செய்திகள் :

தள்ளிப்போகும் பேச்சுவார்த்தை; இந்தியா - அமெரிக்கா ஒப்பந்தத்தில் சுணக்கம்?

post image

கடந்த 2-ம் தேதி, இந்தியா - அமெரிக்கா ஒப்பந்தம் அறிவிப்பை வெளியிட்டார்கள் இந்திய பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர்‌ ட்ரம்ப்.

இந்த ஒப்பந்தம் மார்ச் மாதம் கையெழுத்திடப்பட்டு, வரும் ஏப்ரல்‌ மாதம் முதல் அமலுக்கு வரும் என்று கூறப்பட்டது.

தற்போது இந்திய பொருள்களுக்கு அமெரிக்காவில் 50 சதவிகிதம் வரி விதிக்கப்படுகிறது.

இந்த ஒப்பந்தம் அமலாகும் போது, அது 18 சதவிகிதம்‌ ஆக குறையும்.

ஆக, இந்த ஒப்பந்தம் இந்தியாவிற்கு மிகப் பெரிய ஹேப்பி நியூஸாக இருந்தது.

ட்ரம்ப்
ட்ரம்ப்

ஆனால், இந்த ஹேப்பி நியூஸ் தற்போது சுணங்கி உள்ளது.

ஆம்... ஒப்பந்தம் குறித்த அடுத்தகட்ட பேச்சுவார்த்தையை நடத்த இந்திய அதிகாரிகள் நாளை அமெரிக்கா செல்ல இருந்தனர்.

இந்தச் சந்திப்பு தற்போது தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இதற்கு இரண்டு முக்கிய காரணங்கள்...

ஒன்று, 'அதிகாரத்தை மீறி ட்ரம்ப் உலக நாடுகளின்‌ மீது வரி விதித்துள்ளார்' என்று வரிகளை ரத்து செய்துள்ளது அமெரிக்க நீதிமன்றம்.

இன்னொன்று, ட்ரம்ப் வருகிற‌ 24-ம் தேதி முதல், உலக நாடுகளின்‌ மீது 15 சதவிகிதம்‌ வரி விதித்துள்ளார். அடுத்த சில மாதங்களில், ஒவ்வொரு‌ நாட்டிற்கும்‌ ஏற்ப சட்டத்திற்கு உட்பட்டு‌ வரி அறிவிக்கப்படும்‌ என்று தெரிவித்துள்ளார்.

அதனால், இனி அனைத்து‌ நாடுகளின் வரியின் அளவுகள் மாற உள்ளது. அதைப் பொறுத்து அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தையை எடுத்துச் செல்லலாம் என்று நாளைய சந்திப்பு ஒத்தி வைக்கப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

"குருவாயூரப்பனை சேவித்துக்கொண்டே நான் இறக்க வேண்டும்" - சுரேஷ் கோபி

கேரள மாநிலம் கொச்சியில் ஓர் ஆங்கில பத்திரிகையின் (தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்) விருது வழங்கும் விழா நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட மத்திய அமைச்சரும் நடிகருமான சுரேஷ் கோபி பேசுகையில், "குருவாயூர் தேவசம்... மேலும் பார்க்க

"நாங்கள் திமுகவிடம் 5 தொகுதிகளை கேட்டோம், ஆனால் எங்களுக்கு"- முஸ்லீம் லீக் காதர் மொகிதீன்

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தொகுதி பங்கீட்டுக் குழுவுடனான பேச்சுவார்த்தைக்குப் பின் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொகிதீன் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார். "திமுக கூட்டணியை மேலும் வலுப்ப... மேலும் பார்க்க

TVK : 'விஜய் பெரம்பூரில் போட்டி; தீர்மானம் போட்ட ஆதவ்; ஆமோதித்த ஆனந்த்!

தவெக தலைவர் விஜய் பெரம்பூர் தொகுதியில் போட்டியிடுவார் என கட்சி வட்டாரத்தில் பேசப்பட்டு வரும் நிலையில், முகூர்த்த நாளான இன்று பெரம்பூர் தொகுதியில் செயல் வீரர்கள் கூட்டத்தை நடத்தி தேர்தல் வேலைகளை தொடங்க... மேலும் பார்க்க

TVK : பெரம்பூர் தொகுதியில் போட்டியிடும் விஜய்!' - செயல்வீரர்கள் கூட்டத்தில் உறுதி செய்த நிர்வாகிகள்?

தவெக தலைவர் விஜய் பெரம்பூர் தொகுதியில் போட்டியிடுவார் என கட்சி வட்டாரத்தில் பேசப்பட்டு வரும் நிலையில், முகூர்த்த நாளான இன்று பெரம்பூர் தொகுதியில் செயல் வீரர்கள் கூட்டத்தை நடத்தி தேர்தல் வேலைகளை தொடங்க... மேலும் பார்க்க

“மக்கள் போற்றும் மகத்தான தலைவர் அவர்.!"- மனதின் குரல் நிகழ்ச்சியில் ஜெயலலிதாவை புகழ்ந்த மோடி

'ஜெயலலிதா மக்கள் போற்றும் மகத்தான தலைவர்' என பிரதமர் நரேந்திர மோடி மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை புகழ்ந்து பேசியிருக்கிறார். 'மனதின் குரல்' வானொலி நிகழ்ச்சியில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா... மேலும் பார்க்க

SIR: சிறப்பு வாக்காளர் திருத்தப் பணிகள் நிறைவு; நாளை வெளியாகும் இறுதி வாக்காளர் பட்டியல்!

கடந்தாண்டு பீகார் தேர்தலை முன்னிட்டு பீகாரில் ஏராளமான குழப்பங்களுடன் சிறப்பு வாக்காளர் திருத்தப் பணிகள் நடத்தி முடிக்கப்பட்டது. அதில் சுமார் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டனர். அதைத் தொடர்ந... மேலும் பார்க்க