செய்திகள் :

`கனத்த இதயத்துடன்...' - சின்னத்திரை நடிகர் சங்க செயலாளர் நவீந்தர் திமுகவிலிருந்து வெளியேறியது ஏன்?

post image

திமுக-வில் தலைமைக் கழகப் பேச்சாளராகவும் சின்னத்திரை நடிகர் சங்கத்தில் செயலாளராகவும் இருக்கும் நடிகர் நவீந்தர் திமுகவிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

நாதஸ்வரம், அழகு உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்தவர் நடிகர் நவீந்தர். தற்போது சின்னத்திரை நடிகர் சங்கத்தின் செயலாளராகவும் இருந்து வருகிறார்.

அடிப்படையில் இவரது குடும்பத்தினர் திமுக அனுதாபிகள். இவரும் கடந்த ஆட்சிக் காலத்தில் அமைச்சர் அன்பில் மகேஷுடன் பயணித்து வந்தார்.

மேலும் கடந்த காலங்களில் திமுகவுக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரத்திலும் ஈடுபட்டிருக்கிறார்.

இந்த நிலையில், இன்று தன் மனதில் எழுந்த சில மாற்றங்களைத் தொடர்ந்து திமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அத்தனை பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக தெரிவித்துள்ளார்.

திமுக கொடி
திமுக

நவீந்தரிடம் பேசியபோது,

``அம்பேத்கர், காமராசர், பெரியார், அண்ணா ஆகிய தலைவர்களின் பாதையில் பயணித்து புது இயக்கத்தைத் தொடங்கலாம்னு இருக்கேன். படிக்கிற போது மாணவர் பேரவைத் தேர்தல், சின்னத்திரை சங்கம்னு தேர்தல் அனுபவங்கள் ஏற்கெனவே கொஞ்சம் இருக்கு. என் சொந்த ஊர் செங்கல்பட்டு. அதனால் இப்ப திமுக-விலிருந்து கனத்த இதயத்தோடு வெளியேறுகிற அதேநேரம்... என் பகுதி மக்களுக்குச் சேவை செய்யறதுங்கிற அடுத்த கட்ட நகர்வையும் முன்னெடுக்கலாம்னு இருக்கேன்.

அதனால் விரைவில் நடக்கவிருக்கிற மதுராந்தகம் இடைத்தேர்தல்ல சுயேச்சை வேட்பாளரா போட்டியிடறதுனு முடிவு செய்திருக்கேன்.

புதிய அமைப்பு குறித்து சீக்கிரமே அறிவிக்கறேன்'' என்கிறார்.

Bigg Boss Tamil 10: சீசனின் முதல் ஆளாக வெளியேறினார் பிளாக் பாண்டி! - காரணம் என்ன?

விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 10, 19 போட்டியாளர்கள் கலந்து கொள்ள, கடந்த 6ம் தேதி அமர்க்களமாகத் தொடங்கியது.எந்த சீசனிலும் இல்லாதபடி முதல்முறையாக இந்த சீசனில் பல போட்டியாளர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்... மேலும் பார்க்க

BB Tamil 10: "டிவிக்கு வந்த இத்தன வருஷத்துல இப்படி மோசமான அனுபவத்தைச் சந்திச்சதே இல்ல"- ஷப்னம் அம்மா

விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 10 19 போட்டியாளர்கள் கலந்து கொள்ள அமர்க்களமாகத் தொடங்கியிருக்கிறது.பத்தாவது ஆண்டு ஸ்பெஷல் என்பதால் எந்தச் சீசனிலும் இல்லாத புதுமையாக இந்தச் சீசனில் 14 போட்டியாளர்கள், நிக... மேலும் பார்க்க

BB Tamil 10 : எஸ்கேப் ஆன போட்டியாளர்; வைல்டு கார்டு என்ட்ரிக்கு ஓகே?! - கடைசி நாளில் நடந்ததென்ன?

விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 10, மொத்தம் 19 போட்டியாளர்கள் கலந்து கொள்ள, அமர்க்களமாகத் தொடங்கியிருக்கிறது.மேலும் எந்த சீசனிலும் இல்லாதபடி முதல்முறையாக இந்த சீசனில், பல போட்டியாளர்கள் நிகழ்ச்சியில் கல... மேலும் பார்க்க

BB 10: "எனக்கு பயம் இல்ல, பெரிய நடிகராக இருந்தால் கூட.!"- காமன்மேன் முனியம்மாள் ஷேரிங் |Exclusive

பிரபலமான ரியாலிட்டி ஷோக்களில் ஒன்றான பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் 10-வது சீசன் இன்று (செப்.6)தொடங்கி இருக்கிறது. இந்த முறையும் விஜய் சேதுபதியே நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குகிறார். இந்த சீசனில் ̀பிக்ப... மேலும் பார்க்க

Bigg Boss Tamil Season 10: முதல் முறையாக மேடையிலேயே வெளியேற்றப்பட்ட போட்டியாளர்கள்; அதிரடி தொடக்கம்!

பிரபலமான ரியாலிட்டி ஷோக்களில் ஒன்றான பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் 10-வது சீசன் இன்று (செப்.6)தொடங்கி இருக்கிறது. இந்த முறையும் விஜய் சேதுபதியே நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குகிறார். இந்நிலையில் பிக் பா... மேலும் பார்க்க