செய்திகள் :

கும்பம் | 2026 ராகு-கேது பெயர்ச்சி: லாபமும் அந்தஸ்தும் அதிகரிக்கும் - 11 பலன்கள் | கே.பி.வித்யாதரன்

post image

1. வரும் 5.12.2026 முதல் 23.6.2028 வரை ராகு பகவான் 12-ம் இடத்தில் அமர்ந்து பலன் தரவுள்ளார். இழுபறியாக இருந்த வேலைகள் உடனே முடியும். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். உங்கள் ஆலோசனையை எல்லோரும் ஏற்பார்கள். மகளின் திருமணத்தைச் சிறப்பாக நடத்துவீர்கள். சிலருக்குக் குழந்தைப் பாக்கியம் கிட்டும்.

ராகு கேது பெயர்ச்சி

2. பெரிய பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வீடு கட்டும் பணியைத் தொடங்க வங்கிக் கடன் கிடைக்கும். வழக்கு சாதகமாகும். தாயாரின் உடல் நலம் சீராகும். பூர்வீகச் சொத்து கைக்கு வரும்.

3. உங்களை ஏமாற்றியவர்களை இனம் கண்டு ஒதுக்குவீர்கள். வரவேண்டிய பணம் தாமதம் இல்லாமல் வரும். வெளிநாட்டுப் பயணம் திருப்திகரமாக அமையும். அலர்ஜி போன்ற பாதிப்புகள் விலகும். இல்லத்தரசிகளுக்கு குடும்பத்தில் அமைதி திரும்பும். கணவரின் வருமானம் உயரும்.

4. ராகு செவ்வாயின் நட்சத்திரத்தில் செல்லும்போது (5.12.26 முதல் 11.3.27 வரை) வீடு கட்டும் பணி இனி முழுமையடையும். புதுச் சொத்து வாங்குவீர்கள். சந்திரனின் நட்சத்திரத்தில் செல்லும்போது (11.3.27 முதல் 18.12.27 வரை) திடீர் பணவரவு உண்டு. ஆடை, ஆபரணம் சேரும்.

5. உங்களின் சப்தமாதிபதியான சூரியனின் நட்சத்திரத்தில் 18.12.2027 முதல் 23.6.2028 வரை செல்வதால் தொட்ட காரியம் வெற்றியடையும்.

6. கேது 6-ம் வீட்டில் அமர்ந்து பலன் தரப்போகிறார். பிரச்னை களின் ஆணிவேரைக் கண்டறிந்து களைவீர்கள். எதிரிகள் நண்பராவார்கள். இழுபறியான வழக்குகள் சாதகமாகும். வெளிநாட்டில் இருப்பவர்களால் ஆதாயம் உண்டு. செலவுகள் குறையும்; சேமிப்பு கூடும். ஷேர் மூலம் பணம் வரும்.

7. குடும்பத்தில் உங்கள் பேச்சுக்கு முக்கியத்துவம் தருவார்கள். வீண் விவாதங்கள் நீங்கும். பழைய கடனை பைசல் செய்யும் அளவிற்கு வருமானம் கூடும். விலையுயர்ந்த ஆடை, ஆபரணங்களை வாங்குவீர்கள். கௌரவப் பதவிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். உடல்நலம் சீராகும். பழைய சொத்தை விற்றுவிட்டுப் புதிய சொத்து வாங்குவீர்கள்.

8. கேது புதன் நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும்போது (5.12.26 முதல் 14.8.27 வரை) எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். சனியின் நட்சத்திரத்தில் (14.8.27 முதல் 22.4.28 வரை) செல்லும்போது, தடைபட்ட வேலைகள் உடனே முடியும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். வீண் அலைச்சல் நீங்கும்.

9. கேது பகவான் தன, லாபாதிபதியுமான குருவின் நட்சத்திரத்தில் 22.4.2028 முதல் 23.6.2028 வரை கேது செல்வதால் பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர் மத்தியில் மதிப்பு கூடும்.

