செய்திகள் :

கல்லூரி மாணவிக்கு லிஃப்ட் கொடுத்து பாலியல் தொல்லை அளித்த வழக்கு; த.வெ.க நிர்வாகி சிறையிலடைப்பு!

post image

கன்னியாகுமரி மாவட்டம், குலசேகரம் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் எம்.ஏ இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். அவருடன் பக்கத்து ஊரான மூலச்சல் பகுதியைச் சேர்ந்த த.வெ.க பெண் நிர்வாகியும் படித்து வரும் நிலையில், இருவரும் ஒன்றாக கல்லூரிக்கு வந்து செல்வது வழக்கம். இந்த நிலையில் கடந்த வாரம் புதன்கிழமை மாலை கல்லூரி முடிந்து இருவரும் வீட்டிற்குச் செல்ல பேருந்துக்காக கொட்டும் மழையில் காத்து நின்றனர். அப்போது அந்த வழியாக காரில் வந்த  தக்கலை மருந்துக்கோட்டை பகுதியைச் சேர்ந்த த.வெ.க மத்திய மாவட்ட செயற்குழு உறுப்பினரான கிறிஸ்டோபர், காரை நிறுத்தி ஊருக்குச் செல்ல உதவுவதுபோல இருவரையும் தன்னுடைய காரில் அழைத்துச் சென்றுள்ளார். த.வெ.க பெண்  நிர்வாகியான கல்லூரி மாணவியை மூலச்சல் பகுதியில் இறக்கிவிட்ட கிறிஸ்டோபர், குலசேகரம் பகுதியைச் சேர்ந்த மாணவியை வீட்டில் கொண்டு விடுவதாகக் கூறி தனியாக அழைத்துச் சென்றுள்ளார். மழை பெய்து கொண்டிருக்கும்போது திடீரென காரை நிறுத்திய கிறிஸ்டோபர், அந்த மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.

பாலியல் தொல்லை
பாலியல் தொல்லை

அந்த மாணவி சத்தம் போட்டு காரில் இருந்து குதித்து தப்ப முயன்றபோது, பேசி சமாதானப்படுத்திய கிறிஸ்டோபர், மாணவியை அவரது வீட்டு முன் இறக்கிவிட்டு விட்டு தப்பிச் சென்றார். வீட்டிற்குச் சென்ற கல்லூரி மாணவி பெற்றோரிடம் நடந்த சம்பவத்தைத் தெரிவித்ததோடு கொற்றிக்கோடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் மீதான விசாரணை தக்கலை காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்ட நிலையில், தக்கலை போலீஸார் கல்லூரி மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட கிறிஸ்டோபர் மீது வழக்குப் பதிவு செய்ததுடன், தலைமறைவாக இருந்த அவரைத் தேடிவந்தனர்.

த.வெ.க நிர்வாகி கிறிஸ்டோபர்

இந்த நிலையில் கிறிஸ்டோபரைக் கைதுசெய்யக் கோரி அனைத்திந்திய மாதர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் போராட்டம் நடத்தின. இதற்கிடையே த.வெ.க கட்சிப் பொறுப்பிலிருந்து கிறிஸ்டோபர் நீக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் தலைமறைவாக இருந்த கிறிஸ்டோபரை இன்று தக்கலை போலீஸார் கைதுசெய்தனர். பின்னர் கிறிஸ்டோபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீஸார், நீதிமன்றக் காவலில் சிறையில் அடைத்தனர்.

அரசு வேலை என்று போலி நியமன ஆணை; 4 பேரிடம் ரூ.16 லட்சம் மோசடி - மருத்துவர் உட்பட இருவர் மீது வழக்கு!

நாமக்கல் மாவட்டம், முத்துகாட்டுப்பட்டியில் 28 வயது பெண் வசித்து வருகிறார். இந்தப் பெண்ணின் கணவர் வெளிநாட்டில் வேலை செய்து வருவதால், அவர் தனது தாயார் வீட்டில் வசித்து வருகிறார். இந்த நிலையில், இவர் தனக... மேலும் பார்க்க

வெள்ளை உடும்பு, 16 மலைப்பாம்பு; பாங்காக் டு திருச்சி; ஏர்போர்ட்டில் சிக்கிய 45 அறிய வகை உயிரினங்கள்!

வெளிநாடுகளில் இருந்து திருச்சி விமான நிலையம் வழியாக சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு அரிய வகை வனவிலங்குகள் மற்றும் ஊர்வன உயிரினங்கள் கடத்தப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகளுக்க... மேலும் பார்க்க

பெரம்பலூர்: வயதான பெண்ணிடம் 3 பவுன் நகை பறிப்பு; 15 கி.மீ தூரம் துரத்திச் சென்று பிடித்த பொதுமக்கள்!

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள புது வேட்டக்குடி பகுதியைச் சேர்ந்தவர் பாப்பாத்தி. வயதான இவர், ஆடு, மாடுகளை வளர்த்து அதில் கிடைக்கும் வருவாயில் வாழ்க்கையை நகர்த்தி வருகிறார். இந்நிலையில், புது ... மேலும் பார்க்க

திருச்சி: 'ரூம் வாடகையோடு, மாதம் ரூ. 30,000 சம்பளம்' - டிஜிட்டல் அரெஸ்ட் செய்ய உதவிய இன்ஜினீயர் கைது

சென்னை தொலைத்தொடர்பு துறையிலிருந்து திருச்சியில் குறிப்பிட்ட பகுதியிலிருந்து பிராட்பேண்ட் பயன்பாடு அதீத அளவில் இருக்கிறது என்பதைக் கண்டறிந்தனர். தினமும் பல லட்ச ரூபாய் மதிப்பிலான டேட்டா திருடப்படுவது ... மேலும் பார்க்க

"உன் மனைவியை என்னால் மறக்க முடியல" - காதலியின் கணவருக்கு மெசேஜ் அனுப்பியவருக்கு அரிவாள் வெட்டு

கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தெங்கம்புதூர் அருகேயுள்ள தெற்கு புத்தளம் பகுதியைச் சேர்ந்தவர் விவேக் (27). இவர் கட்டடம் கட்டும் கொத்தனார் வேலை பார்த்து வருகிறார். கடந்த 7... மேலும் பார்க்க

காதல் விவகாரத்தில் வீடு புகுந்து சிறுமியின் தாய் கொலை; சிகிச்சையிலிருந்த தந்தையும் உயிரிழந்த சோகம்

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகேயுள்ள முதலூரைச் சேர்ந்தவர் முத்துக்கிருஷ்ணன். இவரது மனைவி மேரி விஜிலா. இவர்களுக்கு 15 மற்றும் 14 வயதில் இரண்டு மகள்களும், 8 வயதில் ஒரு மகனும் உள்ளனர். முத்துக... மேலும் பார்க்க