செய்திகள் :

குப்பையாகும் வனம்: ஆபத்தில் சிக்கும் வனவிலங்குகள்; 7,685 கிலோ நெகிழி, 6,110 கிலோ பாட்டில்கள் அகற்றம்

post image

வனவிலங்குகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அறக்கட்டளை, கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழ்நாடு வனத்துறையுடன் இணைந்து வனப்பகுதிகளில் நெகிழிக் கழிவுகள், கண்ணாடி பாட்டில்களை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகிறது.

தமிழ்நாட்டில் ஆறு மாவட்டங்களில் 200க்கும் மேற்பட்ட தன்னார்வலர்களுடன் இந்த அறக்கட்டளை செயல்படுகிறது. இதில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் மட்டும் 90 தன்னார்வலர்கள் உள்ளனர்.

மு. நவின் குமார்

இந்த ஆண்டு மாங்கரை - ஆணைகட்டி வனச்சாலை, வால்பாறை, அனுவாவி சுப்பிரமணியர் கோவில் வனப்பகுதி, கோவை குற்றாலம் உள்ளிட்ட 9 இடங்களில் களப்பணிகள் நடத்தப்பட்டு, 7,685 கிலோ நெகிழிக் கழிவுகளும், 6,110 கிலோ மதுபானக் கண்ணாடி பாட்டில்களும் என மொத்தம் 13,795 கிலோ கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன.

இது குறித்து அறக்கட்டளையின் ஒருங்கிணைப்பாளர் மு. நவின் குமார், உடைந்த கண்ணாடி பாட்டில்களால் யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகளுக்கு ஏற்படும் ஆபத்துகளை விளக்கினார். யானைகளின் கால்களில் கண்ணாடித் துண்டுகள் குத்தி காயமேற்பட்டு, தொற்று ஏற்பட்டு, 30 முதல் 35 நாட்களுக்குள் உயிரிழக்கும் அபாயம் உள்ளதாக அவர் தெரிவித்தார்.

தாய் யானையை இழக்கும் குட்டி யானைகள் பெரும்பாலும் பிற யானைக் கூட்டங்களால் ஏற்றுக்கொள்ளப்படாத நிலையில், வனத்துறையால் மீட்கப்பட்டு முகாம்களில் வளர்க்கப்பட வேண்டிய சூழல் ஏற்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

"இது ஒரு யானையின் இழப்பு மட்டுமல்ல, ஒரு தலைமுறையின் இழப்பு. மின்சாரம் தாக்கி வனவிலங்குகள் உயிரிழப்பது உள்ளிட்ட பல்வேறு சம்பவங்கள் மனிதர்களின் அஜாக்கிரதையால் ஏற்படுகின்றன. எனவே, ஒவ்வொருவரும் சுய ஒழுக்கத்துடன் செயல்பட்டு அனைத்து உயிர்களையும் பாதுகாக்க வேண்டும் " என அவர் வேதனை தெரிவித்தார்.

ஆகஸ்ட் 12ஆம் தேதி உலக யானைகள் தினம் நெருங்கும் நிலையில், வனப்பகுதிகளுக்குச் செல்பவர்கள் நெகிழிப் பொருட்கள், கண்ணாடி பாட்டில்களை அங்கு வீசாமல் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் என மு. நவின் குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வனவிலங்குகள் பாதுகாப்பிற்கு தமிழ்நாடு அரசு மேலும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பது சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

மசினகுடி: 11 நாளில் 3 பெண் யானைகள்; எல்-நினோ தாக்கத்தால் வறட்சியில் அடுத்தடுத்து மடியும் பேருயிர்

எல்-நினோ தாக்கம் காரணமாக நீலகிரி மாவட்டத்தில் நடப்பாண்டுக்கான தென்மேற்கு பருவமழை பொய்த்திருக்கிறது. சமவெளி பகுதிகளுக்கு இணையாக ஊட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதுடன் வற... மேலும் பார்க்க

கொசஸ்தலையாற்றில் கொத்துக்கொத்தாக செத்து மிதந்த மீன்கள் — எண்ணூர் பகுதியில் வெப்ப மாசு அச்சம்

சென்னை எண்ணூர் அருகே கொசஸ்தலையாறு மற்றும் எண்ணூர் முகத்துவாரப் பகுதியில் ஆகஸ்ட் 15ஆம் தேதி முதல் டன் கணக்கில் மீன்கள் மற்றும் பிற நீர்வாழ் உயிரினங்கள் செத்து கரை ஒதுங்கி வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்ப... மேலும் பார்க்க

`10 லட்சம் விதைப்பந்துகள் இலக்கு’ - வேலூர் மலைகளைப் பசுமையாக்க ஆர்வம் காட்டும் மென்பொருள் பொறியாளர்

வேலூர் சத்துவாச்சாரி அருகேயுள்ள ரங்காபுரத்தில் வசித்து வருபவர் தினேஷ் சரவணன். மென்பொருள் பொறியாளரான இவர்... கோடைக்காலத்தில் பறவைகளின் தாகம் தணிக்கத் தனித்துவமான ஏற்பாடு செய்தல், ஏரிக்கரைகளில் பனை விதை... மேலும் பார்க்க

கோவை அருகே ரயில் மோதி காட்டு யானைகள் உயிரிழப்பு – யானைகள் தினத்தில் நடந்த சோகம்!

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு – கேரளம் எல்லைப்பகுதியான வாளையார் வனப்பகுதி வழியாக கேரளத்திற்கு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் கேரள மாநிலத்திற்கு உட்பட்ட பகுதியில் 4 யானைகள் கொண்ட ஒரு யானை... மேலும் பார்க்க

புனித நீராட வந்த பக்தர்கள் ஏமாற்றம்... அமலைச் செடிகளால் ஆக்கிரமிக்கப்பட்ட பழநி சண்முகநதி!

பழநி சண்முகநதிபழநி சண்முகநதிபழநி சண்முகநதிபழநி சண்முகநதிபழநி சண்முகநதிபழநி சண்முகநதிபழநி சண்முகநதி மேலும் பார்க்க

ஒரு மனிதன், ஒரு லட்சம் மரங்கள் - விவேக் விதைத்த கனவை நனவாக்கும் விழுப்புரம் சசி ராஜா

ஒரு நாட்டின் உண்மையான செல்வம் என்பது பணமும் கட்டடங்களும் அல்ல; நம்மைச் சுற்றியுள்ள பசுமையும், நாம் சுவாசிக்கும் சுத்தமான காற்றும்தான். ஆனால், நவீன நாகரிகத்தின் வளர்ச்சி என்ற பெயரில் நாம் நாள்தோறும் வெ... மேலும் பார்க்க