செய்திகள் :

கோவை பொறியியல் கல்லூரி மாணவர் கொலை வழக்கு: 5 மாணவர்கள் கைதான பின்னணி என்ன?

post image

கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த அமுதன் (19) என்பவர், கோவை ஒத்தக்கால் மண்டபம் பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பயின்று வந்தார்.

கல்லூரி விடுதியில் தங்கியிருந்து அமுதன் படித்து வந்த நிலையில், அங்கு பணிபுரியும் சமையலர் ஒருவரைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதனால் கல்லூரி விடுதியிலிருந்து அவர் இடைநீக்கம் செய்யப்பட்டார். பின்னர் தனது நண்பர்கள் அறையில் தங்கி இருந்தார்.

இதனிடையே தனது நண்பர்களுடன் சேர்ந்து பூங்கா நகர் பகுதியில் இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் தங்கியிருந்த வாடகை வீட்டிற்கு முகமூடி அணிந்தபடி சென்று, கத்தியைக் காட்டி மிரட்டி செல்போன்களைப் பறித்ததாகக் கூறப்படுகிறது.

இதில் ஈடுபட்டவர்களில் அமுதனும் ஒருவர் என்பது இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்குத் தெரியவந்துளது. இதையடுத்து நேற்று முன்தினம் காலை அமுதன் மற்றும் அவரது நண்பர் ஸ்ரீமன் (19) ஆகியோர் கல்லூரிக்குச் சென்றபோது, அமுதனை அடையாளம் கண்டுள்ளனர். பின்னர் இருவரையும் அக்கல்லூரிக்குப் பின்புறம் உள்ள மைதானத்திற்கு அழைத்துச் சென்று கடுமையாகத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து அறைக்குத் திரும்பிய அமுதனுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்ட நிலையில், சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி அமுதன் உயிரிழந்தார்.

கொலை
கொலை

இது குறித்து ஸ்ரீமன் அளித்த புகாரின் பேரில் செட்டிபாளையம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். காவல் துறையினர் விசாரணையில் தாக்குதல் நடத்தி செல்போன்களைப் பறித்ததற்குப் பதிலடியாக நடத்தப்பட்ட தாக்குதலில் அமுதன் உயிரிழந்து இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து இச்சம்பவத்தில் ஈடுபட்ட திருவள்ளூரைச் சேர்ந்த 17 வயது சிறுவன், கடலூரைச் சேர்ந்த ஆராஅமுதன் (20), சிவகங்கையைச் சேர்ந்த அரவிந்த் (21), திருவாரூரைச் சேர்ந்த சிவ ரோஹித் (20), பெரம்பலூரைச் சேர்ந்த மணி பாலு (20) ஆகிய 5 மாணவர்களை காவல் துறையினர் கைது செய்தனர். மேலும் இச்சம்பவத்தில் தொடர்புடைய மற்ற நபர்களையும் அடையாளம் கண்டுபிடிக்க தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

பெரம்பலூர்: எம்.எல்.எம் பாணியில் மோசடி; ஒரு கிராமமே பல லட்சங்களை ஏமாந்த அதிர்ச்சி; என்ன நடந்தது?

பெரம்பலூர்மாவட்டத்திலிருக்கிறது அன்னமங்கலம். இந்தக் கிராமத்தில் கியூநெட் பெயரில் அதிக லாபம் தருவதாகக் கூறி பணமோசடியில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஒரே கிராமத்தைச் சேர்ந்த மக்கள் மா... மேலும் பார்க்க

வேலூர்: இலவச முகாம்... இன்ஸ்டா விளம்பரம்... பெண்ணின் உயிரைப் பறித்ததா `அபூர்வ மூலிகைச் சாறு’?

வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அருகேயுள்ள குடிபல்லி கிராமம் சென்னராயசுவாமி கோயில் வளாகத்தில் `ஆஞ்சநேயா ஜனசேவா அறக்கட்டளை’ சார்பாக மாதந்தோறும் 11-ம் தேதி கண் பாதிப்புகளுக்கு இலவசமாக மூலிகை சிகிச்சை முகா... மேலும் பார்க்க

கருவிலுள்ள பாலினம் அறிய சட்டவிரோத ஸ்கேன் சென்டர் - பொறிவைத்து பிடித்த மருத்துவக்குழு! பகீர் சம்பவம்

"கர்ப்பத்திலிருப்பது ஆண் குழந்தையா, பெண் குழந்தையா என கண்டறிய ரூ 23 ஆயிரம்தான்" என ஊர் ஊராக கேன்வாஸ் செய்து சட்டவிரோத ஸ்கேன் சென்டர் நடத்திய கும்பலை மருத்துவக் குழுவினர் பொறி வைத்து பிடித்துள்ள சம்பவம... மேலும் பார்க்க

`மகள்களை என்னுடன் அழைத்துச் செல்கிறேன்' - மனைவியின் உறவு; மகள்களை கொன்று, தற்கொலைக்கு முயன்ற கணவர்

ஐந்து நட்சத்திர ஹோட்டலில் அறை எடுத்து தங்கியவர், தன் இரண்டு மகள்களை கொலை செய்துவிட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பெங்களூருவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. murderபெங்களூருவில் உள்ள பிலால் ந... மேலும் பார்க்க

கர்நாடகாவிலிருந்து டூவீலரில் குட்கா பொருள்கள் கடத்திவந்த நபர்; மடக்கிப் பிடித்த போலீஸ்!

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் பான் மசாலா பொருள்களை அண்டை மாநிலங்களிலிருந்து கடத்தி வந்து தமிழகத்தில் விற்பனை செய்யப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.குட்கா, பான் மசாலா (ஃபைல் படம்)அ... மேலும் பார்க்க

இன்ஸ்டாகிராமில் காதல், திருமணம்... மனைவி, மாமியார் என 2 பேரும் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட கொடூரம்

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகில் உள்ள பச்சாபாளையத்தைச் சேர்ந்த 21 வயதான பூவரசி என்ற இளம்பெண் திண்டுக்கல்லைச் சேர்ந்த அக்ஷ்ய் என்ற 25 வயது இளைஞரை இன்ஸ்டாகிராம் மூலம் காதலித்து வந்திருக்கிறார். கடந்த... மேலும் பார்க்க