மகரம் | 2026 ராகு-கேது பெயர்ச்சி: கடன்கள் தீரும் காலம் இது! - 11 பலன்கள் | கே.பி...
விருச்சிகம் | 2026 ராகு-கேது பெயர்ச்சி: `சந்தோஷ செய்தி உண்டு!' - 11 பலன்கள் | கே.பி.வித்யாதரன்
1. ராகு பகவான் 3-ம் இடத்தில் அமர்வதால், எதிலும் வெற்றி உண்டாகும்; முயற்சிகளில் முட்டுக்கட்டைகள் விலகும். பணவரவு உண்டு. குடும்பத்தில் சுப காரியங்கள் தடபுடலாக நடக்கும். கணவன்-மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப் போவீர்கள். பிள்ளைகளின் ஆசைகளைப் பூர்த்தி செய்வீர்கள்.

2. வி.ஐ.பிகள், கல்வியாளர்கள், தொழிலதிபர்கள் என உங்களின் நட்பு வட்டம் விரிவடையும். வெளியூர்ப் பயணங்கள் திருப்தியாக இருக்கும். தாயாருடனான கருத்துமோதல் நீங்கும். அவரின் உடல்நிலை சீராகும். அரசு வேலைகளில் வெற்றியுண்டு.
3. குடும்பத்துடன் புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். வீடு கட்டும் பணியை முடிக்க வங்கிக் கடனுதவி கிடைக்கும். பேச்சில் தெளிவு பிறக்கும். அடகில் இருந்த நகைகளை மீட்பீர்கள். சிலருக்குப் புது ஆபரணங்கள் வாங்கும் யோகமும் உண்டாகும்.
4. ராகு செவ்வாயின் நட்சத்திரத்தில் செல்லும்போது (5.12.26 முதல் 11.3.27 வரை) ஒரு புறம் புகழும், பணவரவும் இருந்தாலும், மறுபுறம் அலைச்சல் இருக்கவே செய்யும். முன்கோபம் விலகும்.
5. சந்திரனின் நட்சத்திரத்தில் செல்லும்போது (11.3.27 முதல் 18.12.27 வரை) பணப்புழக்கம் அதிகரிக்கும். பழைய கடனை பைசல் செய்வீர்கள். சூரியனின் நட்சத்திரத்தில் ராகு செல்லும்போது (18.12.27 முதல் 23.6.28 வரை) சொந்த ஊரில் செல்வாக்கு உயரும். புது வேலை கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும்.
6. கேது பகவான் உங்கள் ராசிக்கு 9-ம் வீட்டில் அமர்ந்து பலன் தரப்போகிறார். சந்தோஷ செய்தி கிடைக்கும். வேலைச்சுமை குறையும். பணியிடத்தில் நிம்மதியான சூழல் அமையும். குடும்பத்தில் நிலவி வந்த கூச்சல் குழப்பங்கள் மாறும். மூத்த சகோதரர் பக்கபலமாக இருப்பார். வெளிவட்டாரத்தில் விமர்சனங்களைத் தவிருங்கள்.
7. தந்தை வழிச் சொத்துக்களை அடைவதில் அலைச்சலும் செலவுகளும் ஏற்படும். பத்திரங்களைக் கவனமாகக் கையாளுங்கள். பழைய பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பீர்கள். அயல்நாட்டுப் பயணம் சாதகமாக அமையும். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும்.
8. கேது புதன் நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும்போது (5.12.26 முதல் 14.8.27 வரை) வீண் அலைச்சல், டென்ஷன் ஏற்படும். திடீர் பயணங்களால் ஆதாயம் உண்டு.
9. கேது சனியின் நட்சத்திரத்தில் (14.8.27 முதல் 22.4.28 வரை) செல்லும்போது, தடைப்பட்ட வேலைகளில் வெற்றி உண்டு. பணவரவு உண்டு. குருவின் நட்சத்திரத்தில் செல்லும்போது (22.4.28 முதல் 23.6.28 வரை) எதிர்பார்த்த வகையில் உதவிகள் கிடைக்கும்.
10. இல்லத்தரசிகளுக்கு மதிப்பு மரியாதை கூடும். ஆபரணம் சேரும். வியாபாரத்தில் திடீர் லாபம் அதிகரிக்கும். கூட்டுத் தொழிலில் புதிய பங்குதாரர்கள் அறிமுகமாவார்கள். ஏஜென்ஸி, புரோக்கரேஜ், கடல் வாழ் உயிரினங்கள், ஏற்றுமதி - இறக்குமதி வகைகளால் ஆதாயம் உண்டு.
11. உத்தியோகத்தில் கடின வேலைகளையும் எளிதாக முடித்துக் காட்டுவீர்கள். கேட்ட இடத்துக்கே மாற்றம் கிடைக்கும். சம்பளம் அதிகரிக்கும். கணினித் துறையினருக்கு வெளிநாட்டிலிருந்து ஒப்பந்த அடிப்படையில் பணிகள் கிடைக்கும். கலைத்துறையினருக்குப் புது வாய்ப்புகள் தேடி வரும்.












