மதுரை: `நாம தான் ஜெயிக்கிறோம், எப்பவுமே நாம மட்டும்தான் ஜெயிக்கிறோம்'- மு.க.ஸ்டா...
பால் கேசரி; பாலக் கீரை அல்வா; கோவையில் கமகமத்த அவள் விகடன் சமையல் சூப்பர் ஸ்டார் சீசன் 3!
சக்தி மசாலா, சத்யா ஏஜென்சீஸ், நாகா, கோல்டு வின்னர், எக்சோ, அஸ்வின் ஸ்வீட்ஸ், ஆர்.கே.ஜி நெய், லலிதா ஜுவல்லரி, சௌபாக்கியா, சுப்ரீம் பர்னிச்சர், மெரிபா பன்னீர், விகடன் ப்ளே, இண்டேன், கார்த்திபுரம், ஹலோ எஃப்.எம் ஆகியவை இணைந்து வழங்கும் "அவள் விகடன் சமையல் சூப்பர் ஸ்டார் சீசன் 3" பல்வேறு மாவட்டங்களில் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது.

போட்டியின் நடுவராக தொலைக்காட்சி மற்றும் யூடியூப் பிரபலம் செஃப் தீனா பொறுப்பேற்றுள்ளார். விழுப்புரம் சேலம் திண்டுக்கல் வேலூர் ஆகிய நகரங்களைத் தொடர்ந்து இன்று (22.02.2026) கோவை காந்திபுரத்தில் உள்ள சிருஷ்டி மஹாலில் காலை 11 மணியளவில் தொடங்கி நடைபெற்றது. நிகழ்ச்சியை சிறப்புரையாற்றி குத்து விளக்கேற்றி தொடக்கி வைத்தார் நடுவர் தீனா.

கோயம்புத்தூர், மேட்டுப்பாளையம்,சத்தியமங்கலம், திருப்பூர், கேரளா ஆகிய பகுதிகளிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர். போட்டியாளர்கள் அனைவரும் சத்தான பாரம்பரிய உணவுகள் மற்றும் அவரவர் பாணியில் உருவாக்கிய தனித்துவமான உணவுகளை நடுவருக்கு காட்சிப்படுத்தி விளக்கினர்.
கருவேப்பிலை சிக்கன் தொக்கு, நெல்லிக்காய் அல்வா, பாலக்கா அல்வா, நரிப்பயிறு, சிகப்பரிசி அல்வா, ரத்தசாலி அரிசி, ரவை கேசரி, பனி வரகு பருப்பு சாதம், ஜம்பார் மிட்டாய், முடவாட்டுக்கால் சூப், மணத்தக்காளி சூப், வாழைத்தண்டு சூப், வெங்காய நெய் அடை, திருநெல்வேலி அவியல், புளி அவுள், ஆரஞ்சு தோல் கிரேவி, மா இஞ்சி ஊறுகாய், பாதாம் அல்வா, ராகி மாப்பிள்ளை சம்பா அரிசி அல்வா, ராகி நாட்டுக்கோழி பிரியாணி, 1 2 3 4 பால் பர்ஃபி, கோடி வேம்பட்டம், பச்சி மிரபகாய் கொண்டகாய், மிக்ஸ்டு வெஜ் கோக்கனட் ஸ்டீவ் சந்தகை, சீனி புளியங்காய் தூயமல்லி சாதம்.

பனங்கிழங்கு கோளா உருண்டை குழம்பு, கொள்ளு சம்பா ரவை பாயசம், வாட்டர் மெலன் சில்லி பெரட்டல், அசோகா அல்வா, கடி மிட்டு, காடை கிரீன் கிரேவி, சிக்கன் பூரி, ஓட்ஸ் மஞ்ச பூசணிக்காய் இட்லி, சோளச்சோறு, எள்ளு சீடை, கம்பு அல்வா, சோளம் லட்டு, நாட்டுக்கோழி தண்ணி குழம்பு, கரும்புச்சாறு அல்வா, நிலக்கடலை சட்னி, வெங்காய புளி சட்னி, கேரட் பீட்ரூட் சப்பாத்தி, கோதுமை சைவ ரொட்டி, புரோட்டின் சோயா கிரேவி, பால் கேசரி போன்ற பலவிதமான கமகமக்கும் உணவுகளை சமைத்துவந்து போட்டியாளர்கள் அசத்தினர். காட்சிப்படுத்தப்பட்ட உணவுகள் அனைத்தும் ருசிக்கும்படியாகவும் ரசிக்கும்படியாகவும் கண்களுக்கும் நாவிற்கும் விருந்தளித்தது. நடுவர் தீனா அனைத்து உணவுகளையும் ருசித்து பார்த்து மதிப்பெண்கள் வழங்கினார்.

இதற்கிடையில் போட்டியாளர்களை உற்சாகப்படுத்த ஸ்பான்சர்களால் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது. இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனின் (IOCL) இண்டேன் காஸ் நிறுவனத்தின் சார்பாக காஸ் சிலிண்டர் பயன்படுத்துவது தொடர்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
அனைத்து போட்டியாளர்களின் உணவுகளையும் ருசி பார்த்து மதிப்பெண் வழங்கியதன் அடிப்படையில் முதல் சுற்றில் இருந்து தேர்வான போட்டியாளர்கள் இரண்டாம் சுற்றான "லைவ் குக்கிங்" போட்டிக்குத் தேர்வு செய்யப்பட்டனர்.


















