செய்திகள் :

`சங்குப்பூ இட்லி, வாழைப்பூ அதிரசம், இன்னும் பல...!' - திண்டுக்கலை மணக்கவைத்த சமையல் சூப்பர் ஸ்டார்

post image

சக்தி மசாலா, சத்யா ஏஜென்சீஸ், நாகா, கோல்டு வின்னர், எக்ஸோ, அஸ்வின் ஸ்வீட்ஸ், ஆர்.கே.ஜி நெய், லலிதா ஜுவல்லரி, சௌபாக்யா, சுப்ரீம் ஃபர்னீச்சர், இந்தியன் ஆயில், மெரிபா பன்னீர், விகடன் பிளே, ஹலோ எஃப்.எம் ஆகியவை இணைந்து வழங்கும் `அவள் விகடன் சமையல் சூப்பர் ஸ்டார் சீசன்-3’ போட்டிகள் பல்வேறு மாவட்டங்களில் சிறப்பாக நடத்தப்பட்டு வருகின்றன. போட்டியின் நடுவராக, தொலைக்காட்சி மற்றும் யூடியூப் பிரபலம் செஃப் தீனா பொறுப்பேற்றுள்ளார்.

விழுப்புரம், புதுச்சேரி, வேலூர் மற்றும் சேலம்  மாவட்டத்தை தொடர்ந்து இன்றைய தினம் இப்போட்டி திண்டுக்கலில்  நாகல் நகர், NVGB ஹால் ரோடு பகுதியில் உள்ள தி ஸ்வாகத் கிராண்ட் பை ஜூவட் ரீஜென்சி மஹாலில் காலை 10 மணி அளவில் தொடங்கியது.

இந்நிகழ்வை நடுவர் தீனா குத்துவிளக்கு ஏற்றி துவங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து அவர் போட்டிக்கான விதிமுறைகளையும், போட்டியின் நோக்கத்தையும் பற்றி பேசினார்.

சமையல் சூப்பர் ஸ்டார்

தம்ஸ் அஃப் காட்டி களத்தில் இறங்கிய போட்டியாளர்கள்!

இந்த நிகழ்வில்  வேடசந்தூர், செம்பட்டி, நத்தம், கொசவப்பட்டி, மேட்டுப்பட்டி, செட்டிநாயக்கன்பட்டி, வெள்ளோடு ஆகிய திண்டுக்கல் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து மொத்தம் 125  போட்டியாளர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் என எல்லா வயதினரும் வருகை புரிந்திருந்தனர். விதிமுறைப்படி முதல் சுற்றுக்கு வீட்டிலிருந்தே பல்வேறு வகையான உணவுபொருட்களை  போட்டியாளர்கள் சமைத்து எடுத்து வந்திருந்தனர்.

தக்காளி அல்வா, நெல்லிக்காய் லேகியம், வெற்றிலை பாயசம், பீட்ரூட் அல்வா, வாழை பூ பிரியாணி, சிவப்பரிசி புட்டு, பூவாழை புட்டு, சங்குப்பூ தேங்காய் பால் இட்லி, சைவ ஈரல் குழம்பு, பனங்கிலங்கு பொரியல், நெல்லிக்காய் மோர், வெற்றிலை லட்டு, கவுனி அரிசி கொழுக்கட்டை, சைவ மீன் குழம்பு, சிறு கீரை சாதம், ஓமவள்ளி பக்கோடா, வரகு நேச்சோள், ராகி சிமிலி, கம்பு டேக்கோள், சங்குப்பூ சர்பத், கவுனி லட்டு, பலாக்காய் பிரியாணி, முருங்கைக் கீரை வெஜ் ஆம்லெட்.

சமையல் சூப்பர் ஸ்டார்

கதம்பம் புட்டு, சங்குப்பூ சர்பத், கம்பு ரவை பாயாசம், முளைக்கட்டிய தானிய பர்கர், எள்ளு உருண்டை, சுக்கு களி, கருப்பட்டி ஆப்பம், சுரக்காய் அடை, வரகு பொங்கல், சொதி, வாழைப்பூ வடை, இளநீர் பாயாசம்,  கருப்பு கவுனி அக்காரவடிசல், மட்டன் மந்தி மீன் தித்திப்பு, சிக்கன் கொண்டாட்டம், மட்டன் கோதுமை நோன்பு கஞ்சி, இரத்தசாலி முறுக்கு, வாழைப்பூ அதிரசம், கருங்குறுவை பணியாரம், பூங்கார் சந்தகை, மாப்பிள்ளை சம்பா புட்டு, காட்டுயானம் கஞ்சி, தூய மல்லி சாதம் என மணமும் சுவையும் நிறைந்து காணப்பட்டது

திண்டுக்கல்லை சேர்ந்த நான்கு வயது சிறுவன் ஆதீஷ் போட்டியில் கலந்துகொண்டு அவன் செய்த பனானா பாப் (banana pop) ரெசிபியை மழலை மொழியில் சொல்ல நடுவர் தீனா அவர்களும் ஆர்வமுடன் கேட்டு ரசித்தார்.

