செய்திகள் :

'சட்டமன்றத்தில என் குரல் ஒலிக்கணும்'னு நிறைய பேர் விருப்படுறாங்க.!'- சீமான் கூறியதென்ன?

post image

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் ஜெயந்தி விழாவில் கலந்துகொண்ட நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார்.

"அதிமுகவும், திமுகவும் விலகி இடைத்தேர்தலில் என்னை பொதுவேட்பாளராக நிறுத்துவார்கள் என்பது குறித்து திமுகவும் முடிவெடுக்கவில்லை.

அதிமுகவும் முடிவெடுக்கவில்லை. நானும் முடிவெடுக்கவில்லை. ஆனால் இந்தப் பேச்சை யார் எடுத்தார்கள் என்று எல்லோருக்கும் தெரியும்.

சீமான்
சீமான்

தவெக கட்சிகாரர்களும், நிர்வாகிகளும் தான் இதனைத் திருப்பி திருப்பி சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.

நான் மட்டுமல்ல என் கட்சி பிள்ளைகள் அனைவரும் பொது வேட்பாளர்கள் தான். சீமானின் குரல் சட்டமன்றத்தில் ஒலிக்க வேண்டும் என்று என்னைச் சந்திக்கும் பெரும்பாலானோர் விருப்பம் தெரிவிக்கிறார்கள். அந்த அடிப்படையில் தான் அம்பாசமுத்திரத்தில் போட்டியிடுகிறேன்.

மற்ற தலைவர்களுக்கு இருக்கும் பின்புலம், ஏன்? தம்பி விஜய்க்கு இருக்கும் பின்புலம் கூட எனக்கு இல்லை. அரசியலுக்கு தம்பி திரையில் இருந்து வந்தார். நான் ஒன்றரை ஆண்டுகள் சிறையில் இருந்து வந்து கட்சி ஆரம்பித்தேன்.

சீமான்
சீமான்

ஒன்றரை விழுக்காடு, இரண்டரை விழுக்காடு ஓட்டு வைத்திருப்பவர்களிடம் கூட்டணி பேசும்போது, எட்டரை விழுக்காடு வைத்திருந்த என்னிடம் கூட்டணி பேசிருப்பார்களா? இல்லையா? எவ்வளவு கோடிகள் என்னிடம் பேசியிருப்பார்கள். நான் ஏன் சமரசம் செய்யவில்லை. ஏனென்றால் எனக்கு ஒரு இலக்கு இருக்கிறது, நோக்கம் இருக்கிறது" என்று பேசியிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb

'போலீஸ் கஸ்டடி வேண்டாம்; வீட்டு சாப்பாடு வேணும்!' - புன்னகையோடு புழலுக்கு திரும்பிய அன்பில்!

தனியார் பள்ளிகளுக்கு உரிமம் வழங்கிய வழக்கில் நீதிமன்றத்தில் காவலில் புழல் சிறையில் இருக்கும் அன்பில் மகேஸை விசாரணைக்காக காவலில் எடுக்க போலீஸார் மனு போட்டிருந்தனர். சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த மனு ம... மேலும் பார்க்க

``இடைத்தேர்தலில் சீமானுக்கு ஆதரவு நிலைப்பாடா?" - திமுக தலைவர் ஸ்டாலினின் பதில் என்ன?

பசும்பொன் தேவர் குருபூஜையை முன்னிட்டு முன்னாள் முதல்வர் ஸ்டாலின் பசும்பொன்னில் மரியாதை செய்தார். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ``விடுதலைப் போராட்டத்திற்குத் துணைநின்றவர். ஆங்கிலேய அடக்... மேலும் பார்க்க

``எடப்பாடியின் கருத்தை பெரிதாக எடுத்துக்கொள்ளத் தேவையில்லை" - அமைச்சர் ரமேஷ்

முத்துராமலிங்க தேவரின் குருபூஜையை முன்னிட்டு நேற்று மதுரைக்குச் சென்ற முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மாலை 5:30 மணிக்கு மீனாட்சி அம்மனை தரிசனம் செய்வதற்காக கோயிலுக்குள் சென்றார். அவர் சென்ற சில ந... மேலும் பார்க்க

``தறிகெட்டு ஓடும் தவெக அரசுக்கான Wake-up call" - மகளிர் அணி ஆர்ப்பாட்டத்திற்கு அழைக்கும் ஸ்டாலின்

தவெக அரசின் நிர்வாகச் சீர்கேட்டை எதிர்த்து திமுக மகளீர் அணி நாளை போராட்டம் நடத்தவிருப்பதாக முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் தன் எக்ஸ் பக்கத்தில், `... மேலும் பார்க்க