செய்திகள் :

"தவெக ஆட்சியைக் கவிழ்க்க திமுக தொடர்ந்து முயற்சி" - துரை வைகோ குற்றச்சாட்டு

post image

கோவை விமான நிலையத்தில் ம.தி.மு.க முதன்மைச் செயலாளர் துரை வைகோ செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “சட்டமன்றத் தேர்தலில் மக்கள் தீர்ப்பை மறுத்து, தி.மு.க, அ.தி.முக மறைமுக கூட்டணி வைக்க முயன்றனர். தி.மு.க ஆட்சியைக் கவிழ்க்க முயற்சி செய்தனர். 6 மாதம் கடந்தும் ஆட்சியைக் கவிழ்க்க முயன்றனர்.

ரூ. 40 கோடி கொடுக்கக்கூட தி.மு.க தலைமை தயாராக இருக்கிறது. தி.மு.க தலைமை குதிரைப் பேரத்தில் ஈடுபடுகிறது. தேர்தல் முடிந்தவுடன் அ.தி.மு.க-வுடன் மறைமுக கூட்டணி வைக்க முயற்சித்தார்கள், அது கைகூடவில்லை. ஆனாலும் தற்பொழுதும் அது தொடர்கிறது.

கள்ளக்குறிச்சி விவகாரத்தில் யார் தவறு செய்தாலும் இந்த அரசு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். தமிழக அரசு இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறது. தவறு நடந்திருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசின் சார்பில் சொல்லப்பட்டு இருக்கிறது. தவறு செய்து இருந்தால் தண்டணை கொடுக்க வேண்டும் என்பதுதான் நிலைப்பாடு.

உதயநிதி ஸ்டாலின் பெண்களைத் தவறாகப் பேசியதால் போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றார்கள். ஆனால் கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் குறுஞ்செய்தி அனுப்பவில்லை எனச் சொல்லி இருக்கிறார், சம்மந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர் அதிகாரப்பூர்வமாக எந்தப் புகாரும் அளிக்கவில்லை.

கோவையில் இருக்கும் நூலகம் மட்டுமல்ல அனைத்து அரசு அலுவலகங்களிலும் பல கோடி ஊழல் நடைபெற்று உள்ளது. கடந்த காலங்களில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளது. புதிய ஆட்சியில் தற்பொழுது மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது.

துரை வைகோ
துரை வைகோ

இந்தியாவின் எப்ஸ்டீன் விவகாரமாக ஜெம் வீரமணி வழக்கு இருக்கின்றது. 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் இதில் பாதிக்கப்பட்டுள்ளனர். தி.மு.க, அ.தி.மு.க ஆட்சி காலத்தில் வாச்சாத்தி விவகாரம், பொள்ளாச்சி வழக்கு, ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு என பல விடயங்கள் நடந்துள்ளது.

2024, 2025 ல் புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை. ஜெம் வீரமணி விவகாரத்தில் தி.மு.க, அ.தி.மு.க ஆட்சியில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை. த.வெ.க ஆட்சியில் நேர்மையான முறையில் இந்த விவகாரம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு, வச்சாத்தி எந்த ஆட்சியில் நடந்தது?” என்றார்.

அப்போது, 'வாச்சாத்தி சூத்திரதாரி செங்கோட்டையன் இப்போது த.வெ.க-வில் இருக்கின்றாரே?' என்ற செய்தியாளர் கேள்விக்கு, துரைவைகோ ஆவேசமடைந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

`முதல்வர் விஜய்யின் மௌனம் அவருக்கே எதிராகத் திரும்பும்' - மேகதாது விவகாரம் விவாதமாவது ஏன்? | அலசல்

டி.கே சிவக்குமார் உறுதி!மேகதாது அணை`மேகதாதுவில் அணைக்கட்டுவது எங்கள் உரிமை. இதற்கு யார் எதிர்ப்பு தெரிவித்தாலும் எனக்கு கவலையில்லை' என கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார் தெரிவித்திருந்தார். இதற்கிடையி... மேலும் பார்க்க

'ரோடு ஷோ, ரூ.134 கோடி மதிப்பிலான மருத்துவமனை திறப்பு' - முதல்வர் விஜய்யின் திருச்சி விசிட் அஜெண்டா

தமிழக முதல்வர் ஜோசப் விஜய், வரும் 20-ம் தேதி, வெள்ளிக்கிழமை அன்று திருச்சிக்கு வருகைதர இருக்கிறார். அன்று காலை 9 மணிக்கு சென்னையில் இருந்து தனி விமானத்தில் காலை 10 மணிக்கு திருச்சி வரும் முதல்வர் திரு... மேலும் பார்க்க

ரூ.1,427 கோடி ஆற்று மணல் முறைகேடு: துரைமுருகன் மீது FIR பதிவு; என்னென்ன குற்றச்சாட்டுகள், வழக்குகள்?

ரூ.1,427 கோடி ஆற்று மணல் முறைகேடு வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் துரைமுருகன் மீது லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கை தற்போது வெளியாகி உள்ளது.வழக்கு எப்படித் தொடங்கியது?2024-ஆம் ஆ... மேலும் பார்க்க

திருச்சி: நியாய விலைக் கடை அரிசியில் ரூ.22.20 கோடி முறைகேடு; குடும்பமே கைதான பின்னணி என்ன?

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே பொய்கைப்பட்டியில் சண்முகம் (வயது: 57) என்பவருக்குச் சொந்தமான ஸ்ரீ குமரன் மாடர்ன் ரைஸ் மில் இயங்கி வருகிறது. இந்த ஆலை கடந்த 27.10.2022 முதல் தமிழ்நாடு நுகர்பொருள் வாணி... மேலும் பார்க்க

வாணியம்பாடி: மகளின் கல்விக்காகத் தீக்குளிக்க முயன்ற தாய்; முழுக் கட்டணத்தையும் ஏற்ற திமுக நிர்வாகி

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகேயுள்ள கதிரிபுரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் சக்திவேல் - கோமதி தம்பதியினர். இவர்களது மகள் பிரேமலதா தனியார் நர்சிங் கல்லூரியில் பி.எஸ்.சி மூன்றாம் ஆண்டு பயின்று வரு... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றம்: "தர்ஹாவை வழிபடுவது எல்லா இஸ்லாமியர்களுக்கும் மரபு அல்ல" - டாக்டர் கிருஷ்ணசாமி

"ஒரு தர்ஹாவைக் காரணம் காட்டி லட்சக்கணக்கான இந்துக்களின் வழிபாட்டு உரிமையைப் பறிப்பதும், அவர்களின் உணர்வுகளை காயப்படுத்துவதும் நியாயமாகுமா?" என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கேள்வ... மேலும் பார்க்க