செய்திகள் :

’கட்சிப் பதவி வழங்குவதாகக் கூறி பணம் வாங்கி மோசடி’ - கோவை தவெக நிர்வாகி மீது பரபரப்பு புகார்

post image

கோவை கலிக்கநாயக்கன்பாளையம் பகுதியில் மகாராஜன் என்பவர் இருசக்கர வாகன விற்பனை ஷோரூம் நடத்தி வருகிறார். இவரது மனைவி திவ்யா. சமீபத்தில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த மகாராஜன், கட்சியின் பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் கட்சிப் பணிகளில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இதனிடையே த.வெ.க-வின் வேடபட்டி நகரச் செயலாளர் பிரகாஷ், மகாராஜனின் ஷோரூமில் இருந்து பணம் கொடுத்து இருசக்கர வாகனம் ஒன்றை வாங்கியுள்ளார். அப்போது, மகாராஜனுக்கு கட்சியில் இளைஞரணி பொறுப்பாளர் பதவி வழங்குவதாகக் கூறி, அவரிடம் ஒரு லட்சம் ரூபாய் பணத்தை பிரகாஷ் பெற்றதாகக் கூறப்படுகிறது.

ஆனால், பணம் பெற்றுக்கொண்ட பிறகும் கட்சியில் எந்தப் பொறுப்பும் வழங்கப்படாததால், தான் கொடுத்த பணத்தைத் திருப்பித் தருமாறு மகாராஜன் கேட்டுள்ளார். இதற்கு பிரகாஷ் தரப்பில் உரிய பதில் அளிக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனிடையே, தான் வாங்கிய இருசக்கர வாகனத்தின் பதிவுப் பணிகளுக்காக அந்த வாகனத்தை மகாராஜனின் ஷோரூமில் பிரகாஷ் ஒப்படைத்துள்ளார். 

மகாராஜன்
மகாராஜன்

அப்போது, பதவி கொடுப்பதாக ஏற்கெனவே பெற்ற பணத்தைத் திருப்பிக் கொடுத்தால் மட்டுமே வாகனத்தை ஒப்படைக்க முடியும் என மகாராஜன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனால் இரு தரப்பினருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் கடந்த 14ம் தேதியன்று பிரகாஷ் மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த மேலும் இருவர் ஷோரூமிற்கு வந்துள்ளனர். அப்போது மகாராஜன் அங்கு இல்லாத நிலையில், அவரது மனைவி திவ்யா மட்டும் இருந்துள்ளார். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

பிரகாஷ் ஷோரூமில் இருந்த இருசக்கர வாகனங்களைத் தள்ளிவிட்டு ரகளையில் ஈடுபட்டதால் ஆத்திரமடைந்த திவ்யா, பிரகாஷை ஷோரூமில் இருந்து வெளியேறுமாறு வலியுறுத்தியுள்ளார். 

மேலும், ’த.வெ.க நிர்வாகி என்றால் என்ன வேண்டுமானாலும் செய்யலாமா?’ என்றும், கட்சிப் பதவி வழங்குவதாகக் கூறி லஞ்சம் பெற்றது குறித்தும் சரமாரியாகக் கேள்வி எழுப்பியுள்ளார். ஆனால், அங்கிருந்து பிரகாஷ் வெளியேற மறுத்த நிலையில், அங்கு நடைபெற்ற வாக்குவாதத்தை திவ்யா தனது செல்போனில் வீடியோவாகப் பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

திவ்யா
திவ்யா

இதுகுறித்து திவ்யா கூறுகையில், “நாங்கள் எந்த அரசியல் கட்சியையும் சேர்ந்தவர்களும் இல்லை. எனது கணவர் த.வெ.க கட்சிப் பணிகளில் ஆர்வத்துடன் ஈடுபட்ட நிலையில், அவருக்கு பதவி வழங்குவதாகக் கூறி பணம் பெற்றுக்கொண்டு ஏமாற்றிவிட்டனர். இந்தப் பிரச்னைக்குப் பிறகு சமூக வலைத்தளங்களில் என்னையும் எனது கணவரையும் மிகவும் தரக்குறைவாக விமர்சித்து வருகின்றனர். உண்மை என்னவென்று தெரியாமல் சமூக வலைத்தளங்களில் என்னைக் கொச்சைப்படுத்த வேண்டாம்” எனக் கண்ணீர் மல்கத் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து பேசிய மகாராஜன், “கட்சிப் பதவி வழங்குவதாகக் கூறி என்னிடம் பணம் பெற்றது தொடர்பாக கோவை மாவட்டப் பொறுப்பு அமைச்சர் சம்பத்குமாரிடம் புகார் அளித்தேன். அவர் இது குறித்து விசாரிக்க சொன்னார். தொடர்ந்து, த.வெ.க மாவட்டச் செயலாளர் ராஜ்குமார் மற்றும் தொண்டாமுத்தூர் ஒன்றியச் செயலாளர் வெள்ளைச்சாமி ஆகியோரிடம் கூறினேன்.

