செய்திகள் :

மீனம் | 2026 ராகு-கேது பெயர்ச்சி : பணப்புழக்கம் அதிகரிக்கும்! - 11 பலன்கள் | கே.பி.வித்யாதரன்

post image

1. ராகு பகவான் லாப வீட்டிற்கு வருவதால் சவாலான காரியங்களையும் சர்வ சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். புதிய முயற்சிகளில் வெற்றி உண்டு. பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் அமைதி திரும்பும். உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். கணவன்-மனைவிக்குள் விட்டுக்கொடுத்துப் போவீர்கள்.

ராகு கேது பெயர்ச்சி பலன்கள் மீனம்

2. வெளிவட்டாரத்தில் மதிப்பு, மரியாதை கூடும். ஆரோக்கியமாகவும் உற்சாகத்துடனும் திகழ்வீர்கள். வெளிநாட்டில் இருக்கும் உறவினர்கள், நண்பர்களால் ஆதாயம் உண்டு. சொத்துப் பிரச்னைகள் தீரும்.

3. குழந்தை இல்லாதவர்களுக்குக் குழந்தைப் பாக்கியம் கிட்டும். மகளின் திருமண முயற்சிகளில் தடைகள் விலகும். மகனுக்கு, நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும்.

4. ராகு செவ்வாயின் நட்சத்திரத்தில் செல்லும்போது (5.12.26 முதல் 11.3.27 வரை) புதுச் சொத்து, வீடு வாங்குவீர்கள். பணப்புழக்கம் இருக்கும். பூர்வீகச் சொத்துப் பிரச்னைகள் சாதகமாக முடியும்.

5. ராகு பகவான் சந்திரனின் நட்சத்திரத்தில் செல்லும்போது (11.3.27 முதல் 18.12.27 வரை) எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். நினைத்த காரியங்கள் நினைத்த நேரத்தில் நடந்தேறும். சூரியனின் நட்சத்திரத்தில் ராகு செல்லும்போது (18.12.27 முதல் 23.6.28 வரை) அரசு வேலைகள் முழுமையடையும். தந்தை வழியில் நிம்மதி கிட்டும்.

6. கேது பகவான் உங்கள் ராசிக்கு 5-ம் வீட்டில் அமர்ந்து பலன் தரப்போகிறார். ஞானம், பக்தி அதிகரிக்கும். எனினும் பூர்வீகச் சொத்தில் வில்லங்கம் ஏற்படலாம். குடும்பத்தில் சிறு சிறு பிரச்னைகள் வந்தாலும் சாமர்த்தியமாகச் சமாளிப்பீர்கள். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை காட்டவேண்டும்.

7. உத்தியோகம் அல்லது கல்வியின் பொருட்டு பிள்ளைகள் உங்களைப் பிரிந்து செல்வார்கள். அவர்களின் திருமண விஷயத்தில் அவசரம் கூடாது. கர்ப்பிணிகள் நீண்ட தூர பயணங்களைத் தவிர்க்கவும். அலட்சியப்படுத்திய நண்பர்கள், உறவினர்கள் வலிய வந்து பேசுவார்கள். தாய் வழி உறவுகளால் சங்கடங்கள் வரும். அவ்வப்போது எதையோ இழந்ததைப்போல் மனம் தத்தளிக்கும்.

8. கேது புதன் நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும்போது (5.12.26 முதல் 14.8.27 வரை) பழைய பிரச்னைக்குத் தீர்வு கிடைக்கும். புதியவர்கள் அறிமுகமாவார்கள். அவர்கள் மூலம் சிற்சில விஷயங்களில் ஆதாயம் உண்டாகும்.

9. சனியின் நட்சத்திரத்தில் கேது பகவான் (14.8.27 முதல் 22.4.28 வரை) செல்லும்போது, மறைமுக எதிர்ப்புகள் விலகும். பணவரவு உண்டு. ஆடம்பரச் செலவுகளைக் கட்டுப்படுத்துவீர்கள். அவர், குருவின் நட்சத்திரத்தில் செல்லும்போது (22.4.28 முதல் 23.6.28 வரை) எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். திடீர் பணவரவு உண்டு. உடல் நலம் சீராகும்.

