செய்திகள் :

கோவை: பெண்ணிடம் தகராறு செய்த தவெக நிர்வாகி – கட்சியில் இருந்து அதிரடி நீக்கம்!

post image

கோவை கலிக்கநாயக்கன்பாளையம் பகுதியில் மகாராஜன் என்பவர் இருசக்கர வாகன விற்பனை ஷோரூம் நடத்தி வருகிறார். இவரது மனைவி திவ்யா. சமீபத்தில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த மகாராஜன், கட்சியின் பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் கட்சிப் பணிகளில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனிடையே த.வெ.க-வின் வேடபட்டி நகரச் செயலாளர் பிரகாஷ், மகாராஜனின் ஷோரூமில் இருந்து பணம் கொடுத்து இருசக்கர வாகனம் ஒன்றை வாங்கியுள்ளார். அப்போது, மகாராஜனுக்கு கட்சியில் இளைஞரணி பொறுப்பாளர் பதவி வழங்குவதாகக் கூறி, அவரிடம் ஒரு லட்சம் ரூபாய் பணத்தை பிரகாஷ் பெற்றதாக கூறப்படுகிறது.

ஆனால், பணம் பெற்றுக்கொண்ட பிறகும் கட்சியில் எந்தப் பொறுப்பும் வழங்கப்படாததால், தான் கொடுத்த பணத்தைத் திருப்பித் தருமாறு மகாராஜன் கேட்டுள்ளார். இதற்கு பிரகாஷ் தரப்பில் உரிய பதில் அளிக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனிடையே, தான் வாங்கிய இருசக்கர வாகனத்தின் பதிவுப் பணிகளுக்காக அந்த வாகனத்தை மகாராஜனின் ஷோரூமில் பிரகாஷ் ஒப்படைத்துள்ளார். அப்போது, பதவி கொடுப்பதாக ஏற்கெனவே பெற்ற பணத்தைத் திருப்பிக் கொடுத்தால் மட்டுமே வாகனத்தை ஒப்படைக்க முடியும் என மகாராஜன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனால் இரு தரப்பினருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது.

திவ்யா
திவ்யா

இந்த நிலையில் கடந்த 14ம் தேதியன்று பிரகாஷ் மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த மேலும் இருவர் ஷோரூமிற்கு வந்துள்ளனர். அப்போது மகாராஜன் அங்கு இல்லாத நிலையில், அவரது மனைவி திவ்யா மட்டும் இருந்துள்ளார். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.  பிரகாஷ் ஷோரூமில் இருந்த இருசக்கர வாகனங்களைத் தள்ளிவிட்டு அநாகரிகமான முறையில் ரகளையில் ஈடுபடவே, இதனால் ஆத்திரமடைந்த திவ்யா, பிரகாஷை ஷோரூமில் இருந்து வெளியேறுமாறு வலியுறுத்தினார். 

மேலும், ’த.வெ.க நிர்வாகி என்றால் என்ன வேண்டுமானாலும் செய்யலாமா?’ என்றும், கட்சிப் பதவி வழங்குவதாகக் கூறி லஞ்சம் பெற்றது குறித்தும் சரமாரியாகக் கேள்வி எழுப்பியுள்ளார். ஆனால், அங்கிருந்து பிரகாஷ் வெளியேற மறுத்த நிலையில், அங்கு நடைபெற்ற வாக்குவாதத்தை திவ்யா தனது செல்போனில் வீடியோவாகப் பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் கட்சியின் கொள்கைகள், கோட்பாடுகளுக்கு முரணான வகையிலும், கட்சியின் கண்ணியத்திற்கு களங்கம் விளைவிக்கும் வகையிலும் செயல்பட்டதால், பிரகாஷ் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலும் இருந்து நிரந்தரமாக நீக்கப்படுவதாக த.வெ.க கோவை புறநகர் வடக்கு மாவட்டச்  செயலாளர் ராஜ்குமார் உத்தரவிட்டுள்ளார்.

இஸ்ரேல் அதிபராக தொடர நெதன்யாகுவின் ஐடியா; ஒத்துழைக்காத எதிர்க்கட்சி! இன்னும் எத்தனை நாள் கெடு?

இஸ்ரேலில் தேர்தல் முடிவுகள் வந்து கிட்டத்தட்ட இரண்டு வாரங்கள் ஆகிவிட்டன. ஆனால், அந்த நாட்டில் இன்னும் யாரும் ஆட்சி அமைக்கவில்லை.பெரும்பான்மை பெறாத இஸ்ரேல் கட்சிகள்இஸ்ரேல் நாடாளுமன்றம் நெசட்டில் பெரும்... மேலும் பார்க்க

கள்ளக்குறிச்சி எம்எல்ஏ விவகாரம்: `இதே எடப்பாடியாராக இருந்திருந்தால்...'- அதிமுக பா.வளர்மதி பேச்சு

தவெக கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் மாவட்ட ஆட்சியருக்கு குறுஞ்செய்தி அனுப்பியதாக வெடித்திருக்கும் விவகாரம், பெரும் சர்ச்சையாகி இருக்கும் நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்ட அதிமுக மகளிர் அணி சார்பில் ... மேலும் பார்க்க

'மன்மோகன் சிங்கை பிரதமர் பதவியிலிருந்து நீக்க கோரிய பிரணாப் முகர்ஜி!' - என்ன சொல்கிறார் சோனியா?

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான சோனியா காந்தி 'Belonging' என்ற பெயரில் சுயசரிதை நூலை எழுதியிருக்கிறார். அதில் அவர் அரசியல்ரீதியாக குறிப்பிட்டிருக்கும் சில சம்பவங்கள் சர்ச்சையை கிளப்பியிருக்கிறது. கு... மேலும் பார்க்க

திருப்பத்தூர் பெரிய ஏரி: சுகாதாரச் சீர்கேட்டைச் சுட்டிக்காட்டிய விகடன்; குப்பைகளை அகற்றிய நிர்வாகம்!

திருப்பத்தூர் புதிய பேருந்து நிலையத்தை ஒட்டி அமைந்துள்ளது திருப்பத்தூர் பெரிய ஏரி. மீன்பிடித் தொழில், விவசாயப் பாசனம் எனப் பல வகைகளில் மக்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும் இந்த ஏரி, குப்பைகள் கொட்டப்படும... மேலும் பார்க்க

மதுரை தனிஷிக் நகைக்கடையில் மீட்கப்பட்ட ரூ. 15 கோடி மதிப்புள்ள நகைகள்; காட்சிப்படுத்திய போலீஸ்| Photo

மீட்கபட்ட 15 கோடி மதிப்புள்ள நகைகள் மீட்கபட்ட 15 கோடி மதிப்புள்ள நகைகள் மீட்கபட்ட 15 கோடி மதிப்புள்ள நகைகள் மீட்கபட்ட 15 கோடி மதிப்புள்ள நகைகள் மீட்கபட்ட 15 கோடி மதிப்புள்ள நகைகள் மீட்கபட்ட 15 கோடி மத... மேலும் பார்க்க

"சு.வெ-வின் பயணச் சலுகையை கொச்சைப்படுத்தியிருக்கிறார்.!"- நீதிபதி சுவாமிநாதனுக்கு சண்முகம் கண்டனம்

"உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தொடுக்கும் தனிநபர் தாக்குதல், நீதித்துறை நெறிகளுக்கு முரணானது. அவர் மீதி உரிய நடவடிக்கை எடுக்க தலைமை நீதிபதிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள் விட... மேலும் பார்க்க