சிவகங்கை: 'ஆப்சென்ட்' ஆன தவெக MLA-க்கள்; கையெழுத்திட்ட உதவியாளர்கள்; கொதித்த கார...
ரிஷபம் | 2026 ராகு-கேது பெயர்ச்சி: அகலக்கால் கூடாது; வீடு வாங்குவதில்.! 11 பலன்கள்| கே.பி.வித்யாதரன்
ரிஷப ராசியில் பிறந்த உங்களை எதிர்த்துப் போரிடுவது கடினம். எதிரிக்கு எப்போதும் சவாலாகவே இருப்பீர்கள். ஆனாலும், நீங்கள் இயல்பிலேயே சாதுவானவர். மற்றவர்களுக்கு உதாரண புருஷராகத் திகழ்வீர்கள். உங்களுக்கு இந்த ராகுகேது பெயர்ச்சி எப்படி இருக்கும் என்பதைத் தெரிந்து கொள்வோமா?

1. ரிஷப ராசிக்காரர்களுக்கு 5.12.2026 முதல் ராகுபகவான் ராசிக்கு 9-ம் வீட்டில் அமர்ந்து பலன் தரவுள்ளார். வெளி வட்டாரத்தில் உங்கள் பேச்சுக்கு மதிப்பு கூடும். கிடப்பில் கிடந்த பல காரியங்களை முழு மூச்சுடன் முடித்துக் காட்டுவீர்கள்.
2. கணவன்-மனைவிக்குள் பாசப்பிணைப்பு அதிகரிக்கும். குழந்தை இல்லாத தம்பதியருக்குக் குழந்தைப் பாக்கியம் உண்டாகும். துரோகிகளை இனம் கண்டறிந்து விலக்குவீர்கள். குடும்பத்துடன் சென்று குலதெய்வக் கோயில் நேர்த்திக் கடனை நிறைவேற்றுவீர்கள். இந்த ராசியைச் சேர்ந்த இல்லத்தரசிகளுக்கு விலையுயர்ந்த ஆடை ஆபரணங்கள் சேரும்.
3. ஊர்க் கோயில்கள் மற்றும் பொது நிகழ்ச்சிகளில் முன்னுரிமை கொடுக்கப்படும். அரசாங்க அதிகாரிகளின் நட்பு கிடைக்கும். பூர்வீகச் சொத்தை விற்று, வேறிடத்தில் இடம் வாங்குவீர்கள். பல வகைகளிலும் எதிர்பாராத பணவரவுகள் உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். அதனால் சேமிப்பும் உயரும். இதுவரை மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கி, சிந்தித்துச் செயல்படுவீர்கள்.
4. டிசம்பர்-5 முதல் செவ்வாயின் நட்சத்திரத்தில் சஞ்சரிக்கிறார் ராகு. அடுத்த வருடம் மார்ச் 11 வரையிலும், உங்கள் வீட்டில் சுப காரியங்களை எதிர்பார்க்கலாம். சொந்தமாக நிலம் வாங்கும் முயற்சியில் இருப்பவர்களுக்கு நல்ல பலன் கிடைக்கும். புது வீடு வாங்கும் யோகமும் உண்டு.
5. 11.3.2027 முதல் 18.12.2027 வரை சந்திரனின் நட்சத்திரத்தில் ராகு செல்கிறார். இந்தக் காலகட்டத்தில் உடல்நலக்குறைவு,சோர்வு நீங்கும். தங்க ஆபரணங்கள் சேரும். சிலருக்கு அடகில் இருந்த நகைகளை மீட்டெடுக்க வாய்ப்பு வரும். 2027 டிசம்பர் 18 முதல் ராகு சூரியனின் நட்சத்திரத்தில் பயணம் செய்வார். அதுமுதல் 2028 ஜூன் வரையிலும் அரசாங்கம் தொடர்பான காரியங்களில் வெற்றி கிடைக்கும். மதிப்பு - மரியாதை அதிகரிக்கும்.
6. கேது பகவான் கடகத்தில்... உங்கள் ராசிக்கு 3-ல் அமர்கிறார். வி.ஐ.பிகள் அறிமுகமாவார்கள். மனதில் இருந்துவந்த படபடப்பு, தடுமாற்றம் நீங்கும். பங்காளிப் பிரச்னைகள், சொத்துத் தகராறுகள் என எல்லாவற்றிலிருந்து விடுபடுவீர்கள்.
7. அரைகுறையாக நின்றுபோன காரியங்கள் இனி முழுமை அடையும். பிள்ளைகளின் நீண்டநாள் ஆசைகளைப் பூர்த்தி செய்வீர்கள். தாயாருடன் இருந்து வந்த கருத்துமோதல் நீங்கும். அவரின் உடல்நிலை சீராகும்.
8. டிச.5 முதல் அடுத்த வருடம் ஆகஸ்ட் 14 வரையிலும் கேது புதனின் நட்சத்திரத்தில் சஞ்சரிக்கிறார். அப்போது மறைமுக எதிர்ப்புகள் விலகும். எதிர்பார்த்த வகையில் உதவிகள் கிடைக்கும்.
9. உங்களின் பாக்ய, ஜீவனாதிபதியான சனியின் நட்சத்திரத்தில் 14.8.2027 முதல் 22.4.2028 வரை செல்வதால் வீட்டில் தடைபட்ட சுபகாரியங்கள் நடக்கும். உடல் ஆரோக்கியம் திருப்தி தரும். அதேபோல் கேதுவானவர் உங்களின் அஷ்டம, லாபாதிபதியான குருவின் நட்சத்திரத்தில் (22.4.2028 முதல் 23.6.2028 வரை) செல்லும் காலத்தில் பணப்புழக்கம் திருப்திகரமாக இருக்கும்.
10 வியாபாரத்தில் எதன்பொருட்டும் அகலக்கால் வைக்கக் கூடாது. புதிய முயற்சிகளில் வீட்டுப் பெரியவர்களின் ஆலோசனையைக் கேளுங்கள். அனுபவம் இல்லாத புதுத்துறைகளில் இறங்கவேண்டாம். இயன்றவரையிலும் புதிய முதலீடுகளை தவிர்த்துவிட்டு இருப்பதை வைத்து லாபம் சம்பாதிக்க வேண்டும்.
11. பணியில் வேலைப்பளு இருந்தாலும் சமாளித்து மீள்வீர்கள். வெகுகாலமாக நீங்கள் எதிர்பார்த்த பதவி உயர்வு இப்போது வந்து சேரும். சம்பள உயர்வும் உண்டு. இந்த ராசியைச் சேர்ந்த கணினித் துறையினருக்குப் புது வேலை வாய்ப்பு கிடைக்கும். அதன் மூலம் அதிக சம்பளமும் வந்து சேரும். கலைத்துறையினருக்குப் புது சிந்தனைகள் உதிக்கும்; விமர்சனங்கள் செய்யவேண்டாம்.