10. இல்லத்தரசிகளுக்கு, ஆபரணச் சேர்க்கை உண்டு. வியாபாரத்தில் அதீத முன்னேற்றம் உண்டாகும். பெரிய முதலீடுகள் வேண்டாம். ஹோட்டல், இரும்பு, எலெக்ட்ரானிக்ஸ் சாதனங்கள், துணி வகைகளால் லாபமடைவீர்கள். பெரிய நிறுவனத்தின் ஒப்பந்தம் கிடைக்கும்.

11. உத்தியோகத்தில் உங்களுக்கான அங்கீகாரம் கிடைக்கும். மேலதிகாரி இணக்கமாக இருப்பார். கணினித் துறையினருக்கு, நிறுவனத்தின் மூலமாக ஒப்பந்த அடிப்படையில் வெளிநாடு செல்வீர்கள். கலைத் துறையினருக்குப் புது வாய்ப்புகள் கதவைத் தட்டும். தக்கபடி பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

கும்பம் | 2026 ராகு-கேது பெயர்ச்சி: லாபமும் அந்தஸ்தும் அதிகரிக்கும் - 11 பலன்கள் | கே.பி.வித்யாதரன்

1. வரும் 5.12.2026 முதல் 23.6.2028 வரை ராகு பகவான் 12-ம் இடத்தில் அமர்ந்து பலன் தரவுள்ளார். இழுபறியாக இருந்த வேலைகள் உடனே முடியும். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். உங்கள் ஆலோசனையை எல்லோரும் ஏற்பார்க... மேலும் பார்க்க

மகரம் | 2026 ராகு-கேது பெயர்ச்சி: கடன்கள் தீரும் காலம் இது! - 11 பலன்கள் | கே.பி.வித்யாதரன்

1. உழைப்பே வெற்றிக்கான விதை என்பதைப் புரிந்துகொண்டு, புதுப்புது வாய்ப்புகளைப் பயன்படுத்தி முன்னேற்றப்பாதையில் நகர்வீர்கள். சிலர், இடவசதியான வீட்டிற்கு மாறுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். சில... மேலும் பார்க்க

தனுசு | 2026 ராகு-கேது பெயர்ச்சி: செலவுகளில் கவனம் தேவை! - 11 பலன்கள் | கே.பி.வித்யாதரன்

1. வாக்குஸ்தானத்தில் ராகு நுழைந்திருப்பதால், சங்கடங்களில் சிக்காதபடி சமயோசிதமாகப் பேசவேண்டும். உங்களின் முன்கோபத்தால் சிலரின் நட்பை இழக்கவேண்டியது வரும். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். புதிய முயற்சிக... மேலும் பார்க்க

விருச்சிகம் | 2026 ராகு-கேது பெயர்ச்சி: `சந்தோஷ செய்தி உண்டு!' - 11 பலன்கள் | கே.பி.வித்யாதரன்

1. ராகு பகவான் 3-ம் இடத்தில் அமர்வதால், எதிலும் வெற்றி உண்டாகும்; முயற்சிகளில் முட்டுக்கட்டைகள் விலகும். பணவரவு உண்டு. குடும்பத்தில் சுப காரியங்கள் தடபுடலாக நடக்கும். கணவன்-மனைவிக்குள் விட்டுக் கொடுத்... மேலும் பார்க்க

துலாம் : 2026 ராகு-கேது பெயர்ச்சி: இனி தொட்டது துலங்கும்! - 11 பலன்கள் | கே.பி.வித்யாதரன்

1. விலகிச்சென்றவர்கள் எல்லாம் உங்களைத் தேடி வரும் சூழல் உண்டாகும். உங்கள் அருமையை எல்லோரும் புரிந்து கொள்வார்கள். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நல்லவிதத்தில் முடியும். கணவன்-மனைவிக்குள் அந்நியோன்யம் அ... மேலும் பார்க்க

கன்னி |2026 ராகு-கேது பெயர்ச்சி: திடீர் யோகம் தேடி வரும்! - 11 பலன்கள் | கே.பி.வித்யாதரன்

1. இந்த ராகு-கேது பெயர்ச்சியில் உங்களின் மதிப்பும் அந்தஸ்தும் உயரும். எனினும், சொந்த பந்தங்களிடம் அதிகம் உரிமை எடுத்துக் கொள்ள வேண்டாம். எவ்விதமான பிரச்னைகளையும் பேசித் தீர்க்கப் பாருங்கள். குடும்பத்த... மேலும் பார்க்க