செய்திகள் :

சட்டமன்ற விவாதங்களில் ஆர்வம் காட்டாத உதயநிதி; அப்செட்டில் திமுக எம்எல்ஏ-க்கள்?

post image

சட்டமன்றத்தில் மானியக் கோரிக்கை விவாதம் நடந்து வருகிறது. இந்நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் சட்டமன்றத்தில் முக்கியமான விவாதங்களின்போது ஆப்செண்ட் ஆகிவிடுவதால் திமுக எம்.எல்.ஏக்களே அதிருப்தியில் இருப்பதாக கோட்டை வட்டாரத்தில் கிசுகிசுக்கின்றனர்.

உதயநிதி
உதயநிதி

இதுதொடர்பாக நம்மிடம் பேசிய கோட்டை வட்டாரத்தினர், "கடந்த ஆகஸ்ட் 5 ஆம் தேதி பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது. பட்ஜெட் மீதான விவாதம் முடிந்து இப்போது துறைவாரியான மானியக்கோரிக்கை நடந்து வருகிறது. காலை 9:30 மணி தொடங்கி மாலை 6 மணிக்கு மேல் வரைக்கும் கூட்டம் நடக்கிறது.

ஆனால், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் சில நாட்கள் அவைக்கே வருவதில்லை. சில நாட்கள் கொஞ்ச நேரம் மட்டும் அவையில் இருந்துவிட்டு மதியமே கிளம்பிவிடுகிறார். கடந்த வாரத்தில் உதயநிதி இரண்டு நாட்கள் அவைக்கு வரவில்லை. அந்த இரண்டு நாட்களில்தான் எம்.எல்.ஏக்களுக்கு கார், 'என்னுடைய டேபிளில் மூன்று துறைகளின் பைல்கள் இருக்கிறது' என முக்கியமான விஷயங்களை முதல்வர் அவையில் பேசினார்.

உதயநிதி
உதயநிதி

அதற்கு கவுன்டர் கொடுக்க எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி அவையில் இல்லை. இரண்டு நாட்கள் கழித்து வந்துதான் இந்த விவகாரங்களில் முதல்வருக்கு உதயநிதி பதில் கூறினார். அதேமாதிரி, அவையில் நேற்று முதல்வரின் நகராட்சி நிர்வாகத்துறைக்கான மானியக் கோரிக்கை தாக்கலானது.

அதை முதல்வர் விஜய்க்குப் பதிலாக அமைச்சர் ராஜ்மோகன்தான் தாக்கல் செய்தார். முதல்வர் விஜய் பதிலுரையும் ஆற்றவில்லை. உதயநிதி அவையில் இருந்து 'முதல்வர் எங்கே?' 'முதல்வருக்கு அவரின் துறையின் மேல் அக்கறை இல்லையா?' எனப் பேசுபொருள் ஆக்கியிருக்க வேண்டும்.

உதயநிதி அதைக் கண்டுகொள்ளவே இல்லை. நேற்று காலையில் 110 விதியின் கீழ் பரந்தூர் விமானத் திட்டம் ரத்து என முதல்வர் அறிவித்தார். திமுக பரந்தூர் திட்டத்தை ஆதரிக்கிறது. ஆனால், முதல்வர் விமான நிலையத் திட்டம் ரத்து என அறிவிக்கையில் அவையில் உதயநிதி இல்லை. திமுக வெளிநடப்பெல்லாம் செய்து தங்கம் தென்னரசு அதைப் பற்றி பேசி முடித்த பிறகுதான் உதயநிதி அவைக்கே வந்தார்.

மேலும், ஒரு கட்சியாகவும் திமுக எம்.எல்.ஏக்களை அவையில் உதயநிதி முறையாக வழிநடத்துவதாகத் தெரியவில்லை. சென்னை மாநகராட்சியில் சொத்துவரி திடீரென மறுமதிப்பீடு செய்யப்பட்டு கட்டணங்கள் உயர்த்தப்பட்டது கடும் விமர்சனங்களை எதிர்கொண்டது.

மேயர் பிரியா என்னிடம் ஆலோசிக்காமல் அதிகாரிகளே அந்த முடிவை எடுத்துவிட்டார்கள் எனப் பேசியிருக்கிறார். ஆனால், இந்த விவகாரத்தை எந்த திமுக எம்.எல்.ஏவும் அவையில் எழுப்பவில்லை.