சமையல் சூப்பர் ஸ்டார்

போட்டியாளர்களை உற்சாகப்படுத்துவதற்காக இடையிடையே ஸ்பான்சர்களால் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசு பொருட்களும் வழங்கப்பட்டது. ரெசிபியோடு சேர்த்து உணவுப் பொருட்களின் நன்மைகளையும் விளக்கிய போட்டியாளர்களின் ஒவ்வொரு உணவையும் ருசித்து பார்த்து மதிப்பெண்களை வழங்கினார் செஃப் தீனா. முதல் போட்டியில் தேர்வான போட்டியாளர்கள் இரண்டாவது சுற்று "லைவ் குக்கிங்" போட்டிக்கு தகுதியானார்கள். புதிய சிந்தனைகளும் புதுமையான சமையல் முறைகளும் கலந்து, இப்போட்டி அனைவருக்கும் ஒரு இனிய அனுபவமாக அமைந்தது.

சேலத்தில் சமையல் சூப்பர் ஸ்டார்: விதவிதமான ரெசிபிக்கள்; சுண்டி இழுத்த சுவை! இறுதிப் போட்டியில் மூவர்

சக்தி மசாலா, சத்யா ஏஜென்சீஸ், அவள் விகடன், நாகா, கோல்டு வின்னர், எக்ஸோ, அஸ்வின் ஸ்வீட்ஸ், ஆர்.கே.ஜி நெய், லலிதா ஜுவல்லரி, சௌபாக்யா, சுப்ரீம் ஃபர்னீச்சர், இன்டேன், மெரீபா பன்னீ்ர், ஹே கிளாதிங், விகடன் ... மேலும் பார்க்க

புதுச்சேரி: ஆளி விதை களி, கேழ்வரகு லாமிங்டன் கேக்… ருசியில் மிரட்டி முந்திய மூன்று அரசிகள்

'உங்கள் சமையல் திறமைக்கான சவால் மேடை!' என்ற தலைப்பில் விழுப்புரம், புதுச்சேரி, வேலூர், சேலம், கோயம்புத்தூர், திண்டுக்கல், மதுரை, திருநெல்வேலி, திருச்சி, ஈரோடு, சென்னை தெற்கு, சென்னை வடக்கு உள்ளிட்ட 12... மேலும் பார்க்க

முசுமுசுக்கை அடை டு பலாக்கொட்டை லட்டு; புதுச்சேரியை மணக்க வைத்த அவள் விகடன் சமையல் சூப்பர் ஸ்டார்

'உங்கள் சமையல் திறமைக்கான சவால் மேடை!' என்ற தலைப்பில் விழுப்புரம், புதுச்சேரி, வேலூர், சேலம், கோயம்புத்தூர், திண்டுக்கல், மதுரை, திருநெல்வேலி, திருச்சி, ஈரோடு, சென்னை தெற்கு, சென்னை வடக்கு உள்ளிட்ட 12... மேலும் பார்க்க

விழுப்புரம்: அணிவகுத்த பாரம்பர்ய உணவுகள்; சமையல் சூப்பர் ஸ்டார் போட்டியில் மகுடம் சூடிய மூவர்!

பெண்களின் முன்னேற்றத்திற்கு உற்ற துணையாக, வழிகாட்டியாக இருக்கும் அவள் விகடன், அவர்களின் திறமைகளை வளர்த்துக்கொள்வதற்காக பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக தற்போது சக்தி மசாலாவுடன் ... மேலும் பார்க்க

ராகி ப்ரௌனி டு பிரண்டை வத்தல்.! பிரமாண்டமாக துவங்கிய `அவள் விகடன் சமையல் சூப்பர் ஸ்டார்' சீசன் 3

அவள் விகடன் சக்தி மசாலாவுடன் இணைந்து வழங்கும் `சமையல் சூப்பர் ஸ்டார் சீசன் 3’ விழுப்புரம் ஹமித்ரா மஹாலில் பிரம்மாண்டமாக தொடங்கியது. `உங்கள் சமையல் திறமைக்கான சவால் மேடை!’ என்ற தலைப்பில் புதுச்சேரி, வே... மேலும் பார்க்க