செய்திகள் :

'சண்டை இன்னும் முடியல!' - பட்ஜெட்டுக்கு தனித்தனியாக வந்த எடப்பாடி & எஸ்.பி.வேலுமணி

post image

2026-27 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. இந்த பட்ஜெட் செஷனுக்காக வருகை தந்த அதிமுகவினர் இரண்டு குழுக்களாக பிரிந்து சட்டமன்றத்துக்குள் சென்றிருந்தனர்.

CV Team
CV Team

காலை 10 மணிக்கு பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கியது. இதற்காக காலை 9:30 மணியளவில் எடப்பாடி பழனிசானி சட்டமன்ற வளாகத்துக்கு வந்தார். அவரை அக்ரி கிருஷ்ணமூர்த்தி, ஆர்.காமராஜ் போன்ற எம்.எல்.ஏக்கள் வரவேற்று அவைக்குள் அழைத்து சென்றனர்.

எடப்பாடி பழனிசாமி அவைக்குள் சென்று அரைமணி நேரம் கழித்த பிறகுதான் கட்சியின் இன்னொரு டீமான எஸ்.பி.வேலுமணி டீம் வந்தது. வேலுமணியுடன் சி.வி.சண்முகமும் கே.பி.அன்பழகனும் வந்திருந்தனர். நம்க்கையில்லா தீர்மானத்தின் வாக்கெடுப்பின் போதும் இரு அணிகளும் மாற்றி மாற்றி வாக்களித்தன. ஆளுநர் உரையின் மீதான நன்றி தெரிவிப்பு தீர்மானத்திம் இரு தரப்பினரும் தனித்தனியாகவே வந்திருந்தனர்.

CV vs EPS

'சசிகலா, டிடிவி என பிரிந்து சென்றவர்களை ஒருங்கிணைக்க வேண்டும். எங்களுக்கு எங்களின் பழைய பதவியை மீண்டும் வழங்க வேண்டும்' என எஸ்.பி.வேலுமணி சமீபத்தில் பேசியிருந்தார். அதைதொடர்ந்து சட்டமன்றத்துக்கும் தனி டீமாக வருவதை பார்க்கையில் அதிமுகவுக்குள் 'இன்னும் சண்டை ஓயவில்லை' என்பது வெட்ட வெளிச்சமாக தெரிகிறது.

TN Budget 2026: உதயநிதி, இபிஎஸ், ஓபிஎஸ் முதல் எம்.எல்.ஏக்கள் வரை; சட்டசபை வளாக ஹைலைட்ஸ் |Photo Album

TN Budget 2026: `இந்து சமய அறநிலையத்துறைக்கு ரூ.708 கோடி ஒதுக்கீடு!' - அமைச்சர் மரிய வில்சன் | Live மேலும் பார்க்க

TN Budget 2026: 'பள்ளிக்கல்வித்துறைக்கு நிதி குறைவு?' - தவெக பட்ஜெட்டைச் சாடும் அன்பில் மகேஸ்

இன்று தங்களுடைய முதல் பட்ஜெட்டைத் தாக்கல் செய்துள்ளது தவெக அரசு. பட்ஜெட் தாக்கலில் பள்ளிக்கல்வித் துறைக்கான நிதி குறித்துதான் முதலில் பட்ஜெட் வாசித்தார் தமிழ்நாடு நிதியமைச்சர் மரிய வில்சன். இந்தப் பட்... மேலும் பார்க்க

'விஜய் கொடும்பாவி எரிப்பு, காத்திருந்த உதயநிதி, தாக்கப்பட்ட பத்திரிகையாளர்கள்' - தஞ்சையில் பரபர

உதயநிதி ஸ்டாலின் தலைமையில், விவசாயிகள் கடனை முழுமையாகத் தள்ளுபடி செய்யக் கோரியும், மேகதாதுவில் அணை கட்டுவதைத் தடுக்காத தவெக அரசைக் கண்டித்தும் தஞ்சாவூரில் கடந்த 3ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில்... மேலும் பார்க்க

"அப்போது பட விளம்பரத்துக்காக மலேசியா போய் குத்தாட்டம் போட்டவர்தான் அவர்" - உதயநிதி தாக்கு

முதல்வர் விஜய் குறித்து தவறாகப் பேசியதற்காக நேற்று கைது செய்யப்பட்டார் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின். நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து நேற்று இரவே விசாரணை முடிந்து விடுவிக்கப்பட்டார். பிறகு சென்ன... மேலும் பார்க்க