செய்திகள் :

"குதிரை பேரத்திற்கு ஒப்புதல் வாக்குமூலம்" - 'விரைவில் திமுக ஆட்சி' என்ற ஸ்டாலினுக்கு அருண்ராஜ் பதில்

post image

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் இல்லத் திருமணவிழாவை நேற்று நடத்தி வைத்து பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், “விரைவில் நமது ஆட்சி உதயமாகத்தான் போகிறது. விரைவில் நல்ல சூழல் அமைய இருக்கிறது. அதற்கு நீங்கள் தயாராக இருக்க வேண்டும்” என்று பேசி இருந்தார்.

மு.க. ஸ்டாலினின் இந்தப் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள மருத்துவத்துறை அமைச்சர் அருண்ராஜ், “'விரைவில் நமது ஆட்சி உதயமாகப் போகிறது' என்று பகிரங்கமாகப் பேசுகிறார் என்றால் என்ன அர்த்தம்? ஆளுங்கட்சியாக இருந்து ஊழல் செய்தது போக எதிர்க்கட்சியாக இருக்கும்போதும் ஊழல் செய்துகொண்டிருக்கிறார், குதிரை பேரம் நடத்திக் கொண்டிருக்கிறார் என்பதைத்தானே இது காட்டுகிறது" எனத் தெரிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு இல்லத் திருமணவிழா
முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு இல்லத் திருமணவிழா

இது தொடர்பாக அவர் வெளியிட்டு இருக்கும் எக்ஸ் பதிவில்,

"திமுகவின் குதிரை பேரம்: ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ள ஸ்டாலின்!

”உங்கள் மீது ஊழல் வழக்கு பதியலாம்” என்று உச்ச நீதிமன்றத்தால் சான்றளிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் நேரு இல்லத் திருமணத்தை நடத்தி வைத்து பேசிய முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான திரு. ஸ்டாலின் தன்னையும் அறியாமல் தான் இப்போது திரை மறைவில் செய்துகொண்டிருக்கிற வேலைகளைப் பற்றிய ஓர் ஒப்புதல் வாக்குமூலத்தை மைக் முன் மக்களிடம் அளித்திருக்கிறார்.

“விரைவில் நமது ஆட்சி உதயமாகத்தான் போகிறது. விரைவில் நல்ல சூழல் அமைய இருக்கிறது. அதற்கு நீங்கள் தயாராக இருக்க வேண்டும்” என்று பேசியிருக்கிறார் முன்னாள் முதலமைச்சர். 2026 ஏப்ரல் மாதம் நடந்த பொதுத் தேர்தலில் மக்கள் 35% வாக்குகளையும் 108 இடங்களையும் கொடுத்து மாண்புமிகு தமிழக வெற்றிக் கழகத் தலைவர் அண்ணன் விஜய் அவர்களை, தமிழ்நாட்டின் முதலமைச்சராகத் தேர்வு செய்திருக்கிறார்கள். அதுமட்டுமல்ல... 2021 முதல் 2026 வரை 'சீன்' ஆட்சி நடத்தி வந்த ஸ்டாலினை அவரது சொந்த தொகுதியான கொளத்தூர் தொகுதி மக்களே தோற்கடித்துவிட்டார்கள்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

மக்களின் தீர்ப்பை மதித்து மதச்சார்பற்ற கொள்கையில் நம்பிக்கை வைத்துள்ள காங்கிரஸ், இடது சாரிகள், விசிக, முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளின் ஆதரவோடு தமிழ்நாடு இதுவரை கண்டிராத கூட்டணி ஆட்சியை அமைத்து வெற்றிகரமாக நடத்தி வருகிறார் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள். அண்மையிலே தாராபுரம், மதுராந்தகம் ஆகிய இரண்டு தொகுதி இடைத்தேர்தலிலும் கூட மக்கள், மாண்புமிகு முதலமைச்சர் அவர்களை வெற்றி பெற வைத்து, நமது சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை உயர்த்தி உள்ளனர்.

ஆனாலும், கடந்த மே மாதத்தில் இருந்தே... இந்த ஆட்சி மூன்று மாதம் நீடிக்காது. ஆறு மாதம் நீடிக்காது என்றெல்லாம் சித்தரஞ்சன் சாலை இல்லத்தில் உட்கார்ந்து பித்து பிடித்தது போல சோழி உருட்டிக் கொண்டிருந்த ஸ்டாலின் அவர்கள்... அதிகாரம் பறிபோன பதற்றத்திலும் பரிதவிப்பிலும் இந்த ஆட்சியைக் கவிழ்க்க பல்வேறு முயற்சிகளைச் செய்து பார்த்தார். அது தொடர்பான குதிரைப் பேர வழக்குக்கூட இப்போது நீதிமன்றத்திலே நடந்து வருகிறது.

ஆனால் நம் மீது குதிரைப் பேரம் என்ற பொய்ப் புகாரைக் கடந்த ஆறு மாதமாகச் சொல்லிக் கொண்டிருக்கும் ஸ்டாலின்... உண்மையிலேயே தனது ஓய்வுக் காலத்தைக் குதிரை பேர முயற்சியில்தான் தீவிரமாகச் செய்துகொண்டிருக்கிறார் என்பதை இன்றைய அவரது திருமண விழா பேச்சு காட்டுகிறது.