10. வியாபாரத்தில் லாபம் உண்டு. புதிய முதலீடுகள் செய்வீர்கள். தொலைக்காட்சி, வானொலி விளம்பரங்களின் மூலம் உங்கள் தொழிலை விரிவுபடுத்துவீர்கள். ஹோட்டல், இரும்பு, ஸ்பெகுலேஷன் வகைகளால் ஆதாயம் உண்டு.

11. உத்தியோகத்தில் வேலைச்சுமை குறையும். அதிக சம்பளத்துடன் புது வேலை கிடைக்கும். கணினித் துறையினருக்கு, வெளிமாநிலம், வெளிநாடுகளில் புதிய வாய்ப்புகள் தேடி வரும். கலைத்துறையினருக்கு, மூத்த கலைஞர்கள் பக்கபலமாக இருப்பார்கள்.

மீனம் | 2026 ராகு-கேது பெயர்ச்சி : பணப்புழக்கம் அதிகரிக்கும்! - 11 பலன்கள் | கே.பி.வித்யாதரன்

1. ராகு பகவான் லாப வீட்டிற்கு வருவதால் சவாலான காரியங்களையும் சர்வ சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். புதிய முயற்சிகளில் வெற்றி உண்டு. பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் அமைதி திரும்பும். உங்கள் வ... மேலும் பார்க்க

மகரம் | 2026 ராகு-கேது பெயர்ச்சி: கடன்கள் தீரும் காலம் இது! - 11 பலன்கள் | கே.பி.வித்யாதரன்

1. உழைப்பே வெற்றிக்கான விதை என்பதைப் புரிந்துகொண்டு, புதுப்புது வாய்ப்புகளைப் பயன்படுத்தி முன்னேற்றப்பாதையில் நகர்வீர்கள். சிலர், இடவசதியான வீட்டிற்கு மாறுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். சில... மேலும் பார்க்க

தனுசு | 2026 ராகு-கேது பெயர்ச்சி: செலவுகளில் கவனம் தேவை! - 11 பலன்கள் | கே.பி.வித்யாதரன்

1. வாக்குஸ்தானத்தில் ராகு நுழைந்திருப்பதால், சங்கடங்களில் சிக்காதபடி சமயோசிதமாகப் பேசவேண்டும். உங்களின் முன்கோபத்தால் சிலரின் நட்பை இழக்கவேண்டியது வரும். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். புதிய முயற்சிக... மேலும் பார்க்க

விருச்சிகம் | 2026 ராகு-கேது பெயர்ச்சி: `சந்தோஷ செய்தி உண்டு!' - 11 பலன்கள் | கே.பி.வித்யாதரன்

1. ராகு பகவான் 3-ம் இடத்தில் அமர்வதால், எதிலும் வெற்றி உண்டாகும்; முயற்சிகளில் முட்டுக்கட்டைகள் விலகும். பணவரவு உண்டு. குடும்பத்தில் சுப காரியங்கள் தடபுடலாக நடக்கும். கணவன்-மனைவிக்குள் விட்டுக் கொடுத்... மேலும் பார்க்க

துலாம் : 2026 ராகு-கேது பெயர்ச்சி: இனி தொட்டது துலங்கும்! - 11 பலன்கள் | கே.பி.வித்யாதரன்

1. விலகிச்சென்றவர்கள் எல்லாம் உங்களைத் தேடி வரும் சூழல் உண்டாகும். உங்கள் அருமையை எல்லோரும் புரிந்து கொள்வார்கள். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நல்லவிதத்தில் முடியும். கணவன்-மனைவிக்குள் அந்நியோன்யம் அ... மேலும் பார்க்க

கன்னி |2026 ராகு-கேது பெயர்ச்சி: திடீர் யோகம் தேடி வரும்! - 11 பலன்கள் | கே.பி.வித்யாதரன்

1. இந்த ராகு-கேது பெயர்ச்சியில் உங்களின் மதிப்பும் அந்தஸ்தும் உயரும். எனினும், சொந்த பந்தங்களிடம் அதிகம் உரிமை எடுத்துக் கொள்ள வேண்டாம். எவ்விதமான பிரச்னைகளையும் பேசித் தீர்க்கப் பாருங்கள். குடும்பத்த... மேலும் பார்க்க