செய்திகள் :

"அப்போது பட விளம்பரத்துக்காக மலேசியா போய் குத்தாட்டம் போட்டவர்தான் அவர்" - உதயநிதி தாக்கு

post image

முதல்வர் விஜய் குறித்து தவறாகப் பேசியதற்காக நேற்று கைது செய்யப்பட்டார் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின். நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து நேற்று இரவே விசாரணை முடிந்து விடுவிக்கப்பட்டார்.

பிறகு சென்னைக்கு வந்தவர். திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை நேரில் சென்று சந்தித்தார். திருச்சி விமான நிலையத்திலேயே தவெக அரசைக் கடுமையாக விமர்சித்திருந்தவர், கண்டனம் தெரிவித்து பதிவு ஒன்றையும் இப்போது வெளியிட்டிருக்கிறார்.

Udhayanidhi Stalin - MK Stalin
Udhayanidhi Stalin - MK Stalin

அவர், "விவசாயிகளின் துயர் துடைக்க வக்கற்ற சோஃபா மாடல் அரசு, பிரச்னைகளைத் திசைதிருப்புவதற்காக என்னைக் கைது செய்திருக்கிறது. தஞ்சை ஆர்ப்பாட்டத்தில் தேவையற்ற வார்த்தைகளை நான் பயன்படுத்தியதாக ஆளுங்கட்சியின் Abusive warriors-ஐ வைத்து என் மீது அவதூறு பரப்பினார்கள்.

பொய் வழக்குகளைப் பதிவு செய்து சென்னையிலிருந்து தஞ்சைக்கு அலைக்கழிப்பதாக நினைத்து, யாரையோ திருப்திப்படுத்த முயன்றிருக்கிறார்கள். என்னைக் கைது செய்ததும் மீடியாவைப் பார்த்து, இந்தக் கைதை காமெடியாகப் பார்க்கிறேன் என்று கூறிவிட்டுத்தான் வந்தேன்.

போலீஸைப் பார்த்துப் பயந்து ஓடிப்போய்விடவில்லை. ஆனால் இன்றைய முதலமைச்சர் கரூரில் 41 பேர் இறந்தபோதும் அவர்கள் குடும்பத்தாரையும் பார்க்காமல், மீடியாவையும் பார்க்காமல் கைது செய்து விடுவார்களோ என்ற அச்சத்தில் தலைதெறிக்க ஓடியதை நாடறியும்.

கரூரில் அத்தனை உயிர்கள் பலியான போதும் - அடுத்த ஒரு மாதத்தில் பட விளம்பரத்துக்காக மலேசியா போய் குத்தாட்டம் போட்டவர்தான் இவர். முதலமைச்சர் வேண்டுமானால் கைதுக்குப் பயப்படலாம். நான் அதற்கெல்லாம் அஞ்சமாட்டேன். நான் கலைஞரின் பேரன்.

முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் மகன். விவசாயிகளுக்காகப் போராடிக் கைதாவது என்றால், ஒருமுறை அல்ல 100 முறை கூடக் கைதாவேன். விவசாயிகளின் நலனுக்காக 300 கிலோமீட்டர் அல்ல 3000 கிலோமீட்டருக்கு மேல் அழைத்துச் சென்றாலும், நான் செல்லத் தயார்.

உங்கள் அடக்குமுறை எங்கள் மக்கள் பணிகளை ஒரு நாளும் தடுக்காது. என்னுடைய கைதைக் கண்டித்த தோழமை இயக்கங்கள் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களுக்கும், தமிழ்நாடு முழுவதும் எனக்கு ஆதரவாக ஒற்றுமையை வெளிப்படுத்திய கழக உடன்பிறப்புகளுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டுப் பதிவிட்டிருக்கிறார்.

உதயநிதி விவகாரம்: 'கைது, விசாரணை, ஆர்ப்பாட்டம், தள்ளுமுள்ளு, கல்வீச்சு' - தஞ்சையில் என்ன நடந்தது?

தஞ்சையில் நடைபெற்ற தி.மு.க ஆர்ப்பாட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு பேசினார். அப்போது, தமிழக முதல்வர் விஜய் குறித்து ஆபசமாகப் பேசியதாக, த.வெ.க மகளிர் அணி நிர்வாகி கொடுத்த புகாரின் பேரில், எதிர்... மேலும் பார்க்க

திண்டுக்கல்: அரசுப் பள்ளி குடிநீர்த் தொட்டியில் மலத்தைக் கலந்தது யார்? அதிர்ச்சியூட்டும் பின்னணி

திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் அருகே பள்ளி குடிநீர் தொட்டியில் மலக் கழிவுகள் கலக்கப்பட்ட நிகழ்வு தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் வட்டம், அய்யலூர் அருகே உள்ள த... மேலும் பார்க்க

நெல்லை: உதயநிதியைக் கண்டித்து தவெக கண்டன ஆர்ப்பாட்டம் | Photo Album

நெல்லை: உதயநிதி ஸ்டாலினை கண்டித்து த.வெ.க. நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம்.!'என் பெற்றோர் என்னை அப்படி வளர்க்கவில்லை; இது தரங்கெட்ட அரசு!' - திருச்சியில் கொந்தளித்த உதயநிதி! மேலும் பார்க்க

ஜாமீனில் வெளியேவந்த மார்க்கண்டேயன்; பாளையங்கோட்டை சிறையில் திமுகவினர் உற்சாக வரவேற்பு | Photos

பாளையங்கோட்டை சிறையில் இருந்து ஜாமீனில் விடுதலை செய்யப்பட்ட எம்.எல்.ஏ!தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு"’பரிதாபங்கள்’ ட்ரோல் காயப்படுத்துச்சு; ஆனா..." - விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் மகன் அக்ஷய் மேலும் பார்க்க

"விஜய் அஞ்சி சென்றார்; நாங்கள் ஓடி ஒளிய மாட்டோம்" - திருச்சி விமான நிலையத்தில் உதயநிதி ஸ்டாலின்

வழக்கு விசாரணைக்கு பிறகு சென்னை செல்ல திருச்சி விமான நிலையம் வந்த உதயநிதி ஸ்டாலின், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,"கடந்த 2025-ம் ஆண்டு, செப்டம்பர் மாதம் கரூரில் நடைபெற்ற அரசியல் பரப்ப... மேலும் பார்க்க

'என் பெற்றோர் என்னை அப்படி வளர்க்கவில்லை; இது தரங்கெட்ட அரசு!' - திருச்சியில் கொந்தளித்த உதயநிதி!

திருச்சி செங்கிப்பட்டிக்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி விசாரணையை முடித்துவிட்டு வெளியே வந்து பத்திரிகையாளர்களை சந்தித்திருந்தார்.Udhayanidhiஉதயநிதி பேசியதாவது, 'தவெக... மேலும் பார்க்க