செய்திகள் :

ஈரான் போரால் சொந்த நாட்டில் ட்ரம்பிற்கு வந்த 'வினை'; இதைச் சமாளிக்க ட்ரம்ப் தரும் விளக்கம் என்ன?

post image

அமெரிக்காவில் வருகிற நவம்பர் மாதம் மிட் டேர்ம் தேர்தல் நடக்க உள்ளது. இது அமெரிக்காவின் நாடாளுமன்றமான காங்கிரஸுக்கான தேர்தல் ஆகும்.

ட்ரம்பிற்குப் பெரும்பான்மை வேண்டும்!

இதுவரை அமெரிக்க அதிபர் ட்ரம்பின் செயல்களுக்கு காங்கிரஸில் அதிருப்தி நிலவினாலும், அவருக்கு எதிராக எதுவும் செய்ய முடியாமல் இருந்ததற்கான காரணம் – காங்கிரஸில் ட்ரம்பின் குடியரசுக் கட்சி உறுப்பினர்கள் அதிகம் இருந்ததே.

ட்ரம்ப் அவரது அதிரடிகளைத் தொடர வேண்டுமானால், மீண்டும் குடியரசுக் கட்சியே காங்கிரஸில் பெரும்பான்மையாக இடம்பெற வேண்டும்.

ஈரான் போர்
ஈரான் போர்

ஒரு சிக்கல்...

இதில் ஒரு சிக்கல் நீடிக்கிறது – அது ஈரான் போர்.

ஈரான் போரினால் அமெரிக்காவில் பெட்ரோல் விலை அதிகரித்துள்ளது. இதில் அமெரிக்க மக்களுக்குக் கடும் அதிருப்தி.

மிட் டேர்ம் தேர்தலையொட்டி ஈரான் போர் நிற்காது என்று அறிவித்துவிட்டார் ட்ரம்ப். ஆனால், இது தொடர்ந்து பெட்ரோல் விலை அதிகரித்து இருந்தால் அமெரிக்க மக்களுக்கு அதிருப்தி.

அமெரிக்க மக்களைத் திருப்திப்படுத்த ஈரான் போரில் இருந்து பின்வாங்கினால், ட்ரம்பின் இமேஜ் பாதிக்கப்படும்.

இதனால், இந்த இரண்டையும் பேலன்ஸ் செய்யப் பார்க்கிறார் ட்ரம்ப். இது அவரது ட்ரூத் சமூக ஊடகப் பதிவில் நன்கு தெரிகிறது...

“அமெரிக்கா முழுவதும் விலைவாசி உயர்ந்துள்ளதற்குக் காரணம் ‘தூங்குமூஞ்சி’ ஜோ பைடனும் அவருடைய நிர்வாகமும்தான். அதற்குக் காரணம் ட்ரம்ப் அல்ல என்பதை அனைவரும் புரிந்துகொள்வீர்கள் என்று நம்புகிறேன்.

இப்போது இருப்பதைவிட பைடனின் ஆட்சியில்தான் கச்சா எண்ணெய் விலை அதிகமாக இருந்தது. அதுமட்டுமின்றி, ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதையும் நாம் தடுத்து நிறுத்தியுள்ளோம்.

ட்ரம்ப் பதிவு
ட்ரம்ப் பதிவு

எண்ணெய் விலையைத் தவிர (அதுவும் தற்காலிகமானதுதான்), மற்ற அனைத்துப் பொருட்களின் விலைகளும் வேகமாகச் சரிந்து வருகின்றன.

ஈரானுடனான இந்த ராணுவ மோதல் முடிவுக்கு வந்தவுடனே எண்ணெய் விலையும் சீக்கிரம் கீழே இறங்கும். அந்த மோதலும் வெகு விரைவில் முடிவுக்கு வந்துவிடும்.”

ட்ரம்பின் இந்தச் சமாளிப்பு அமெரிக்க மக்களிடம் எடுபடுமா என்பது நவம்பர் மாதத் தேர்தலில் தெரிந்துவிடும்

அமெரிக்காவில் ஆயுதக் கையிருப்பு குறைந்துவிட்டது என்கிற குற்றச்சாட்டும் எழுந்து வருகிறது. இதையும் சமாளிக்க இன்னொரு பதிவை வெளியிட்டுள்ளார்...

“அமெரிக்கா தனது வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு மிகச் சிறந்த மற்றும் அதிநவீன ஆயுதங்களை உற்பத்தி செய்து வருகிறது என்ற அறிக்கையை நான் இப்போதுதான் பெற்றுள்ளேன்.

