மேகதாது விவகாரம்: ``ராகுல் காந்தியால் இந்த ஒரு வரியை பகிரங்கமாகச் சொல்ல முடியுமா...
குடியாத்தம்: `தவெக எம்எல்ஏ வெக்கமில்லாமல் பல்லிளிக்கிறார்’- வெளிநடப்பு செய்த திமுக நகர்மன்றத் தலைவர்
வேலூர் மாவட்டம், குடியாத்தம் நகராட்சியில் இன்று நடைபெற்ற நகர்மன்றக் கூட்டத்தைப் புறக்கணித்து கவுன்சிலர்களுடன் வெளிநடப்பு செய்தார், தி.மு.க-வைச் சேர்ந்த நகர்மன்றத் தலைவர் சௌந்தரராஜன்.
அப்போது பேசிய சௌந்தரராஜன், ``ஸ்டாலின் ஆட்சியில் நகராட்சி பொதுநிதியில் நாங்கள் செய்துமுடித்த சாலை திட்டப்பணியை ஆட்சிக்கு வந்து மூன்று மாதங்கள்கூட ஆகாத குடியாத்தம் த.வெ.க எம்.எல்.ஏ சிந்து, அவர் செய்ததுபோல வெக்கமில்லாமல் திறந்து வைத்து பல்லிளிக்கிறார். இந்த பணியை சிறப்பாகச் செய்தது யார்? என்று கூப்பிட்டு சால்வைப் போடவில்லை. எம்.எல்.ஏ-வின் இந்தச் செயலைக் கண்டிக்கிறோம்.

இந்த ஆட்சியில், இதுவரை 5 பைசாகூட சட்டமன்ற நிதி ஒதுக்கப்படவில்லை. நகராட்சியில் சொத்துவரி, குழாய் வரி கட்டுகிறார்கள். இதிலிருந்து பொது நிதி பெற்று முக்கியமான பணிகளை மேற்கொள்வோம். இப்போது, `பொது நிதி எடுத்து எந்த பணிகளையும் செய்யக் கூடாது’ என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதாக ஆணையர் சொல்கிறார். `ஏன் டெண்டர் வைக்கவில்லை?’ என்று கேட்டாலும், `மேலிருந்து உத்தரவு வரவில்லை’ என்கிறார். இதையெல்லாம் கண்டித்துதான் வெளிநடப்பு செய்திருக்கிறோம்’’ என்றார்.














