செய்திகள் :

'கல்யாண வீடு, கோவில் திருவிழாலாம்போகணும்; MLA சம்பளத்தை உயர்த்தி கொடுங்க!' - எஸ்.பி.வேலுமணி கோரிக்கை

post image

சட்டமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி நாள் நிகழ்வுகள் இன்று நடந்திருந்தது. இதில் பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி 'எம்.எல்.ஏக்களுக்கு சம்பளம் உயர்வு வேண்டும்' என கோரிக்கை வைத்திருந்தார்.

எஸ்.பி.வேலுமணி
எஸ்.பி.வேலுமணி

எஸ்.பி.வேலுமணி பேசுகையில், ''தொகுதி மேம்பாட்டு நிதியை உயர்த்தி தர வேண்டும். டெல்லி, ஒடிசா, மகாராஷ்டிரவில் எம்.எல்.ஏக்களுக்கு 5 கோடி ரூபாய் தொகுதி மேம்பாட்டு நிதியாக கொடுக்கிறார்கள்.

நமக்கு 3 கோடிதான் கொடுக்கப்படுகிறது. சிலர் தொகுதி மேம்பாட்டு நிதியை 10 கோடியாக உயர்த்த வேண்டும் என்கிறார்கள். குறைந்தபட்சம் 7 கோடியாகவாது உயர்த்த வேண்டும் என்பதே என்னுடைய கோரிக்கை. முன்னாள் சட்டமன்ற ஊழியர்களுக்கான ஓய்வூதியத்தை 35000 ரூபாயிலிருந்து 70000 ரூபாயாக உயர்த்த வேண்டும்.

எஸ்.பி.வேலுமணி
எஸ்.பி.வேலுமணி

ஒரு லட்ச ரூபாய் மருத்துவப்படியை 2 லட்ச ரூபாயாக உயர்த்த வேண்டும். அதேமாதிரி, சட்டமன்ற உறுப்பினர்களின் சம்பளத்தையும் உயர்த்த வேண்டும். ஒரு சட்டமன்ற உறுப்பினர் கோவில் திருவிழா, கல்யாண வீடு என எல்லாவற்றுக்கும் செல்ல வேண்டும். ஒடிசாவில் மூணே முக்கால் லட்சமும் தெலுங்கானாவில் இரண்டரை லட்சம் ரூபாயும் எம்.எல்.ஏக்களுக்கு சம்பளமாக கொடுக்கப்படுகிறது. நம்முடைய எம்.எல்.ஏக்களுக்கும் சம்பள உயர்வு வேண்டும்.' என்றார்.

"ஆரம்பத்தில் இருந்தே ஈரான் போரை எதிர்க்கிறது; ஆனால், அவர்கள் வருந்தும் வரை.!" - ஈரான் அதிபர் அதிரடி

அமெரிக்காவும், இஸ்ரேலும் பிப்ரவரி மாதம் தொடங்கியதுதான் ஈரான் போர். ஆனால், ஈரான் பதில் தாக்குதல் நடத்தி அமெரிக்காவிற்கு டஃப் கொடுத்து வருகிறது. அமெரிக்கா, இஸ்ரேல் இரண்டுமே நல்ல பணக்கார மற்றும் வலுவான ந... மேலும் பார்க்க

`கள் விற்பனை செய்வது குறித்து பரிசீலிக்கலாம்!' - தமிழக அரசுக்கு கோகுல்தாஸ் ஆணையம் பரிந்துரை

கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கடந்த 2024-ம் ஆண்டு ஜூன் 19-ம் தேதி அதிகாலையில் கள்ளச்சாராயம் குடித்ததால் ஒன்று, இரண்டு என மெல்லத் தொடங்கிய உயிரிழப்புகள், அன்று நள்ளிரவைத் தாண்டுவதற்குள் கருணாபுரம... மேலும் பார்க்க

'இளைய தளபதி க்ரூப்ஸ்' - ரசிகர் மன்றம் தொடங்கி வளர்வது எப்படி? - அமைச்சர் சரத் முழு விளக்கம்!

பட்ஜெட் சட்டமன்றக் கூட்டத்தொடரின் கடைசி நாள் நிகழ்வு இன்று நடந்திருந்தது. இதில் பேசிய அமைச்சர் சரத் 'நாங்களெல்லாம் சாதாரணமாக வரவில்லை...' தான் ரசிகர் மன்றம் வளர்த்த கதையை எமோஷனலாக பேசியிருந்தார்.அமைச்... மேலும் பார்க்க

மத்திய கிழக்கில் மீண்டுமொரு பதற்றம்: சவூதி அரேபியாவை தாக்கும் ஹூதி; 73 பேர் உயிரிழப்பு!

ஏற்கெனவே பிப்ரவரி மாதம் முதல் ஈரான் vs அமெரிக்கா, இஸ்ரேல் போர் நடந்துகொண்டிருக்கிறது. இதற்கான எண்ட் கார்டு இன்னும் தெரியாத நிலையில், மத்திய கிழக்கில் இன்னொரு பிரச்னை தற்போது வெடித்துள்ளது. இது சவூதி அ... மேலும் பார்க்க

மதுராந்தகம், தாராபுரம் - இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் யார்?!

மதுராந்தகம், தாராபுரம் என இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட இரண்டு தொகுதிகளிலும் கண்டிப்பாக வெற்றிபெற வேண்டும் என களமிறங்கியிருக்கிறது அ.தி.மு.க.''நாம் வெற்றிபெற்ற தொகுதிகளை விட்டுக்கொடுத்துவிடக் கூடாது'' எ... மேலும் பார்க்க

`சாலை ஆக்கிரமிப்பு வாகனங்ள் பறிமுதல் செய்யப்பட்டு ஏலம்..!’ - புதுச்சேரி உழவர்கரை நகராட்சி அதிரடி

புதுச்சேரியின் பிரதான சாலைகளிலும், குடியிருப்பு வீதிகளிலும் பொதுமக்கள் தங்களின் பயன்பாடற்ற வாகனங்களை பல ஆண்டுகளாக நிறுத்தி வைக்கின்றனர். அதனால் நாள்தோறும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந... மேலும் பார்க்க