செய்திகள் :

கருணாநிதி குடும்ப நிச்சயதார்த்தம்! - முதல்வர் ஸ்டாலினின் அமிர்தம் மாமா இல்ல விழா!

post image

முதல்வர் மு.க. ஸ்டாலினின் மாமாவும், மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் மூத்த சகோதரியின் மகனுமான அமிர்தத்தின் பேத்தி இலக்கியா - டாக்டர். கிரிதரா திருமண நிச்சயதார்த்தம் நாளை சென்னையில் நடைபெற உள்ளது. முதல்வர் உள்ளிட்ட கருணாநிதி குடும்பத்து உறவுகள் அனைவரும் கலந்து கொள்வார்களென எதிர்பார்க்கப்படுகிறது.

கருணாநிதியின் மருமகனும் கலைஞர் தொலைக்காட்சியில் முக்கியப் பொறுப்பில் இருந்தவருமான அமிர்தம் - வசந்தா தம்பதியின் மகள் வழிப் பேத்தி இலக்கியா. தமிழ்நாடு உணவுப் பாதுகாப்புத் துறையில் உயரதிகாரியாக இருக்கும் சதீஷ்குமாரின் மகள்.

இவருக்கு டாக்டர் கிரிதரா என்பவருடன் திருமணம் நிச்சயிக்கப் பட்டிருக்கிறது. இருவருக்கிடையிலும் காதல் மலர்ந்து அது இரு வீட்டுத் தரப்பிலும் ஏற்றுக் கொள்ளப்பட, பெரியவர்கள் சம்மதத்துடன் நாளை நடக்கவிருக்கிறது நிச்சயதார்த்த நிகழ்ச்சி.

ஸ்டாலின்
ஸ்டாலின்

சென்னை அண்ணா சாலையில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டலில் நாளை மாலை நடக்கவிருக்கும் இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி உள்ளிட்ட கலைஞர் கருணாநிதி குடும்ப உறவுகள் எல்லோரும் கலந்து கொள்ள இருப்பதாக தெரியவருகிறது.

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அமிர்தம் மீது எப்போதுமே தனிப் பிரியம் உண்டு. 'அப்பாவிடம் கூட அடி வாங்கியது கிடையாது, ஆனால் அமிர்தம் மாமாவிடம் அடி வாங்கியிருக்கிறேன். அதனால் எப்போதும் அவரிடம் ஒரு பயம் உண்டு. அந்தளவுக்கு கண்டிப்போடு வளர்த்தவர்' என அமிர்தம் குறித்து அவர் முன்பொருமுறை அவர் பேசியது நினைவிருக்கலாம்.

இலக்கியா - கிரிதரா ஜோடியின் திருமண தேதி பின்னர் அறிவிக்கப்படுமென்கிறார்கள்.

'டார்கெட் சவுத்' - ஆதவ்க்கு சென்னை; கொங்குக்கு செங்கோட்டையன்! - தேர்தல் பொறுப்பை ஒப்படைத்த விஜய்!

சட்டப்பேரவை தேர்தலுக்கான வேலைகள் பரபரக்க தொடங்கியிருக்கும் நிலையில், தவெக சார்பில் தேர்தல் கண்காணிப்பாளர்களை நியமித்து உத்தரவிட்டிருக்கிறார் விஜய். TVK Vijay - தவெக விஜய்தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்கள... மேலும் பார்க்க

`தனியாக கட்சி துவக்கலாமா?' ஆலோசனை நடத்திய எம்.பி - அதிர்ச்சியில் காங்கிரஸ் தொண்டர்கள்!

“காங்கிரஸ் டெல்லி தலைமை அறிவிக்கும் வரை யாரும் கூட்டணி குறித்து ஏதும் பேசக்கூடாது” என காங்கிரஸ் மேலிட எச்சரிக்கைக்கு பிறகு, கூட்டணி குறித்த சர்ச்சை ஒய்ந்து, இப்போது தனிகட்சி சர்ச்சை ஆரம்பித்துள்ளது என... மேலும் பார்க்க

ட்ரம்பின் கருத்து: `மீண்டும் ஒருமுறை சரணாகதிதான்" - பிரதமர் மோடியை சாடும் ராகுல் காந்தி

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உலக நாடுகளுக்கு விதித்த வரிகளுக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்குப் பிறகு, அமெரிக்க நீதிமன்றம், ``வரி விதிக்க நிர்வாகிகளுக்கு எந்த ... மேலும் பார்க்க

``ஸ்டாலின் எவ்வளவு இடம் கொடுத்தாலும் அது நமக்குப் போதும்; ஏன்னா.!’’ - மணி சங்கர் அய்யர் அதிரடி

மணி சங்கர் அய்யர் ஸ்டாலின் எவ்வளவு சீட் கொடுத்தாலும் அது நமக்குப் போதும். ஏனென்றால் அந்த அளவுக்குதான் நம்மால் ஜெயிக்க முடியும். ஆனால், இவர்கள் என்ன கனவு காண்கிறார்கள்? நடிகருடன் சென்றால் நமக்கு 100 இட... மேலும் பார்க்க

1957: `திரைக்கவர்ச்சி' என திமுகவை விமர்சித்த காங்., - திராவிட இயக்கத்தின் அரசியல் உதயம்! | ஆடுபுலி 6

1957 அரசியல் களம்அரசியல் ஆடுபுலி 06`தமிழ்நாட்டிற்கும், தேசிய ஜனநாயக் கூட்டணிக்கும் இடையேதான் போட்டி' என்று திமுக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசினார் திமுக தலைவர் ஸ்டாலின்.`நடிகர்கள் பின்னால் திரளும் கூட்... மேலும் பார்க்க