செய்திகள் :

"குருவாயூரப்பனை சேவித்துக்கொண்டே நான் இறக்க வேண்டும்" - சுரேஷ் கோபி

post image

கேரள மாநிலம் கொச்சியில் ஓர் ஆங்கில பத்திரிகையின் (தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்) விருது வழங்கும் விழா நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட மத்திய அமைச்சரும் நடிகருமான சுரேஷ் கோபி பேசுகையில், "குருவாயூர் தேவசம் போர்டின் தலைவராகி குருவாயூரப்பனை சேவித்துக்கொண்டே நான் இறக்க வேண்டும் என்பதுதான் எனது மிகப்பெரிய ஆசை. அதைத்தாண்டி நான் வேறு எதுவும் விரும்பவில்லை. இப்போது நான் இருக்கும் நிலை எனது ஆசை அல்ல. இதைச்சொல்வதில் எந்த தவறும் இல்லை என நினைக்கிறேன். இல்லையென்றால், வட இந்தியாவில் உள்ள செய்தி நிறுவனங்கள் 'சுரேஷ் கோபி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு குருவாயூர் தேவசம் போர்டு தலைவராகப் போய்விட்டார்' என்று கிளப்பிவிட்டுவிடுவார்கள். ஒருவிதத்திலும் வாழமுடியாத நிலை ஆகிவிட்டது. என் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்திய பல பெண்கள் இருக்கிறார்கள். அது என் பாட்டியிடம் இருந்து தொடங்குகிறது. என் பாட்டி சுவையான மற்றும் சத்தான உணவை சமைத்துக் கொடுத்தார். பின்னர் அதை என் அம்மா ஏற்றுக்கொண்டார். திருமணத்திற்குப் பிறகு என் சக்தியாக மனைவி ராதிகா உள்ளார்.

நிகழ்ச்சியில் பேசிய சுரேஷ் கோபி

பிள்ளைகளை வளர்ப்பதில் என் மனைவி ராதிகா முக்கிய பங்குவகித்தார். அதை எல்லாம் நான் முக்கிய விஷயமாக பார்க்கிறேன். என் வருமான கணக்குகளை பார்த்தால் என் மனைவிக்கு நான் அளிக்கும் முக்கியத்துவம் உங்களுக்கு தெரியவரும். எனக்கு ஒரு பிளாட் இருக்கிறது என்றால், அதில் ஒரு தளம் என் பெயரிலும், அடுத்த தளம் என் மனைவி பெயரிலும் இருக்கும். எனது சொத்துக்களில் பாதி என் மனைவி பெயரில் இருக்கும். என் பெயரில் ஒரு சொத்து இருந்தால், என் மனைவி ராதிகா பெயரில் இரண்டு சொத்துக்கள் இருக்க வேண்டும் என நினைப்பவன் நான்.

சுரேஷ்கோபி

மத்திய அமைச்சர் பதவியைத் தவிர, மற்ற எல்லா ஆவணங்களிலும் என் மனைவிக்கு சமமான பங்கு அளிக்கும் வகையில் நான் ஒரு தெளிவான கோட்டை ஏற்படுத்தி உள்ளேன். அந்தக் கோடு என் இதயத்திலும் உள்ளது. அரசியல் ஆர்வலராக மாறுவதற்கான தகுதி நேர்மையாகும். இந்தத் தகுதி நமக்கு இருந்தால், நம் எதிரிகள் நம்மைப் பார்த்து பயப்படுவார்கள்" என்றார்.

"நாங்கள் திமுகவிடம் 5 தொகுதிகளை கேட்டோம், ஆனால் எங்களுக்கு"- முஸ்லீம் லீக் காதர் மொகிதீன்

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தொகுதி பங்கீட்டுக் குழுவுடனான பேச்சுவார்த்தைக்குப் பின் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொகிதீன் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார். "திமுக கூட்டணியை மேலும் வலுப்ப... மேலும் பார்க்க

தள்ளிப்போகும் பேச்சுவார்த்தை; இந்தியா - அமெரிக்கா ஒப்பந்தத்தில் சுணக்கம்?

கடந்த 2-ம் தேதி, இந்தியா - அமெரிக்கா ஒப்பந்தம் அறிவிப்பை வெளியிட்டார்கள் இந்திய பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர்‌ ட்ரம்ப்.இந்த ஒப்பந்தம் மார்ச் மாதம் கையெழுத்திடப்பட்டு, வரும் ஏப்ரல்‌ மாதம் முதல் அமலுக்க... மேலும் பார்க்க

TVK : 'விஜய் பெரம்பூரில் போட்டி; தீர்மானம் போட்ட ஆதவ்; ஆமோதித்த ஆனந்த்!

தவெக தலைவர் விஜய் பெரம்பூர் தொகுதியில் போட்டியிடுவார் என கட்சி வட்டாரத்தில் பேசப்பட்டு வரும் நிலையில், முகூர்த்த நாளான இன்று பெரம்பூர் தொகுதியில் செயல் வீரர்கள் கூட்டத்தை நடத்தி தேர்தல் வேலைகளை தொடங்க... மேலும் பார்க்க

TVK : பெரம்பூர் தொகுதியில் போட்டியிடும் விஜய்!' - செயல்வீரர்கள் கூட்டத்தில் உறுதி செய்த நிர்வாகிகள்?

தவெக தலைவர் விஜய் பெரம்பூர் தொகுதியில் போட்டியிடுவார் என கட்சி வட்டாரத்தில் பேசப்பட்டு வரும் நிலையில், முகூர்த்த நாளான இன்று பெரம்பூர் தொகுதியில் செயல் வீரர்கள் கூட்டத்தை நடத்தி தேர்தல் வேலைகளை தொடங்க... மேலும் பார்க்க

“மக்கள் போற்றும் மகத்தான தலைவர் அவர்.!"- மனதின் குரல் நிகழ்ச்சியில் ஜெயலலிதாவை புகழ்ந்த மோடி

'ஜெயலலிதா மக்கள் போற்றும் மகத்தான தலைவர்' என பிரதமர் நரேந்திர மோடி மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை புகழ்ந்து பேசியிருக்கிறார். 'மனதின் குரல்' வானொலி நிகழ்ச்சியில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா... மேலும் பார்க்க

SIR: சிறப்பு வாக்காளர் திருத்தப் பணிகள் நிறைவு; நாளை வெளியாகும் இறுதி வாக்காளர் பட்டியல்!

கடந்தாண்டு பீகார் தேர்தலை முன்னிட்டு பீகாரில் ஏராளமான குழப்பங்களுடன் சிறப்பு வாக்காளர் திருத்தப் பணிகள் நடத்தி முடிக்கப்பட்டது. அதில் சுமார் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டனர். அதைத் தொடர்ந... மேலும் பார்க்க