செய்திகள் :

குமரி: இரவு முழுவதும் சித்ரவதை; 72 வயது தந்தையை கழுத்தை நெரித்துக் கொன்ற மகன்!

post image

கன்னியாகுமரி மாவட்டம், பூதப்பாண்டி அருகே உள்ள அழகியபாண்டியபுரம் வாட்ஸ்புரம் பகுதியைச் சேர்ந்தவர் சுவாமிதாஸ் (வயது 72). சுவாமிதாஸ் மனைவி மற்றும் பிள்ளைகளுடன் வசித்து வந்தார். இந்த நிலையில் வீட்டில் மயங்கிய நிலையில் கிடந்ததாகக் கூறி உறவினர்கள் அவரை இன்று அதிகாலை ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சுவாமிதாஸை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கெனவே அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். மேலும், அவர் உடலில் பலத்த காயங்கள் இருப்பதை மருத்துவர்கள் கண்டுபிடித்தனர். இது குறித்து மருத்துவமனையில் இருந்து வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் பூதப்பாண்டி போலீஸார் சந்தேக மரணம் என வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வந்தனர்.

பூதப்பாண்டி காவல் நிலையம்

போலீஸ் விசாரணையில் சுவாமிதாஸின் மகன் டேவிட்சன் மது அருந்தும் பழக்கம் கொண்டவர் எனவும், மதுபோதையில் தினமும் தந்தையைத் தாக்கி சித்ரவதை செய்து வந்ததாகவும் தெரியவந்தது. சம்பவத்தன்று இரவு மது போதையில் வீட்டுக்குச் சென்ற டேவிட்சன் தந்தையிடம் வம்பிழுத்துள்ளார். இதில் இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.

தந்தையை கொலைசெய்த வழக்கில் கைதான டேவிட்சன்

இதையடுத்து டேவிட்சன் ஆத்திரத்தில் தனது தந்தை என்றும் பாராமல் சுவாமிதாஸை அடித்து கொடுமைப்படுத்தியுள்ளார். இரவு முழுவதும் தந்தையை சித்ரவதை செய்ததுடன், இறுதியாக அவரது கழுத்தை நெரித்துக் கொலை செய்ததாகவும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து டேவிட்சனை கைதுசெய்த போலீஸார், அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

குளித்துக் கொண்டிருந்த சிறுமிக்குப் பாலியல் தொல்லை; போக்சோவில் சிறையில் அடைக்கப்பட்ட இளைஞர்!

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு பகுதியில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமி, அங்குள்ள அரசு பள்ளி ஒன்றில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். வீட்டுக்குப் பின்புறம் அமைக்கப்பட்ட மறைவிடத்தில் சிற... மேலும் பார்க்க

காட்பாடி: வங்கி மேலாளர் வீட்டில் கைவரிசை; ரூ.1 கோடி நகைகளை அள்ளிச் சென்ற முகமூடி கொள்ளையர்கள்!

வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த கார்ணாம்பட்டில் `மே ஃப்ளவர்’ குடியிருப்புப் பகுதி அமைந்திருக்கிறது. இங்கு ஓய்வுபெற்ற வங்கி மேலாளரான எட்வின் என்பவர், தனது மனைவியும் மருத்துவருமான கிறிஸ்டியானாவுடன் வசி... மேலும் பார்க்க

கோவை : பெட்ரோல் பங்கில் நிலத்தடி டேங்க் வெடித்து ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு – 5 பேர் கைது!

கோவை கணபதி பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் என்பவருக்கு சொந்தமான இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்க், கோவை சங்கனூர் எரு கம்பெனி சந்திப்பு பகுதியில் இயங்கி வருகிறது. அங்கு கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு புதிதாக ப... மேலும் பார்க்க

திருச்சி: நகைக்கடையில் ரூ. 12 லட்சம் மோசடி; இளைஞரைத் தேடும் போலீஸ்; பின்னணி என்ன?

நாகப்பட்டினம் மாவட்டம், கீழ்வேளூர் பகுதியைச் சேர்ந்தவர் முகமது போஸ் (வயது: 37). இவர், திருச்சி- கரூர் பைபாஸ் ரோட்டில் அண்ணாமலை நகரில் உள்ள ஒரு தங்க நகைக்கடையில் கிளை மேலாளராக வேலை செய்து வருகிறார். இத... மேலும் பார்க்க

குளவி கொட்டியதில் 5 வயது சிறுமி பலி; திருச்சியில் சோகம்

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே உள்ள நெய்குப்பையைச் சேர்ந்தவர் பூபதி. இவர், விவசாய வேலை செய்து வருகிறார். இவருக்குத் திருமணமாகி மனைவி மற்றும் 7 வயதில் ஒரு மகனும், 5 வயதில் அன்சிகா என்ற மகளும் உள்ளனர... மேலும் பார்க்க

திருமணம் கடந்த உறவு; கண்டித்த மூதாட்டியைக் கொன்ற ஜோடி சிக்கியது எப்படி? கிருஷ்ணகிரியில் அதிர்ச்சி

80 வயது மூதாட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில், திருமணம் கடந்த உறவில் இருந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் கிருஷ்ணகிரியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கைதுகிருஷ்ணகிரி அருகேயுள்ள மேல் அம்மனேரி கிரா... மேலும் பார்க்க