செய்திகள் :

கேட்க முடியாத காதுகளால், இதயத்தின் குரலைக் கேட்ட பெண் மருத்துவர்!

post image

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்

மருத்துவ வரலாற்றில் சிலர் தங்கள் கண்டுபிடிப்புகளால் மட்டுமல்ல; தங்களுக்கே ஏற்பட்ட தடைகளைத் தாண்டி, மனிதகுலத்திற்குப் புதிய பாதையை உருவாக்கியதாலும் நினைவுகூரப்படுகிறார்கள். அத்தகைய மகத்தான மருத்துவ முன்னோடிகளில் ஒருவர் அமெரிக்க இருதயநோய் நிபுணர் டாக்டர்.ஹெலன் புரூக் டாசிக். பிறவிக் இதயக் குறைபாடுகளால் நீலநிறமாக மாறிய குழந்தைகளுக்கு நம்பிக்கை அளித்ததுடன், தாலிடோமைடு மருந்தின் பேராபத்தையும் அமெரிக்காவில் தடுத்தவர் அவர்.

ஹெலன் புரூக் டாசிக் 1898-ஆம் ஆண்டு மே மாதம் 24-ஆம் நாள் அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் மாநிலம் கேம்பிரிட்ஜில் பிறந்தார். அவரது தந்தை பிராங்க் டபிள்யூ.டாசிக், ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் புகழ்பெற்ற பொருளியல் பேராசிரியரும் அறிஞருமாவார். அவரது தாய் எடித் கில்ட், ரேட்க்ளிஃப் கல்லூரியின் ஆரம்பகால மாணவியர்களில் ஒருவராகவும் உயிரியல் மீது ஆர்வம் கொண்டவராகவும் இருந்தார். ஹெலனுக்கு மூன்று மூத்த உடன்பிறப்புகள் இருந்தனர்.

ஹெலன் டாசிக் தனது ஆரம்பக் கல்வியை மாசசூசெட்ஸ் மாகாணத்தில் உள்ள கேம்பிரிட்ஜ் நகரில் தொடங்கினார். சிறுவயதிலேயே தீவிரமான டிஸ்லெக்ஸியா என்ற கற்றல் குறைபாட்டால் பாதிக்கப்பட்டதால், அவருக்குப் பாடங்களைப் படிப்பதிலும் புரிந்துகொள்வதிலும் பெரும் சிரமம் இருந்தது. இயற்கை விஞ்ஞானியான ஹெலனின் தாயார், ஹெலனுக்குப் பள்ளிக்கல்வி தாண்டி இயற்கையின் மீது ஆர்வம் வர உதவினார்.

ஆனால், ஹெலனுக்கு 11 வயது இருக்கும்போது அவரது தாய் காசநோயால் இறந்துபோனார். அதன் பிறகு, அவரது தந்தை ஹெலனின் டிஸ்லெக்ஸியா குறைபாட்டைச் சரிசெய்யவும், ஹெலனின் பள்ளிக்கல்வி தடையின்றித் தொடரவும் ஹெலனின் தந்தை பல மணிநேரங்கள் அவருடன் செலவிட்டுப் பாடம் கற்றுக்கொடுத்தார்.

பள்ளிக்கல்வி படிக்கும் காலத்தில் ஹெலனுக்கும் காசநோய் பாதிப்பு ஏற்பட்டதால், சில ஆண்டுகள் பள்ளிப் படிப்பில் தொய்வு ஏற்பட்டது. கக்குவான் இருமல் காரணமாக ஹெலன் சிறுவயதிலேயே செவித்திறன் இழப்பையும் எதிர்கொண்டார். இத்தனை சவால்களையும் தாண்டி ஹெலன் 1917-ஆம் ஆண்டு கேம்பிரிட்ஜ் பெண்கள் பள்ளியில் தனது உயர்நிலைப் பள்ளிப் படிப்பை வெற்றிகரமாக முடித்துத் தேர்ச்சி பெற்றார்

1917-ஆம் ஆண்டு ரேட்க்ளிஃப் கல்லூரியில் சேர்ந்து இரண்டு ஆண்டுகள் பயின்று, கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் தொடர்ந்து படித்து 1921-ஆம் ஆண்டு இளங்கலைப் பட்டம் பெற்றார். மருத்துவம் பயில வேண்டும் என்ற அவரது விருப்பத்திற்கு அப்போது நிலவிய பாலினப் பாகுபாடு பெரும் தடையாக அமைந்தது.

