செய்திகள் :

ஒரு மாலை இளவெயில் நேரம்! - வாக்கிங் கதைகள் | My Vikatan

post image

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல. - ஆசிரியர்

சென்னையில் இருந்து கோவைக்கு வந்த புதிதில், மாலை வேளைகளில், எங்கள் குடியிருப்பின்‌ கீழ் இருக்கும் சிறிய‌ இடத்தில் சுற்றி சுற்றி வந்து நடைப்பயிற்சி மேற்கொண்டேன். என்னால் இருபது நிமிடங்களுக்கு மேல் சுற்றி சுற்றி நடந்து வர முடியவில்லை. பார்த்த அதே நெல்லிக்காய் மரம், இரண்டு தேங்காய் மரங்கள், இரண்டு‌ மூன்று‌ பூச்செடிகள், நான்கைந்து புறா, ஒரு சோம்பேறி பூனை என சலிப்பு ஏற்பட்டது.‌ 

இதனால்  சில நாட்கள் கீழே இறங்காமலேயே இருந்தேன்.  வீடும் , நான்கு சுவர்களும் இன்னமும் வெறுப்பேற்றியது. 

வெறுப்பின் உச்சத்தில் ஒரு‌ நாள்‌ எவ்வளவு தூரம் நடக்க முடியுமோ அவ்வளவு தூரம் நடந்து வரலாம் என‌ எண்ணி, வீட்டை விட்டு வெளியே நடக்க ஆரம்பித்தேன். 

சித்தரிப்புப் படம்

அது‌ ஒரு‌ பிரதான‌ சாலை. நடக்க ஆரம்பித்தது மாலை நேரம் என்றதால், இதமான காற்று நடக்க ஏதுவாக இருந்தது. மிதமான‌ போக்குவரத்து தெருவில். 

மாலை நேர தெருக்கள் அழகுதான். பள்ளி விட்டு வீடு திரும்பும் சிறுவர்கள்.கல்லூரி மாணவர்கள், கூட்டமான பேருந்துகள் என சாலை ஓரளவு பரபரப்புடன் இருந்தது.

நடந்தே சென்றதில் கண்ணில் பட்டவை.. ஒவ்வொரு பத்தடிக்கும் ஒரு பேக்கரி, நிறைய மருந்து கடைகள் , டிபார்ட்மெண்ட்டெல் ஸ்டோர்கள், டீக்கடைகள், ரோட்டோர மலிவு உணவகங்கள், பழக்கடைகள், காய்கறி கடைகள், பூக்கடைகள் , சூப் கடை, மோமோஸ் கடை, ஐஸ்கிரீம் பார்லர்கள், சைக்களில் நின்று பருத்திப் பால் விற்பவர், பொரி கடலை விற்பவர்.. ப்ரான்டட் அழகு நிலையங்கள். பூச்செடிகள் விற்பனை செய்யும் நர்சரி... என நீளுகிறது இதுபோன்ற‌ கடைகள்.

இதற்கு மத்தியில் நகரத்தின்‌ புகழ்பெற்ற சைவ உணவகம்.. மற்றும்‌ ஸ்வீட் ஸ்டால்..பெரிய சிப்ஸ் கடை.... இவை அனைத்தும் ஒரு இருபது நிமிட நடையில் பார்த்து விடலாம். இளநீர் விற்பனையும் இதில் அடக்கம்.‌

சித்தரிப்புப் படம்

நான் வசிப்பது நகரத்தின் புறநகர்ப் பகுதியான ஒரு கடை கோடியில். ஆனால் எவ்வளவு வசதிகளை அடக்கியதாக இப்போதெல்லாம் நகரங்கள் மாறி வருகின்றன என நினைத்தபடியே நடந்து கொண்டிருக்கையில், இரண்டு மூன்று‌ கோவில்கள் வரிசையாக தென்பட்டது. கோவில்களுக்குள் சென்று‌ விட்டு , இந்த நீண்ட நடை போதும் என வந்த வழியே யு-டர்ன் எடுத்து அதே கடைகளை பார்த்தபடியே நடந்தேன்.

