செய்திகள் :

கரூர்: சின்ன ஆண்டாங்கோவில் அருகில் குப்பை மேடு; சுகாதாரச் சீர்கேட்டைக் கண்டுகொள்ளாத நகராட்சி

post image

கரூர் மாவட்டம், சின்ன ஆண்டாங்கோவில் ஏரியாவின் பிரதான பகுதியான விநாயகர் கோயிலின் எதிரிலேயே, மக்கள் குப்பைகளைக் கொட்டி வருவதால் அங்கு பெரும் சுகாதாரச் சீர்கேடு நிலவி வருகிறது.

சின்ன ஆண்டாங்கோவில் பகுதியில் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர், அவர்களின் வீட்டில் சேரும் காகித கழிவுகள், நெகிழி கழிவுகள் மற்றும் காய்கறி கழிவுகளை கோயிலின் எதிரிலேயே தினமும் வந்து கொட்டுகின்றனர்.

இதனால் அந்த வழியில் சென்றாலே அதிகப்படியான துர்நாற்றம் வீசுகிறது. மேலும் விநாயகரை வழிபடவும், மன நிம்மதிக்காகவும் கோயிலுக்கு வருபவர்கள் முகம் சுழிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

வாரத்திற்கு ஒரு முறை மட்டுமே வரும் குப்பை வண்டி !

இது குறித்து அங்கு வசிப்பவர்களிடம் விசாரித்தோம், "குப்பை வண்டி சரியாக வருவதில்லை, வாரத்தில் ஒரே ஒரு முறை மட்டுமே வந்து குப்பைகளைப் பெற்றுக்கொண்டு செல்கின்றனர்" எனக் கவலை தெரிவிக்கின்றனர்.

குப்பை மேடு
குப்பை மேடு
குப்பை மேடு
குப்பை மேடு
குப்பை மேடு
குப்பை மேடு
குப்பை மேடு
குப்பை மேடு
குப்பை மேடு
குப்பை மேடு
குப்பை மேடு
குப்பை மேடு

மேலும், மொத்த பகுதிக்கே சேர்ந்து ஒரு பெரிய குப்பைத்தொட்டி மட்டுமே உள்ளதால் அதுவும் நிரம்பி வழிகின்றது. அதனை அகற்றவும் நகராட்சியில் இருந்து யாரும் வருவதில்லை என்றும் கூறுகின்றனர்.

குப்பைத்தொட்டி இல்லாததால் குப்பைக் கிடங்காக மாறிய சாலை

சின்ன ஆண்டாங்கோவில் உட்பகுதிக்குச் செல்லும் சாலையிலும் ஆங்காங்கே குப்பைக் குவியல்கள் காணப்படுகின்றன. இதனால் மொத்த பகுதியிலும் சுற்றுச்சூழல் மாசு உண்டாகியுள்ளது.

ஒன்று மட்டும் இல்லாமல், சாலையில் ஆங்காங்கே, குப்பைத் தொட்டிகள் வைத்தால் குப்பைகளைக் கொட்ட ஏதுவாக இருக்கும் என்றும், குப்பை வண்டி தினமும் வந்தால் வீட்டில் சேரும் கழிவுகளை அகற்ற வசதியாக இருக்கும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி, உடனடியாகத் தகுந்த நடவடிக்கை எடுக்குமா நகராட்சி நிர்வாகம்?

``தவெக-வின் 60 - 70 எம்.எல்.ஏ-க்கள் அதிருப்தியில் இருக்கிறார்கள்" - திமுக ரகுபதி சொல்லும் கணக்கு!

தவெக-வின் 60 - 70 எம்.எல்.ஏ-க்கள் அதிருப்தியில் இருப்பதாக திமுக முன்னாள் அமைச்சர் ரகுபதி தெரிவித்திருக்கிறார். இதுதொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர்,``குதிரை பேரத்தில் (Horse-trading) ஈட... மேலும் பார்க்க

``தவெக-வின் பொறுப்பின்மை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல" - அண்ணாமலை காட்டம்!

காவிரி தொழில்நுட்பக் குழுமம் மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான நீர்ப்பிரிவின் துணைத் தலைவர் பதவி காலியாகி 4 மாதங்கள் கடந்த நிலையில், இன்னும் அந்தப் பதவிக்கான நியமனம் நடக்கவில்லை என வீ தி லீடர்ஸ் அமைப்பி... மேலும் பார்க்க

பழனி: புகாராளிக்க வந்த பெண்ணிற்கு ஆபாச மெசேஜ்; பணிநீக்கம் செயப்பட்ட எஸ்.ஐ.

திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே நெய்க்காரப்பட்டியில், தாலுகா போலீஸ் நிலையம் அமைந்துள்ளது. இங்கு சப்-இன்ஸ்பெக்டராக ராஜகோபால் (வயது 34) பணி செய்து வருகிறார். கடந்த சில நாள்களுக்கு முன்பு பழனி அருகிலுள்... மேலும் பார்க்க

ரூ.134 கோடி, 6 தளங்கள்.. 20-ம் தேதி திறப்பு விழா காணும் திருச்சி அரசு மருத்துவமனையின் புதிய கட்டடம்!

திருச்சி அரசு மருத்துவமனை திருச்சி அரசு மருத்துவமனை திருச்சி அரசு மருத்துவமனை திருச்சி அரசு மருத்துவமனை திருச்சி அரசு மருத்துவமனை திருச்சி அரசு மருத்துவமனை திருச்சி அரசு மருத்துவமனை திருச்சி அரசு மரு... மேலும் பார்க்க

"தவெக ஆட்சியைக் கவிழ்க்க திமுக தொடர்ந்து முயற்சி" - துரை வைகோ குற்றச்சாட்டு

கோவை விமான நிலையத்தில் ம.தி.மு.க முதன்மைச் செயலாளர் துரை வைகோ செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “சட்டமன்றத் தேர்தலில் மக்கள் தீர்ப்பை மறுத்து, தி.மு.க, அ.தி.முக மறைமுக கூட்டணி ... மேலும் பார்க்க

`முதல்வர் விஜய்யின் மௌனம் அவருக்கே எதிராகத் திரும்பும்' - மேகதாது விவகாரம் விவாதமாவது ஏன்? | அலசல்

டி.கே சிவக்குமார் உறுதி!மேகதாது அணை`மேகதாதுவில் அணைக்கட்டுவது எங்கள் உரிமை. இதற்கு யார் எதிர்ப்பு தெரிவித்தாலும் எனக்கு கவலையில்லை' என கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார் தெரிவித்திருந்தார். இதற்கிடையி... மேலும் பார்க்க