ஹார்வர்ட் மருத்துவப் பள்ளி பெண்களை மருத்துவப் பட்டப்படிப்பில் சேர்க்கவில்லை. ஹார்வர்ட் பொது சுகாதாரப் பள்ளியிலும் அவருக்கு சமமான கற்றல் வாய்ப்பு வழங்கப்படவில்லை; ஆய்வகத்தில் தனியாக அமர வேண்டிய நிலை ஏற்பட்டதுடன், அங்கு பட்டம் வழங்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதனால் பாஸ்டன் பல்கலைக்கழகத்தில் உடற்கூறியல் பயின்றார். அங்கு அவரது திறமையை உணர்ந்த பேராசிரியர் அலெக்சாண்டர் பெக், பெண்களைச் சேர்த்துக்கொள்ளும் மருத்துவப் பள்ளியில் சேருமாறு அவரை ஊக்கப்படுத்தினார். அவரது அறிவுரையை ஏற்று, பெண்களுக்கு மருத்துவக் கல்வி வழங்கிய அரிய நிறுவனங்களில் ஒன்றான ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக மருத்துவப் பள்ளியில் சேர்ந்தார். அங்கு தனது மருத்துவக் கல்வியை வெற்றிகரமாக முடித்து 1927-ஆம் ஆண்டு முதுநிலை மருத்துவப் பட்டம் (எம்.டி) பெற்றார்.

உடற்கூறியல் துறையில் முழுநேரப் பணிக்கான வாய்ப்பு கிடைக்காத நிலையில், ஹெலன் குழந்தை மருத்துவத்தைத் தனது பணித்துறையாகத் தேர்ந்தெடுத்தார். 1930-ஆம் ஆண்டு ஜான்ஸ் ஹாப்கின்ஸ் மருத்துவமனையின் ஹாரியட் லேன் குழந்தைகள் மருத்துவமனையில் உள்ள குழந்தைகள் இதயப் பிரிவின் தலைவராக பொறுப்பேற்றார். அங்கு பிறவியிலேயே இதயக் குறைபாடுகளுடன் பிறந்த ஏராளமான குழந்தைகளை அவர் தொடர்ந்து கவனித்து வந்தார்.

குறிப்பாக, டெட்ராலஜி ஆஃப் ஃபாலோட் எனப்படும் பிறவியிலேயே ஏற்படும் இதயக் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் உடலில் போதுமான அளவு ஆக்சிஜன் கிடைக்காததால், அவர்களின் தோலும் உதடுகளும் நீலநிறமாக மாறுவதை அவர் கவனித்தார். இந்த “நீலக் குழந்தைகள்” எதிர்கொண்ட உயிராபத்தான நிலை அவரை ஆழமாகப் பாதித்ததுடன், அதற்கான தீர்வைக் கண்டறிய தீவிரமாக ஆராயத் தூண்டியது

நுரையீரலுக்குச் செல்லும் இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதன் மூலம், குழந்தைகளின் உடலுக்குக் கிடைக்கும் ஆக்சிஜன் அளவை உயர்த்த முடியும் என்ற தனது கருத்தை அடிப்படையாகக் கொண்டு ஹெலன், அறுவைச் சிகிச்சை நிபுணர் ஆல்ஃப்ரெட் பிளாக், ஆய்வக நிபுணர் விவியன் தாமஸ் ஆகியோருடன் இணைந்து ஒரு புதிய அறுவைச் சிகிச்சை முறையை உருவாக்கினார்.

முதல்முறையாக இந்த அறுவை சிகிச்சை 1944-ஆம் ஆண்டு வெற்றிகரமாக செய்யப்பட்டது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க அறுவைச் சிகிச்சை முறை பிளாக்–தாமஸ்–டாசிக் ஷண்ட் என அழைக்கப்பட்டது. இந்தக் கண்டுபிடிப்பு ஆயிரக்கணக்கான குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றியதுடன், நவீன இதய அறுவைச் சிகிச்சையின் வளர்ச்சியிலும் முக்கியமான மைல்கல்லாக அமைந்தது.

மருத்துவப் பணிக்காலத்தில் கடுமையான காது கேளாமையால் பாதிக்கப்பட்டு உடலொலிபெருக்கிக்காட்டி (ஸ்டெதாஸ்கோப்) மூலம் கேட்பதில் சிரமப்பட்ட ஹெலன் டாசிக்கின், மார்பில் விரல் நுனிகளை வைத்து இதயத் துடிப்பின் அதிர்வுகளை உணர்ந்து, இதயக் குறைபாடுகளை மதிப்பிட்டார்.

1960-ஆம் ஆண்டுகளின் தொடக்கத்தில் கைகள், கால்கள் முழுமையாக வளர்ச்சியடையாமல் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை ஐரோப்பாவில் அதிகரித்தபோது, அதனை நேரில் ஆய்வு செய்த ஹெலன் அதற்கும் கர்ப்பிணிப் பெண்களுக்கு வழங்கப்பட்ட தாலிடோமைடு மருந்துக்கும் தொடர்பு இருப்பதை கண்டறிந்தார். அவரது அறிவியல் ஆய்வும் மருந்தின் ஆபத்து குறித்த எச்சரிக்கையும், தாலிடோமைடு அமெரிக்காவில் பரவலாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்க முக்கியப் பங்காற்றின..

