செய்திகள் :

காவல் நிலையத்தில் வைத்திருந்த 7 புகையிலை மூட்டைகளை காரில் கடத்திய ஏட்டு; கேரளாவில் அதிர்ச்சி சம்பவம்

post image

கேரள மாநிலத்தில் `ஆப்ரேஷன் தூஃபான்' என்ற பெயரில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் சட்டவிரோத விற்பனைக்கு எதிராக போலீஸார் கடும் நடவடிக்கை எடுத்துவருகின்றனர். அதன் ஒரு பகுதியாக வயநாடு மாவட்டம், சுல்தான் பத்தேரி போலீஸார் கடந்த ஜூன் 26-ம் தேதி தொட்டப்பன்குளம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு 7 சாக்கு மூட்டைகள் அளவிலான தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள அவற்றைப் பறிமுதல் செய்த போலீஸார், வழக்கு தொடர்பாக சான்றுப் பொருள்கள் என்ற வகையில் சுல்தான் பத்தேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிமன்றத்தின் உத்தரவுப்படி புகையிலைகள் அடங்கிய சாக்கு மூட்டைகள் அனைத்தும் சுல்தான் பத்தேரி காவல் நிலைய வளாகத்தில் உள்ள பொருள்கள் பாதுகாப்பு அறையில் பாதுகாப்பாக பூட்டி வைக்கப்பட்டிருந்தன. இதற்கிடையே, கடந்த ஜூலை 19-ம் தேதி இரவு சுல்தான் பத்தேரி காவல் நிலையத்தின் ஏட்டு டி.சபித் என்பவர் நிலைய பொது நாட்குறிப்பு (ஜி.டி) பொறுப்பில் பணியில் இருந்தார். அப்போது காவல் நிலைய எழுத்தரின் மேஜையில் வைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு அறையின் சாவியை, அவருக்குத் தெரியாமல் நைசாக எடுத்த அவர், அதிகாலை நேரத்தில் பாதுகாப்பு அறையைத் திறந்து உள்ளே வைக்கப்பட்டிருந்த 7 மூட்டை புகையிலைப் பொருள்களைத் திருடி, பின்னர் அவற்றை தனது சொந்த காரில் ஏற்றிச் சென்றுள்ளார்.

புகையிலை மூட்டைகள்

இந்நிலையில், இம்மாதம் (செப்டம்பர்) 10-ம் தேதி பாதுகாப்பு அறையில் இருந்த புகையிலைப் பொருள்கள் திருடுபோனது அதிகாரிகளுக்குத் தெரியவந்தது. உடனடியாக தடய அறிவியல் நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு காவல் நிலையத்தில் தீவிர சோதனைகள் நடத்தப்பட்டன. மேலும் பணியில் இருந்த காவலர்களிடமும் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. காவல் நிலையத்தின் சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்தபோதுதான், ஏட்டு சபித் அதிகாலையில் பாதுகாப்பு அறையைத் திறந்து தனது காரில் சான்றுப் பொருள்களை ஏற்றிச் செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தன. திருட்டு விவகாரம் வெளிச்சத்திற்கு வந்ததை அடுத்து, கடந்த ஒரு வாரமாக மருத்துவ விடுப்பில் இருந்த ஏட்டு சபித், இரண்டு நாள்களுக்கு முன்பு திடீரென தலைமறைவானார். அவரது செல்போன் சிக்னல் கடைசியாக அம்பலவயல் பகுதியில் காட்டிய நிலையில், தற்போது செல்போன் சுவிட் ஆஃப் செய்து வைக்கப்பட்டுள்ளது.

சஸ்பெண்ட் செய்யப்பட்ட போலீஸ் ஏட்டு சபித்

ஏட்டு சபித்தின் வீட்டிற்கு போலீஸார் சென்று தேடியும் அவர் சிக்கவில்லை. ​இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்திய டி.எஸ்.பி எம்.எம்.அப்துல் கரீம் மாவட்டக் காவல்துறைக்கு விரிவான அறிக்கை தாக்கல் செய்தார். அந்த அறிக்கையின் அடிப்படையில், குற்றம்சாட்டப்பட்ட ஏட்டு டி.சபித்தை சஸ்பெண்ட் செய்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் எஸ்.தேவமனோகர் உத்தரவிட்டார். திருடப்பட்ட புகையிலைப் பொருள்களை அவர் எங்கு பதுக்கி வைத்துள்ளார், அதை விற்பனை செய்யத் திட்டமிட்டாரா, குற்றம்சாட்டப்பட்டவருக்கு ஆதரவாக இந்தச் செயலைச் செய்தாரா, இதில் வேறு யாருக்கேனும் தொடர்புள்ளதா என்பது அவர் பிடிபட்ட பின்னரே தெரியவரும் என போலீஸார் தெரிவித்துள்ளனர். தலைமறைவாக உள்ள ஏட்டை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.

