக இயக்குநர் டி.டி. பாலசந்திரன் இயக்கத்தில் தர்ஷன் கணேசன், கங்கை அமரன், ரோஜா ஆகியோர் நடித்திருக்கும் 'லெனின் பாண்டியன்' திரைப்படம் இந்த மாதம் 25-ஆம் தேதி திரைக்கு வருகிறது. இந்தப் படத்தின் ப்ரீ ரி... மேலும் பார்க்க

Ilaiyaraaja: "இவன் என்கிட்டயே நடிப்பான்" - 'கங்கை அமரன்' பற்றி இளையராஜா கலகல

அறிமுக இயக்குநர் டி.டி. பாலசந்திரன் இயக்கத்தில் தர்ஷன் கணேசன், கங்கை அமரன், ரோஜா ஆகியோர் நடித்திருக்கும் 'லெனின் பாண்டியன்' திரைப்படம் இந்த மாதம் 25-ஆம் தேதி திரைக்கு வருகிறது. தர்ஷன் கணேசன், மறைந்த ந... மேலும் பார்க்க

Dorothy: 'தும்சக்கு தும்சக்கு தும்சக்கு!' - டொராண்டோ திரைப்பட விழாவில் ‘டோரதி' படக்குழு| Photo Album

சாலமன் பாப்பையா: "அனாதை பிள்ளைகளாக நாங்கள் நிற்கிறோம்"- மனமுடைந்து அழுத பாரதி பாஸ்கர் மேலும் பார்க்க

DC Exclusive: "லோகேஷை நடிக்க வச்சதுக்கு காரணம் இதுதான்!" - அருண் மாதேஸ்வரன் பேட்டி

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், லோகேஷ் கனகராஜ் நடிப்பில் வெளியான 'டிசி' படத்திற்கு வசூலாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது. இப்போது சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்திற்கு படம் வந்திருக்கிறத... மேலும் பார்க்க

"ஸ்போர்ட்ஸை ஊக்குவிப்பதற்கு முயற்சிகள் எடுத்து வருகிறார்கள்!" - முதல்வர் விஜய் குறித்து அஜித்

இங்கிலாந்தில் உள்ள புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார் ஸ்போர்ட்ஸ் ரேசிங் சர்க்யூட்டில் லீ மேன்ஸ் கப் நடத்தும் கார்பந்தயத்தில் நடிகர் அஜித்குமார் பங்கேற்கிறார். முதல்வர் விஜய்அதில் தமிழ்நாடு முதல்வர் விஜ... மேலும் பார்க்க