செய்திகள் :

கும்பகோணம்: திமுக பிரமுகருக்குச் சொந்தமான லாட்ஜில் பாலியல் தொழில்; 10 பெண்கள் மீட்பு; 3 பேர் கைது

post image

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் உள்ள லாடஜ், ஸ்பா உள்ளிட்ட இடங்களில், அதிகப்படியாக பாலியல் தொழில் நடப்பதாக, எஸ்.பி சுந்தரவதனத்திற்குப் புகார்கள் சென்றுள்ளன.

இது தொடர்பாக, கும்பகோணம் மேற்கு மற்றும் அனைத்து மகளிர் போலீஸ் உள்ளிட்டோர் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தினர். தஞ்சாவூர் வடக்கு மாவட்ட திமுக-வில் பொறியாளர் அணி அமைப்பாளராக உள்ளவர் ராஜாரகுபதி.

நாகேஸ்வரன் கோயில் தெற்கு வீதியில், இவருக்குச் சொந்தமான, பைவ் ஸ்டார் லாட்ஜில் போலீஸார் சோதனையில் ஈடுபட்டனர். இதில் அங்கு பாலியல் நடப்பது கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

பாலியல் சோதனை
பாலியல் சோதனை

அங்கு பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட ஆறு பெண்களை போலீஸார் மீட்டனர். இதே போல், சாரங்கபாணி தெற்கு வீதியில் உள்ள கலர்ஸ் என்ற அழகு நிலையத்தில் நடத்திய சோதனையில் பாலியல் தொழில் நடந்துள்ளது தெரியவந்துள்ளது.

பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட வடமாநிலப் பெண்கள் உள்ளிட்ட நான்கு பெண்களை போலீஸார் மீட்டனர். இதுகுறித்து, மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து, மீட்கப்பட்ட பெண்களை திருச்சியில் உள்ள பெண்கள் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

மேலும், லாட்ஜ் பணியாளர்களான அணைக்கரை பகுதியைச் சோ்ந்த மணிகண்டன் (34), கும்பகோணத்தைச் சோ்ந்த மகேஷ்(50) மற்றும் கலர்ஸ் அழகு நிலைய மேனேஜரான ஜார்கண்ட் மாநிலத்தைச் சோ்ந்த சோட்டால் தாக்கூர் (36) ஆகிய மூவரையும் போலீஸார் கைது செய்தனர். அத்துடன் தலைமறைவாக உள்ள மூன்று பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

போலீஸார் சோதனையைத் தீவிரப்படுத்த வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

ஜெம் வீரமணியைக் கைது செய்யாமலிருக்க கோடிகளில் பேரமா? சிறுமிகளிடம் ரகசிய வாக்குமூலம்; பின்னணி என்ன?

சென்னையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனுவையும், பென் டிரைவரையும் கொடுத்தார். அதன் அடிப்படையில் தொழிலதிபரும் ஜெம் கிராணைட் குழுமத்தின் தலைவரான வீரமணியை சென்ன... மேலும் பார்க்க

`ரூ.60 கோடி தங்கப் புதையல் கிடைச்சிருக்குது!’ – மளிகைக் கடை அண்ணாச்சியை ஏமாற்றி ரூ.20 லட்சம் `அபேஸ்’

தூத்துக்குடி மாவட்டம் மாப்பிள்ளையூரணி பகுதியைச் சேர்ந்த ராஜா, எட்டயபுரத்தில் மளிகைக் கடை நடத்தி வருகிறார். கடந்த ஆகஸ்ட் மாதம் இவரை செல்போனில் தொடர்புகொண்ட முன்பின் அறிமுகமில்லாத நபர் ஒருவர், `மளிகைக் ... மேலும் பார்க்க

தொழில்துறை : `கெஸ்ட் ஹவுஸுக்கு வரச்சொன்ன முதல்வரின் உதவியாளர்' - தெலங்கானா பெண் தொழிலதிபர்

தெலங்கானா மாநிலத்தில் விளம்பரத்துறையில் தொழில் வாய்ப்புகளுக்காக முயன்ற பெண் தொழிலதிபர் ஒருவருக்கு நேர்ந்த கசப்பான அனுபவம் பேசுபொருளாகியிருக்கிறது. தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்தவர் தொழிலதிபர் கே. சோபா ... மேலும் பார்க்க

சாதி ரீதியான துன்புறுத்தலால் மாணவர் தற்கொலை? போராடிய மாணவர்களின் கோரிக்கைகளை ஏற்ற மும்பை ஐஐடி

மும்பை ஐ.ஐ.டியில் தேர்வில் மொபைல் போன் மூலம் காப்பியடித்த மாணவர் சாஹில் பிடிப்பட்டதால் தற்கொலை செய்து கொண்டார். அவர் தற்கொலை செய்து கொண்டதற்கு தேர்வு மையத்தில் இருந்த பேராசிரியர் சூரிய நாராயணா மாணவனை ... மேலும் பார்க்க

காட்பாடி: பானிபூரி கடையில் ரூ.500 மாமூல் கேட்டு மிரட்டல்; 4 இளைஞர்கள் கைது

வேலூர் மாவட்டம், காட்பாடி செங்குட்டை பகுதியில் வசிக்கும் சங்கர் (வயது 42) மற்றும் இவரின் உறவினர் நடராஜன் (32) ஆகியோர் காட்பாடியில் பானிபூரி கடை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், கடந்த 19-ம் தேதி இவர்... மேலும் பார்க்க

மதுரை: கல்லூரி மாணவருக்கு அரிவாள் வெட்டு; ரத்தம் சொட்ட சொட்ட கிராமத்தில் தஞ்சம் புகுந்து மாணவர்கள்

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள அ. கோவில்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சஞ்சய்குமார் (18) இவர் தனது நண்பருடன் மேலூரிலுள்ள தனியார் கல்லூரிக்கு இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்துள்ளார்.அலங்காந... மேலும் பார்க்க