உதயநிதி
உதயநிதி

அவையில் பேசிய முன்னாள் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேருவும் இந்த விவகாரத்தைக் கண்டுகொள்ளவில்லை. ஸ்கோர் செய்ய வேண்டிய இடங்களில் எல்லாம் உதயநிதி கோட்டைவிட்டுக் கொண்டிருக்கிறார். அவை நிகழ்வு முழுவதும் நேரலையில் வேறு செல்கிறது. எல்லா மக்களும் எதிர்க்கட்சித் தலைவரின் செயல்பாடுகளைப் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

அது இன்னமும் திமுகவுக்குச் சேதாரத்தைதான் ஏற்படுத்தும். ஏற்கனவே அதிகாரமில்லாமல் தோல்வியின் விரக்தியில் இருக்கும் திமுக எம்.எல்.ஏக்கள் உதயநிதியின் ஆர்வமின்மையால் இன்னும் சோர்வடைந்து போயிருக்கின்றனர். உதயநிதி முழுமையாக அவையில் இருந்து ஆளுங்கட்சியின் குற்றச்சாட்டுகளுக்கு உடனே உடனே பதிலடி கொடுக்க வேண்டும் என்றே திமுக எம்.எல்.ஏக்கள் எதிர்பார்க்கின்றனர். உதயநிதி அதைச் செய்ய தயாராக இருப்பதாகத் தெரியவில்லை" என்கின்றனர்.

தமிழ்நாட்டில் பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவு; ஆளுநரைச் சந்தித்த JCD பிரபாகர் - என்ன பேசினார்கள்?

தமிழ்நாட்டில் தவெக அரசின் முதல் பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து முடிந்துள்ளது. இந்தக் கூட்டத்தொடரில் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகருக்கு அரசியல் கட்சியினர் மற்றும் மக்களிடையே பாராட்டுகள் கிடைத்தன. இன்று சென்ன... மேலும் பார்க்க

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: தனித்துக் களமிறங்கும் கம்யூனிஸ்ட் கட்சிகள்! - யார் எங்கே?

வருகிற அக்டோபர் 6-ம் தேதி, தமிழ்நாட்டில் மதுராந்தகம் மற்றும் தாராபுரத்தில் இடைத்தேர்தல் நடக்கவிருக்கிறது. கடந்த சட்டமன்றத் தேர்தலில், இந்த இரு தொகுதிகளிலும் அதிமுக வென்றிருந்தது. மதுராந்தகத்தில் மரகதம... மேலும் பார்க்க

BRICS: "இன்று உலகளவில் பதற்றங்கள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றன" - மோடி பேச்சு

டெல்லியில் நடக்கும் பிரிக்ஸ் மாநாட்டின் நிறைவு நாள் இன்று. மாநாட்டில் இன்று இந்தியப் பிரதமர் மோடி காலநிலை மாற்றம் குறித்து, “இந்திய நாகரிகத்தில், இயற்கை அன்னையாகப் போற்றப்படுகிறது. பல நூற்றாண்டுகளாகவே... மேலும் பார்க்க

"தீமைகள் எந்த ரூபத்தில் தமிழகத்திற்கு வந்தாலும் அது தீயசக்தி திமுகவால் மட்டுமே!” - நிர்மல் குமார்

மிசா சட்டத்தின் கீழ் கைதான திமுக தலைவர் ஸ்டாலினை அவதூறாக பேசியதாக, தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் மற்றும் தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமாரை எதிர்த்துத் திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போ... மேலும் பார்க்க

"நீங்கள் திருந்தாவிட்டால் திருத்தப்படுவீர்கள்" - தவெகவிற்கு ஆ.ராசா எச்சரிக்கை

தமிழ்நாடு சட்டப்பேரவையில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் திமுகத் தலைவர் ஸ்டாலின் மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டது குறித்துச் சர்ச்சையாகப் பேசியிருந்தார். விஜய்யின் இந்தப் பேச்சிற்கு எதிர்ப்புத் தெ... மேலும் பார்க்க

"பாஜக-வை எதிர்க்க பயப்படும் தவெக; பாராட்டியாவது கருத்து சொல்லலாம்!" - தோழர் பாலபாரதி கிண்டல்!

சட்டமன்றக் கூட்டத்தொடரில், காவல்துறை மானியக் கோரிக்கையின்போது முதல்வர் அளித்த ஆவேச உரை, அரசியல் அரங்கில் பலத்த சர்ச்சையையும் விமர்சனத்தையும் உருவாக்கியிருக்கிறது. இந்த நிலையில், த.வெ.க அரசுக்கு ஆதரவு ... மேலும் பார்க்க