நாம் கடந்த சில வருடங்களில் சாப்பிடும் விஷயத்தில் எவ்வளவு மாறியிருக்கிறோம் என்பதை தெருவோரக் கடைகள் நமக்கு எடுத்துரைக்கின்றன.

வெந்தது, வேகாதது, வறுத்தது,வறுபடாதது, பொடித்தது என எதைச் செய்தாலும் அதை வாங்கிச் சாப்பிட ஒரு‌ கூட்டம்.‌ காபி‌, டீ யிலும் புதுமை..‌ காபி 2.O, bubble tea என‌ எதையோ விற்கிறார்கள். கூட்டமும்‌ அள்ளுகிறது அங்கெல்லாம்.

இங்கெல்லாம் மாலை நேரங்களில் சிறிதளவு மழை பெய்தால் போதும், ஊர் சற்று குளிர்ந்து விடும்.‌ வீசும் குளிர் காற்றுக்கு, காபியும் , டீயும், சூப்பும்‌ நன்றாகவே விற்பனையாகிறது.

Outside food ஐ avoid பண்ண வேண்டும் என‌ மருத்துவர்கள் அறைகூவல் விடுத்தாலும், கேட்பார் யாரும் இல்லை என்றே சொல்லலாம்.

சித்தரிப்புப் படம்

தினம் தினம் இந்தத் தெருவில் ஒரே‌ மாதிரியான காட்சிகளைப் பார்த்துக் கொண்டே கோவில் வரை சென்று‌ மீண்டும் வீடு திரும்பிக் கொண்டிருக்கின்றேன்.

சில நேரங்களில் நல்ல மழை, சில நேரங்களில் தூறல், பல நேரங்களில் இளவெயில் என நான்‌ நடக்கும் மாலை பொழுதுகள் தினம் ஒரு நிறத்தை சாலைக்கு அளித்தபடி இருக்கின்றது..

நடைப்பயிற்சி உடல் நிலையை சீராக வைத்துக் கொள்ள உதவுகிறது என‌ அறிவியல் கூறினாலும், உண்மையில் மனநிலையை சீர்படுத்த உதவுகிறது என்றே கூறலாம். யாருடனும் பேசாமல், earphones மாட்டிக் கொண்டு பாடல்கள் எதுவும் கேட்காமல், சாலையில் நடந்தபடியே... சாலையின்‌ ஓசைகளை கேட்டபடியே, சிறிது தூரம் நடந்து பாருங்கள்.. Life நன்றாகவே இருக்கும்..

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

my vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

`எனக்கு அப்பாவும் இல்லை, இப்போது அம்மாவும்...' - 4 நாள்கள் வீட்டுக்குள் சடலமாக கிடந்த தாய், மகன்!

தஞ்சாவூர், முனிசிபல் காலனியைச் சேர்ந்தவர் ஈஸ்வரி (59). இவரது மகன் ராகுல் (29), இவர் இன்ஜினீயரிங் முடித்துவிட்டு, சொந்தமாக தொழில் செய்து வந்தார். 17 வருடங்களுக்கு முன்பு ஈஸ்வரியின் கணவர் இறந்து விட்டா... மேலும் பார்க்க

லாஃப்ரா யாழினி ஐபிஎஸ் –அத்தியாயம் 1 | தொடர்கதை | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின்... மேலும் பார்க்க

வெடிச் சத்தமும் வீங்கிய முதுகும் - அமெரிக்க வாழ் தமிழரின் தீபாவளி நினைவுகள் | My Vikatan

பால்ய காலத்தில், பள்ளிப் பருவத்தில் தீபாவளி என்றாலே மனது குதூகலிக்கும் ஒரு நிகழ்வு. தீபாவளி என்பது தமிழர் கொண்டாடும் விழாவா? அது தேவையா? என்ற கேள்விகளெல்லாம் மனதுக்குள் தோன்றாத ஒரு காலம். எங்கள் கிராம... மேலும் பார்க்க

`ப்ளீஸ்.. குழந்தைகளை குழந்தைகளாக இருக்க விடுங்களேன்!' - 90ஸ் கிட்ஸ் வேண்டுகோள் | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின்... மேலும் பார்க்க