1963-ஆம் ஆண்டு ஜான்ஸ் ஹாப்கின்ஸில் இருந்து ஓய்வு பெற்ற பின்னரும் மனிதர்கள் மட்டுமின்றி பறவைகள் உள்ளிட்ட உயிரினங்களின் பிறவிக் இதயக் குறைபாடுகள் குறித்தும் ஆராய்ந்தார். 1964-ஆம் ஆண்டு, அமெரிக்க அதிபர் லிண்டன்.பி.ஜான்சன் அவருக்கு சுதந்திரப் பதக்கம் (பிரசிடென்சியல் மெடல் ஆப் ஃபிரீடம்) வழங்கினார். 1965-ஆம் ஆண்டு, அமெரிக்க இதயச் சங்கத்தின் முதல் பெண் தலைவராகப் பொறுப்பேற்றார். திருமணம் செய்து கொள்ளாமல் குழந்தைகளின் நலனுக்கே தன் வாழ்நாளை அர்ப்பணித்த ஹெலன், 1986-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 1-ஆம் நாள், தனது 88வது வயதில் மகிழுந்து விபத்தில் உயிரிழந்தார். கேம்பிரிட்ஜில் உள்ள மவுண்ட் ஆபர்ன் கல்லறையில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் முயற்சியே ‘My Vikatan’. இந்த ‘My Vikatan’ பிரிவில் பதிவாகும் கட்டுரைகளுக்கு என பிரத்யேகமான ஒரு வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இணைந்திருப்பதன் மூலம், ‘My Vikatan’கட்டுரைகள், ‘My Vikatan’ தொடர்பான அறிவிப்புகள் என அனைத்தையும் உடனே தெரிந்து கொள்ளலாம்..! இதில் இணைய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க மக்களே...!

Link : https://chat.whatsapp.com/G7U0Xo0F63YA5PC6VgYMBQ

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

குண்டுகள் முழக்கம் இல்லாத அரசு மரியாதை; உயிலின்படி தகனம் செய்யப்பட்ட சாலமன் பாப்பையாவின் உடல்

தமிழறிஞரும், பட்டிமன்ற நடுவருமான சாலமன் பாப்பையாவின் உடல், அவரது இறுதி விருப்பப்படியே மதுரை தத்தனேரி மின் மயானத்தில் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.தனது உடல் தகனம் செய்யப்பட வேண்டும் என அவர் ஏற... மேலும் பார்க்க

சாலமன் பாப்பையா: "சில நேரங்களில் கோபப்படுவேன். இது சரியில்லை என்று... ஆனால் அவர்.!"- கலங்கிய ராஜா

மதுரையைச் சேர்ந்த தமிழ் ஆர்வலரும், பட்டிமன்ற நடுவருமான பேராசிரியர் சாலமன் பாப்பையா உடல்நலக்குறைவால் நேற்று(செப்.11) காலமானார். அவரது மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அரசு மரியாதையுடன் ... மேலும் பார்க்க

சாலமன் பாப்பையா: "அனாதை பிள்ளைகளாக நாங்கள் நிற்கிறோம்"- மனமுடைந்து அழுத பாரதி பாஸ்கர்

மதுரையைச் சேர்ந்த தமிழ் ஆர்வலரும், பட்டிமன்ற நடுவருமான பேராசிரியர் சாலமன் பாப்பையா உடல்நலக்குறைவால் நேற்று(செப்.11) காலமானார்.அவரது மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அரசு மரியாதையுடன் அ... மேலும் பார்க்க

பட்டிமன்றத்தை வீட்டின் வரவேற்பறைக்குக் கொண்டு வந்த 'ஆசிரியர்'! – சாலமன் பாப்பையா நினைவுப் பதிவு

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

``கலங்கி நிற்கிறேன்... ஒரே இருளாக இருப்பது போல இருக்கிறது" - கண்ணீருடன் பாரதி பாஸ்கர்

பிரபல தமிழ் அறிஞரும், பிரபல பட்டிமன்ற நடுவருமான சாலமன் பாப்பையா அவர்களின் திடீர் மறைவு தமிழ் உலகையும், அவரது ரசிகர்களையும் சொல்லொணாத் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. அவருக்கு வயது 90.மதுரை திருமங்கலம் அருக... மேலும் பார்க்க

சாலமன் பாப்பையா: "செப்டம்பர் 11 தமிழுக்கு நல்லநாள் இல்லை போலும்..!" - கவிஞர் வைரமுத்து உருக்கம்

பட்டிமன்றம் மூலம் மக்கள் மனதைக் கவர்ந்த சாலமன் பாப்பையா உடல்நலக் குறைவால் இன்று (செப்.11) காலமானார். அவருக்கு வயது 90. அவரது மறைவிற்கு பலரும் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் கவிஞ... மேலும் பார்க்க