ஆனால், எனது புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மாறாக எங்களையே குற்றம்சாட்டி மிரட்டுகின்றனர். தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்ததற்குத் தண்டனை அனுபவிப்பதைப் போன்ற சூழல் ஏற்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.

'என் வீட்டுல 22 வருசமா வேலை பார்க்குறாங்க'- பணிப்பெண்ணை விஜய்யிடம் அறிமுகப்படுத்திய பிரியங்கா காந்தி

டெல்லியில் நேற்று (16.11.2026) நடைபெற்ற சோனியா காந்தியின் சுயசரிதை புத்தக வெளியீட்டு விழாவில், தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் விருந்தினராக கலந்துகொண்டிருந்தார். அப்போது விஜய்யைச் சந்தித்த பிரியங்கா காந்த... மேலும் பார்க்க

SIR: `உ.பி-யில் 1.27 கோடி இந்து வாக்காளர்களின் பெயர்கள் நீக்கம்'- விளக்கம் கேட்ட யோகி ஆதித்யநாத்!

வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு (SIR) பிறகு உத்தரப்பிரதேச மாநில வாக்காளர் பட்டியலில் இந்து வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாக அந்த மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். இது ... மேலும் பார்க்க

கோவை: பெண்ணிடம் தகராறு செய்த தவெக நிர்வாகி – கட்சியில் இருந்து அதிரடி நீக்கம்!

கோவை கலிக்கநாயக்கன்பாளையம் பகுதியில் மகாராஜன் என்பவர் இருசக்கர வாகன விற்பனை ஷோரூம் நடத்தி வருகிறார். இவரது மனைவி திவ்யா. சமீபத்தில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த மகாராஜன், கட்சியின் பல்வேறு நிகழ்ச்ச... மேலும் பார்க்க

இஸ்ரேல் அதிபராக தொடர நெதன்யாகுவின் ஐடியா; ஒத்துழைக்காத எதிர்க்கட்சி! இன்னும் எத்தனை நாள் கெடு?

இஸ்ரேலில் தேர்தல் முடிவுகள் வந்து கிட்டத்தட்ட இரண்டு வாரங்கள் ஆகிவிட்டன. ஆனால், அந்த நாட்டில் இன்னும் யாரும் ஆட்சி அமைக்கவில்லை.பெரும்பான்மை பெறாத இஸ்ரேல் கட்சிகள்இஸ்ரேல் நாடாளுமன்றம் நெசட்டில் பெரும்... மேலும் பார்க்க

கள்ளக்குறிச்சி எம்எல்ஏ விவகாரம்: `இதே எடப்பாடியாராக இருந்திருந்தால்...'- அதிமுக பா.வளர்மதி பேச்சு

தவெக கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் மாவட்ட ஆட்சியருக்கு குறுஞ்செய்தி அனுப்பியதாக வெடித்திருக்கும் விவகாரம், பெரும் சர்ச்சையாகி இருக்கும் நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்ட அதிமுக மகளிர் அணி சார்பில் ... மேலும் பார்க்க

'மன்மோகன் சிங்கை பிரதமர் பதவியிலிருந்து நீக்க கோரிய பிரணாப் முகர்ஜி!' - என்ன சொல்கிறார் சோனியா?

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான சோனியா காந்தி 'Belonging' என்ற பெயரில் சுயசரிதை நூலை எழுதியிருக்கிறார். அதில் அவர் அரசியல்ரீதியாக குறிப்பிட்டிருக்கும் சில சம்பவங்கள் சர்ச்சையை கிளப்பியிருக்கிறது. கு... மேலும் பார்க்க