ஆம்னி பஸ்களில் பெண்களின் கைப்பையே குறி; தொடர் நகைக் கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளையன் சிக்கியது எப்படி?

நெல்லை மாவட்டம்,பாளையங்கோட்டை பிலிப் காலனியைச் சேர்ந்தவர் ஜஸ்டின் சகாயராஜ். இவரது மனைவி ஜூலியட் லதா, தனியார் கல்லூரி உதவி பேராசிரியர். இருவரும் கடந்த ஆகஸ்ட் 27-ம் தேதி இரவு நெல்லையில் இருந்து சென்னைக்... மேலும் பார்க்க

`பணம் தர்றேன், கேஸ் கொடுக்காதீங்க…' - ஆசிரியரின் தொடர் பாலியல் அத்துமீறல்; அரசுப்பள்ளி மாணவி தற்கொலை

``விஷம் குடிச்சிட்டேன்… செத்துடுவேன்னு பயமா இருக்கும்மா…"கள்ளக்குறிச்சி மாவட்டம்,சின்னசேலம் பகுதியில் சுமார்400மாணவிகளுடன் இயங்கி வரும் அந்த அரசுப் பள்ளியில்,பத்தாம் வகுப்பு படித்து வந்தார் கவிதா (மாண... மேலும் பார்க்க

விக் அணிந்து ஆள்மாறாட்டம்; போலி பெயர்களில் ரூ.30 கோடி மோசடி செய்தவர் கைது; வெளியான பகீர் தகவல்கள்

மும்பை காந்திவலியைச் சேர்ந்த சஞ்சய் ஹிராலால் ஷா (60) என்பவர் தனது குடும்பத்திடம் பங்குச்சந்தையைப் பயன்படுத்தி ரூ.10.81 கோடி மோசடி செய்யப்பட்டுவிட்டதாகக் கூறி மும்பை போலீஸ் கமிஷனர் தேவன் பார்தியிடம் கட... மேலும் பார்க்க

மனைவியின் தலையை வெட்டி பிரிட்ஜில் வைத்த கணவன்; போலீஸிடமிருந்து தப்பிக்க முயலும்போது விபரீதம்

அசாம் மாநிலம் கவுகாத்தியைச் சேர்ந்த ராமானுஜ் கோஸ்வாமி (30) என்பவர் தனது மனைவி ரியா என்பவரைக் கொலை செய்துவிட்டு தலையைத் துண்டித்து பாலிதீன் பேக்கில் வைத்து பிரிட்ஜில் வைத்துவிட்டு தலைமறைவாகிவிட்டார். ப... மேலும் பார்க்க

பிற ஆண்களுடன் பேசுகிறார்: சென்னையில் இருந்து காதலியை வரவழைத்து ஹோட்டல் அறையில் குத்திக்கொன்ற காதலன்

அசாம் மாநிலம் உடல்புரி மாவட்டத்தைச் சேர்ந்த அபிஜித் கிண்டோ, குரியா என்ற பெண்ணைக் காதலித்து வந்தார். குரியா சென்னையில் தங்கி இருந்தார். குரியா சென்னையிலிருந்து வேறு இரண்டு பெண்களுடன் அசாமில் உள்ள கம்ரூ... மேலும் பார்க்க

மீன்களை பாலியல் வன்கொடுமை செய்த நபர்: சிசிடிவி ஆதாரத்துடன் கைது செய்த காவல்துறை! - என்ன நடந்தது?

பாங்காக் நகரின் துங் சோங் ஹோங் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் வெளிப்புறத்தில், சிமெண்டால் கட்டப்பட்ட பெரிய மீன் தொட்டி இருக்கிறது. இந்த மீன் தொட்டியில் வளர்க்கப்படும் வண்ண மீன்கள் தொடர்ந்து திடீர் திடீரெ... மேலும் பார்க்க