செய்திகள் :

இடைத்தேர்தல்: "2 தொகுதிகளில் நடத்தலாம்; 3 தொகுதிகளுக்கு வழக்கு முடியட்டும்" - உயர் நீதிமன்றம்

post image

திருச்சி கிழக்கு உள்பட 7 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில், திருநெல்வேலியைச் சேர்ந்த வெங்கடாசலபதி என்பவர், திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை, பெருந்துறை, அம்பாசமுத்திரம் ஆகிய 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த தடை விதிக்க வேண்டும் எனச் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை அளித்திருந்தார். இது தொடர்பான வழக்கு விசாரணை நடந்துவந்தது.

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

இந்த மனு மீதான விசாரணை கடந்த ஜூலை 10ஆம் தேதியன்று வந்த போது நீதிபதிகள், வழக்கு நிலுவையில் இருக்கும் போது தேர்தலுக்கான அறிவிப்பு வெளியிடக்கூடாது எனக் குறிப்பிட்டு திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை, பெருந்துறை, அம்பாசமுத்திரம் ஆகிய 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்க தேர்தல் ஆணையத்துக்குத் தடை விதித்து உத்தரவிட்டனர். அதனால், மதுராந்தகம், தராபுரம் தொகுதிகளுக்கும் மட்டும் இடைத்தேர்தல் நடந்து முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

இந்த நிலையில், தற்போது அந்த வழக்கு தொடர்பாக அடுத்தக்கட்ட விசாரணை இன்று நடைபெற்றது. அதில், பெருந்துறை, அம்பாசமுத்திரம் ஆகிய தொகுதிகளுக்கு தேர்தல் நடத்துவதற்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை நீக்கி உத்தரவிட்டிருக்கிறது.

மேலும், மீதமிருக்கும் கரூர், விராலிமலை, திருச்சி கிழக்கு ஆகிய 3 தொகுதிகளுக்கும் வழக்கு முடிவுக்குப் பிறகு தேர்தல் நடத்தலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

இதற்கிடையில், கொளத்தூர் தொகுதி எம்.எல்.ஏ வி.எஸ் பாபு மறைவையொட்டி கொளத்தூர் தொகுதியிலும் இடைத்தேர்தலுக்கான சூழல் ஏற்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

சிவகங்கை: 'ஆப்சென்ட்' ஆன தவெக MLA-க்கள்; கையெழுத்திட்ட உதவியாளர்கள்; கொதித்த கார்த்தி சிதம்பரம்

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டம் நடைபெற்றது. கார்த்தி சிதம்பரம் எம்.பி., தலைமையில் நேற்று நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், மாவட்ட ஆ... மேலும் பார்க்க

``மதுரை ரயில் நிலைய வளாகத்தில் எந்தத் தர்ஹாவும் இல்லை" - மத்திய அமைச்சருக்கு சு.வெங்கடேசன் பதிலடி

தமிழக பா.ஜ.க சாா்பில் அரசமைப்பு தின விழா சென்னை தியாகராய நகரில் நேற்று நடைபெற்றது. இதில், சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்ட மத்திய ரயில்வே துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ், ``நமது அரசியலமைப்புச் சட்டத்த... மேலும் பார்க்க

உதயநிதி பிறந்தநாள் பேனர்: ``ஒருசிலரது இருப்பைக் காட்ட 2 உயிர்களை இழந்துள்ளோம்" - நிர்மல் குமார்

திமுக இளைஞரணி செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின் இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார். இந்நிலையில் திருவள்ளூர் வாணியன் சத்திரம் பகுதியில் திமுகவினர் வாழ்த்து பேனர் வைக்கும் பண... மேலும் பார்க்க

கள்ளக்குறிச்சி: பெண் அலுவலரை மிரட்டிய திமுக எம்.எல்.ஏ வசந்தம் கார்த்திக்கேயன் மீது வழக்கு!

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் ஒன்றிய தகடி கிராமத்தில் காலை உணவுத் திட்டப் பணிக்கு பணியாளரை நியமிப்பது தொடர்பாக கடந்த சில தினங்களுக்கு முன் ரிஷிவந்தியம் தொகுதி திமுக எம்எல்ஏ வசந்தம் கார்த்திக... மேலும் பார்க்க

டெல்லியில் சைபர் குற்ற கால்செண்டர்; அடிமையாக இருந்த 164 வெளிநாட்டினர்; விசாரணையில் பகீர் தகவல்கள்

இந்தியாவில் அதிக அளவில் இணைய சைபர் குற்றங்கள் நடக்கிறது. குறிப்பாக டிஜிட்டல் கைது, கடன், பங்குச்சந்தை முதலீடு எனப் பல்வேறு விதமான சைபர் மோசடிகள் ஆன்லைனில் நடக்கின்றன. இவை அனைத்துமே அதிகமாக போன் மூலமே ... மேலும் பார்க்க

அரசு மருத்துவமனை கழிவறையில் முதியவர் சடலம்; இறந்து 3 நாள்களுக்குப் பிறகு மீட்பு; நடந்தது என்ன?

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் சித்தூர் பகுதியைச் சேர்ந்தவர் மாக்குட்டி ராவத்தர் (77). சுவாசக் கோளாறு காரணமாகக் கடந்த 16-ம் தேதி திருச்சூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.... மேலும் பார்க்க