செய்திகள் :

கூடியது சட்டமன்றம்: மறைந்த முன்னாள் உறுப்பினர்கள், பிரபலங்களுக்கு இரங்கல் | Live

post image

தமிழக சட்டசபையில் த.வெ.க. அரசின் முதல் பட்ஜெட் நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்டது. நேற்று வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், பட்ஜெட் மீதான பொது விவாதம் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது.

கூட்டத்தொடர் தொடங்கியதும், மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து, பாடகி எஸ். ஜானகி, இயக்குநர், நடிகர் பாக்கியராஜ் உள்ளிட்ட மறைந்த பிரபலங்களுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது.

சட்டசபை

இரங்கல் தீர்மானத்திற்கு பின்னர் கேள்வி நேரம் சட்டசபையில் எடுத்துக் கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின்னர் கேள்வி நேரம் முடிந்ததும் 2026 27 ஆண்டுக்கான பொது பட்ஜெட் பட்டியல் பட்ஜெட் மீதான பொது விவாதம் தொடங்கும். இந்த விவாதங்களில் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து பேச இருக்கிறார்கள். உறுப்பினர்களின் கேள்விகளுக்கு நிதி அமைச்சர் மரிய வில்சன் மற்றும் வேளாண் துறை அமைச்சர் வினோத் ஆகியோர் பதிலளிப்பார்கள்.

வெள்ளத்தில் சிக்கியவரை உயிரை கொடுத்து காப்பாற்றிய மீட்ப்புப் பணியாளர் - உடலை அவமதித்த அதிகாரிகள்

கேரள மாநிலம் திருவனந்தபுரம் கல்லியூர் கிழக்கே தெற்றிவிளைச் சேர்ந்தவர் ராஜேஷ். இவர் கண்ணூர் செறுபுழா மீந்துள்ளி பகுதியில் நீச்சல் பயிற்சியாளராகவும், மீட்புப்பணியாளராகவும் பணிபுரிந்துவந்தார். கேரளத்தில்... மேலும் பார்க்க

"பேப்பர் படித்திருந்தாலே விஷயம் தெரிந்திருக்கும்" - விஜய் vs உதயநிதி ; சட்டசபையில் காரசாரம்

தமிழக சட்டசபையில் த.வெ.க. அரசின் முதல் பட்ஜெட் நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்டது. நேற்று வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், பட்ஜெட் மீதான பொது விவாதம் இன்று நடைபெற்று வருகிறது. இந்நிலைய... மேலும் பார்க்க

`` 'வெற்றி' என்று பெயர் வைத்து, வெற்றிக் கழகத்தை நிலைநிறுத்த முயல்வது தவறு!" - தமிழிசை சௌந்தரராஜன்

பா.ஜ.க-வின் தலைவர்களில் ஒருவரான எச்.ராஜா ‘கந்தன் மலை’ என்ற படத்தில் நடித்திருந்தார். தற்போது ‘செய் செய்யாதே’ என்ற படத்தின் மூலம் மீண்டும் சினிமாவில் நடித்துள்ளார். ஹரினி சுப்பு, சினி கிரியேஷன்ஸ் தயாரி... மேலும் பார்க்க

புதிய அரசின் முதல் பட்ஜெட்... எதிர்பார்ப்பும் நிதர்சனமும்!

மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் ‘மாற்றம்’ என்ற முழக்கத்தோடு ஆட்சிக்கு வந்த புதிய அரசு, 2026-27-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்திருக்கிறது. ஏற்கெனவே, மாநில நிதிநிலை அழுத்தத்தில் இருப்பதாகக் கூ... மேலும் பார்க்க

புதுச்சேரி: இரண்டு நீதிமன்றங்களில் உறுதியான தண்டனை; ஆனாலும், முன்னாள் எம்எல்ஏ விடுதலையானது எப்படி?

புதுச்சேரி அரசின் பொதுப்பணித் துறையில் 1997 முதல் 2006-ம் ஆண்டு வரை பணியாற்றியவர் ஆனந்தன். முதல்வர் ரங்கசாமியின் நெருங்கிய நண்பர். இவர் பதவியில் இருந்த காலகட்டத்தில் வருவாய்க்கு அதிகமாக ரூ.3.75 கோடி ச... மேலும் பார்க்க