அமைச்சர் அருண்ராஜ்
அமைச்சர் அருண்ராஜ்

விரைவில் நமது ஆட்சி உதயமாகத்தான் போகிறது என்றால் என்ன அர்த்தம்? 2026 இல் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அரசு 2031 வரை பதவியில் இருக்க வேண்டும் என்பதுதான் சட்டமும் ஜனநாயகமும். ஆனால் ஆறு மாத முடிவிலேயே விரைவில் திமுக ஆட்சி உதயமாகும் என்று ஸ்டாலின் பேசுகிறார் என்றால், அவர் நடத்தும் குதிரை பேர முயற்சிகள் ஒவ்வொரு கட்டமாக முன்னேறிக் கொண்டிருக்கிறது என்று அவர் திமுக நிர்வாகிகளுக்கும் தொண்டர்களுக்கும் சொல்கிறாரா? குதிரை பேரம் நடத்துவது யார் என்பது இப்போது மக்களுக்குத் தெரிந்துவிட்டது.

பள்ளிக் கல்வி, நகராட்சி நிர்வாகம், பொதுப்பணித்துறை என்று எல்லா துறையிலும் உலக மகா ஊழல் செய்துவிட்டு... நூல்களில் கூட ஏ.ஐ. ஊழல் செய்துவிட்டு மக்கள் முன் தலைகுனிந்து நிற்க வேண்டிய சூழலில் இருக்கும் ஸ்டாலின், அதற்கு மாறாக... “விரைவில் நமது ஆட்சி உதயமாகப் போகிறது” என்று பகிரங்கமாகப் பேசுகிறார் என்றால் என்ன அர்த்தம்?

ஊழல்
ஊழல்

ஆளுங்கட்சியாக இருந்து ஊழல் செய்தது போக எதிர்க்கட்சியாக இருக்கும்போதும் ஊழல் செய்துகொண்டிருக்கிறார், குதிரை பேரம் நடத்திக் கொண்டிருக்கிறார் என்பதைத்தானே இது காட்டுகிறது. இது குறித்து முன்னாள் முதலமைச்சர், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் உரிய விளக்கம் அளிக்க வேண்டும்" எனப் பதிவிட்டுள்ளார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb

'என் வீட்டுல 22 வருசமா வேலை பார்க்குறாங்க'- பணிப்பெண்ணை விஜய்யிடம் அறிமுகப்படுத்திய பிரியங்கா காந்தி

டெல்லியில் நேற்று (16.11.2026) நடைபெற்ற சோனியா காந்தியின் சுயசரிதை புத்தக வெளியீட்டு விழாவில், தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் விருந்தினராக கலந்துகொண்டிருந்தார். அப்போது விஜய்யைச் சந்தித்த பிரியங்கா காந்த... மேலும் பார்க்க

SIR: `உ.பி-யில் 1.27 கோடி இந்து வாக்காளர்களின் பெயர்கள் நீக்கம்'- விளக்கம் கேட்ட யோகி ஆதித்யநாத்!

வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு (SIR) பிறகு உத்தரப்பிரதேச மாநில வாக்காளர் பட்டியலில் இந்து வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாக அந்த மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். இது ... மேலும் பார்க்க

கோவை: பெண்ணிடம் தகராறு செய்த தவெக நிர்வாகி – கட்சியில் இருந்து அதிரடி நீக்கம்!

கோவை கலிக்கநாயக்கன்பாளையம் பகுதியில் மகாராஜன் என்பவர் இருசக்கர வாகன விற்பனை ஷோரூம் நடத்தி வருகிறார். இவரது மனைவி திவ்யா. சமீபத்தில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த மகாராஜன், கட்சியின் பல்வேறு நிகழ்ச்ச... மேலும் பார்க்க

இஸ்ரேல் அதிபராக தொடர நெதன்யாகுவின் ஐடியா; ஒத்துழைக்காத எதிர்க்கட்சி! இன்னும் எத்தனை நாள் கெடு?

இஸ்ரேலில் தேர்தல் முடிவுகள் வந்து கிட்டத்தட்ட இரண்டு வாரங்கள் ஆகிவிட்டன. ஆனால், அந்த நாட்டில் இன்னும் யாரும் ஆட்சி அமைக்கவில்லை.பெரும்பான்மை பெறாத இஸ்ரேல் கட்சிகள்இஸ்ரேல் நாடாளுமன்றம் நெசட்டில் பெரும்... மேலும் பார்க்க

கள்ளக்குறிச்சி எம்எல்ஏ விவகாரம்: `இதே எடப்பாடியாராக இருந்திருந்தால்...'- அதிமுக பா.வளர்மதி பேச்சு

தவெக கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் மாவட்ட ஆட்சியருக்கு குறுஞ்செய்தி அனுப்பியதாக வெடித்திருக்கும் விவகாரம், பெரும் சர்ச்சையாகி இருக்கும் நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்ட அதிமுக மகளிர் அணி சார்பில் ... மேலும் பார்க்க

'மன்மோகன் சிங்கை பிரதமர் பதவியிலிருந்து நீக்க கோரிய பிரணாப் முகர்ஜி!' - என்ன சொல்கிறார் சோனியா?

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான சோனியா காந்தி 'Belonging' என்ற பெயரில் சுயசரிதை நூலை எழுதியிருக்கிறார். அதில் அவர் அரசியல்ரீதியாக குறிப்பிட்டிருக்கும் சில சம்பவங்கள் சர்ச்சையை கிளப்பியிருக்கிறது. கு... மேலும் பார்க்க