செய்திகள் :

"சங்கத்திற்காகச் சில ஆலோசனைகளும் வழங்கினார்!" - எழுத்தாளர் சங்கத்தில் இணைந்த சிவகார்த்திகேயன்

post image

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் தலைவராக இயக்குநர் சேரன் பொறுப்பேற்ற பிறகு, தமிழ் சினிமாவின் நடிகர்கள் பலரும் சங்கத்தில் புதிய உறுப்பினர்களாக இணைந்து வருகிறார்கள்.

சமீபத்தில் லெஜெண்ட் சரவணன், இசையமைப்பாளர் இளையராஜா உள்ளிட்ட சிலர் இணைந்திருந்தனர்.

Sivakarthikeyan
Sivakarthikeyan

அதனைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்தைச் சந்தித்த சங்கத்தினர், அவரிடம் சங்கத்தில் இணையுமாறு கோரிக்கை வைத்திருந்தனர்.

அதற்கு அவரும் சம்மதம் தெரிவித்திருக்கிறார். தற்போது நடிகர் சிவகார்த்திகேயனும், பாடலாசிரியராகத் தன்னை எழுத்தாளர்கள் சங்கத்தில் உறுப்பினராக இணைத்துக் கொண்டிருக்கிறார்.

சிவகார்த்திகேயன் எழுத்தாளர்கள் சங்கத்தில் இணைந்தது குறித்து, அச்சங்கத்தின் தலைவர் சேரன், "இன்று மரியாதை நிமித்தமாகவும், எழுத்தாளர்கள் சங்கம் நடத்தும் விழாவில் கலந்துகொள்வது தொடர்பாகவும் சிவகார்த்திகேயனை எழுத்தாளர்கள் சங்கத் தலைவராக நானும், என்னுடன் பொதுச்செயலாளர் பட்டுக்கோட்டை பிரபாகர், பொருளாளர் சுந்தர்ராஜன், துணைத்தலைவர் சினேகன் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் இயக்குநர் செல்வபாரதி, இயக்குநர் கே.பி.பி. நவீன் ஆகியோர் சந்தித்தோம்.

எங்களின் வேண்டுகோளை ஏற்றுப் பாடலாசிரியராக இணைந்ததோடு அல்லாமல் சங்கத்திற்காகச் சில ஆலோசனைகளும் வழங்கினார்.

விழாவிற்கு வருவதாகவும் கூறி நிறைவான மனதுடன் எங்களை வழியனுப்பி வைத்ததை மகிழ்வாகப் பகிர்கிறோம். தொடரட்டும் வெல்லட்டும் உங்கள் முயற்சிகள்!" எனக் குறிப்பிட்டுப் பதிவிட்டிருக்கிறார்.

jason 'அஞ்சலி' குட்டிப் பையன்; கை கொடுக்காத ஹீரோ முயற்சி, ஜேசனின் `கேர் டேக்கர்'- யார் இந்த சஞ்சீவ்?

'ஸ்கிரிப்ட் தயாரானதும் என்னுடைய சித்தப்பாகிட்டதான் பேசினேன். 'படம் பண்ணப் போறேன், எங்கூட இருப்பீங்களா'னு கேட்டேன். அவரும் ஓ.கே. சொன்னதுடன் படம் தொடங்குனதுல இருந்து இப்ப வரைக்கும் அவ்வளவு சப்போர்ட்டா இ... மேலும் பார்க்க

Dharman: "50 வருடத்திற்குப் பிறகும் ஒரு குழந்தையைப் போல..."- ரஜினி காந்த் குறித்து அஸ்வத் மாரிமுத்து

அசோக் செல்வன், ப்ரீத்தி முகுந்தன் நடிப்பில் உருவாகியிருக்கும் 'அன்பில் அவன்' திரைப்படம் இந்த வாரம் திரைக்கு வருகிறது. 'போர் தொழில்' படத்தின் இயக்குநர் விக்னேஷ் ராஜாதான் இப்படத்தின் கதாசிரியர். விக்னேஷ... மேலும் பார்க்க

யுத்தம் செய் : தனித்துவமான கலை! | ஆதி தாமிரா | `சினி'ஸ்கோப் 26

`சினி'ஸ்கோப் 26யுத்தம் செய் : தனித்துவமான கலை!சென்னையின் சில முக்கியமான பகுதிகளில் ஓரிரு அட்டைப் பெட்டிகள் கேட்பாரற்றுக் கிடக்கின்றன. அதற்குள் வெட்டப்பட்ட மனிதக்கைகள் கண்டுபிடிக்கப்பட்டதும் காவல்துறைய... மேலும் பார்க்க

Anbil Avan: "வீட்டை அடமானம் வச்சுதான் இந்தப் படத்தை எடுத்திருக்கேன்" - அசோக் செல்வன்

அசோக் செல்வன், ப்ரீத்தி முகுந்தன் நடிப்பில் உருவாகியிருக்கும் 'அன்பில் அவன்' திரைப்படம் இந்த வாரம் திரைக்கு வருகிறது. 'போர் தொழில்' படத்தின் இயக்குநர் விக்னேஷ் ராஜாதான் இப்படத்தின் கதாசிரியர். விக்னேஷ... மேலும் பார்க்க

"'அந்தோனி'க்கு விருது இல்லேனாலும் கூட" - ஆஸ்கர் போகும் முதல் இலங்கைத் தமிழ்ப்படம் குறித்து இயக்குநர்

இளையராஜா இசையில் முதல் முறையாக உருவான இலங்கை தமிழ்த் திரைப்படமான 'அந்தோனி', இப்போது இலங்கை திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் ஊடாக 2027ஆம் ஆண்டுக்கான ஆஸ்கார் விருதின் சிறந்த சர்வதேச திரைப்படப் பிரிவிற்கான ... மேலும் பார்க்க

Rakka: "ஒரே நேரத்தில் 37 பேர்!" - கின்னஸ் சாதனை படைத்த அட்லீ - அல்லு அர்ஜூனின் 'ராக்கா' படம்!

'ஜவான்' படத்தின் வெற்றிக்குப் பிறகு அட்லீ இயக்கும் 'ராக்கா' படத்தில் அல்லு அர்ஜுன் கதாநாயகனாக நடிக்கிறார். அல்லு அர்ஜுனும் 'புஷ்பா 2' படத்தின் பேன் இந்தியா வெற்றிக்குப் பிறகு அட்லீயுடன் கூட்டணி அமைத்த... மேலும் பார்க்க