மத்தியக் கிழக்கிலும் பிற பகுதிகளிலும் உள்ள நமது படைகளுக்கு இந்த ஆயுதங்கள் நாள்தோறும் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.

நமது பாதுகாப்புத் துறை சார்ந்த தொழிற்சாலைகள் 24 மணி நேரமும் இடைவிடாமல் இயங்கி வருகின்றன.

ட்ரம்ப் பதிவு
ட்ரம்ப் பதிவு

அதே நேரத்தில், ஒவ்வொரு நிறுவனமும் சராசரியாக 4 முதல் 5 புதிய பிரமாண்டமான ஆலைகளையும் புதிதாகக் கட்டி வருகின்றன!

ஏற்கனவே நமது கையிருப்பில் அதிக எண்ணிக்கையில் உள்ள ‘பேட்ரியட்’, ‘தாட்’ அமைப்புகள், ‘டொமாஹாக்’ மற்றும் பிற தரப்படுத்தப்பட்ட ஏவுகணை அமைப்புகளின் உற்பத்தியிலேயே இந்தத் தயாரிப்பில் முதன்மைக் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது".

ட்ரம்பின் இந்தச் சமாளிப்புகள் அமெரிக்க மக்களிடம் எடுபடுமா என்பது நவம்பர் மாதத் தேர்தலில் தெரிந்துவிடும்.

ஈரான் போர்: "உலக நாடுகள் அமெரிக்காவிற்கு இழப்பீடு வழங்க வேண்டும்" - ட்ரம்ப் புதிய கணக்கு

இன்றுடன் ஈரான் போர் தொடங்கி சரியாக 6 மாதங்கள் 18 நாட்கள் ஆகியிருக்கின்றன.இடையில் போர் நிறுத்தம், பேச்சுவார்த்தை, புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் நடந்தாலும், எதுவும் பலனளிக்கவில்லை. இதனால், இரண்டு நாடுகளுமே... மேலும் பார்க்க

நெல்லை: "முதல்வர் விஜய் முதலீடுகளை ஈர்க்கத்தான் லண்டன் சென்றாரா?" - நயினார் நாகேந்திரன் கேள்வி

நெல்லை பா.ஜ.க அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அக்கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், “இன்றைய சூழலில் 2 இடைத் தேர்தல்கள் நடைபெறவுள்ளன. 4 இடைத்தேர்தல்கள் வரவுள்ளன. சட்டமன்றத் தேர்தல் நட... மேலும் பார்க்க

திருச்செந்தூர் அம்பேத்கர் சிலை விவகாரம்; திருமாவளவன் முன்பு இரு தரப்பினர் மோதலால் பரபரப்பு

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் அம்பேத்கர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்தச் சிலை அமைப்பது தொடர்பாக அக்கட்சியினர் இரு தரப்பாக செயல்பட்டு வந்ததாகக் கூறப்படுகி... மேலும் பார்க்க

'நிகழ்ச்சி தொடர்பாக பேசியதை தவறாக சித்தரிக்க வேண்டாம்!" - பிக்பாஸ் சர்ச்சைக்கு விஜய் டிவி விளக்கம்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகர் விஜய் சேதுபதி பகிர்ந்த கருத்தை முன்வைத்து தவெக தொண்டர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. இதையடுத்து, தவெக ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் விஜய் சேதுபதிய... மேலும் பார்க்க

"முறிந்த காலுடன் 7000 அடி மலையில் ஏறினேன்" - ஈரானில் சிக்கி 50 மணிநேரம் போராடி தப்பிய அமெரிக்க வீரர்

கடந்த ஏப்ரல் மாதம் 2ம் தேதி அமெரிக்க விமானங்கள் ஈரான் மீது தாக்குதல் நடத்தியபோது ஈரான் வீசிய ஏவுகணை ஒன்று அமெரிக்காவின் F-15E ஸ்ட்ரைக் ஈகிள் விமானத்தைச் சுட்டு வீழ்த்தியது. அந்த விமானத்தில் இருந்த இரண... மேலும் பார்க்க

"திமுக தலைவர்களுக்கு நாவடக்கம் தேவை; இல்லையெனில்..." - கனிமொழி சந்தோஷ் கண்டனம்

கோவை கவுண்டம்பாளையம் தொகுதி த.வெ.க. சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அரசியலில் கருத்து வேறுபாடுகள் இருப்பது ஜனநாயகத்தின் இயல்பு. ஆட்சியின் செயல்பாடுகள், கொள்கைகள் மற்றும... மேலும் பார்க்க