செய்திகள் :

'என் பெற்றோர் என்னை அப்படி வளர்க்கவில்லை; இது தரங்கெட்ட அரசு!' - திருச்சியில் கொந்தளித்த உதயநிதி!

post image

திருச்சி செங்கிப்பட்டிக்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி விசாரணையை முடித்துவிட்டு வெளியே வந்து பத்திரிகையாளர்களை சந்தித்திருந்தார்.

Udhayanidhi
Udhayanidhi

உதயநிதி பேசியதாவது, 'தவெக அரசும் முதல்வரும் எல்லாவற்றுக்கும் ஒரு டைவர்சன் யுக்தியை கையாள்கின்றனர். நான் போராட்டத்தில் பேசியது விவசாயிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. நாளை சட்டமன்றத்தில் அந்த விவகாரம் பேசுபொருளாகும் என்பதால் நான் பேசாததை பேசியதாக திரித்து பரவ வைத்து காவல்துறை என்னை கைது செய்ய வந்தது.

நான் முழு ஒத்துழைப்பை கொடுத்தேன். என்னை முடக்க பார்த்தார்கள். நாங்கள் இதுக்கெல்லாம் பயப்பட மாட்டோம் எனக் கூறி கைதானேன். நீதிமன்றத்தில் போய் கைது செய்யவில்லை விசாரணைக்குதான் அழைத்து சென்றோம் எனக் கூறியிருக்கின்றனர். தஞ்சாவூருக்கு அழைத்து செல்லாமல் செங்கிப்பட்டி காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று அலைக்கழித்தனர். நான் எந்த தவறான எண்ணத்திலும் பேசவில்லை. பெண்களை தவறான நோக்கத்தில் பேசவேண்டும் என நினைக்கமாட்டேன். என் பெற்றோர் என்னை அப்படி வளர்க்கவில்லை. எனக்கென குடும்பம் இருக்கிறது. தமிழ்நாட்டின் ஒவ்வொரு பெண்களையும் தாயாக தங்கையாக பார்க்கிறேன். என்னுடைய கைதை கண்டித்து உடன்பிறப்புகள் பலரும் போராடி கைதாகியிருக்கின்றனர்.

Udhayanidhi
Udhayanidhi

அவர்களின் அன்புக்கு நன்றி. அவர்களை சீக்கிரம் விடுதலை செய்ய வேண்டும். சில தலைவர்கள் நான் பேசியதை தவறாக புரிந்துகொண்டு கண்டனம் தெரிவித்திருக்கின்றனர். அதுதான் வருத்தம். நான் எந்த இரட்டை அர்த்தத்திலும் பேசவில்லை. காவிரி தண்ணீர் வேண்டுமென ஒற்றை அர்த்தத்தில்தான் பேசினேன். இந்த தரங்கெட்ட அரசின் கைதுக்கெல்லாம் பயப்படமாட்டேன். இன்னும் 100 தடவை கூட பேசுவேன். மீண்டும் மீண்டும் பேசுவேன்' என்றார்.

உதயநிதி கைது : தேனி, திண்டுக்கல், மதுரையில் திமுகவினர் ஆர்ப்பாட்டம் | Photo

உதயநிதி கைது எதிரொலிஉதயநிதி கைது எதிரொலிஉதயநிதி கைது எதிரொலிஉதயநிதி கைது எதிரொலிஉதயநிதி கைதுஉதயநிதி கைது எதிரொலிஉதயநிதி கைது எதிரொலிஉதயநிதி கைது எதிரொலிஉதயநிதி கைது எதிரொலிஉதயநிதி கைது எதிரொலிஉதயநிதி ... மேலும் பார்க்க

உதயநிதி கைது: ``காவிரி விவகாரத்தில் காட்டாத வேகம் கைது நடவடிக்கைக்கு காட்டுவது ஏன்?"- சீமான் காட்டம்

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ``காவிர... மேலும் பார்க்க

TN Budget 2026: தவெக அரசின் முதல் பட்ஜெட்; தவெகவின் வாக்குறுதிகளும், மக்கள் எதிர்பார்ப்பும் என்ன? | Live Updates

என்னென்ன எதிர்பார்ப்புகள்? தவெக ஆட்சியின் முதல் பட்ஜெட் இது. தேர்தல் வாக்குறுதிகளில் தவெக பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்திருந்தது. அதில் பெண்களுக்கு...மதிப்புமிகு மகளிர் திட்டம் - 60 வயது வரை உள்ள அனை... மேலும் பார்க்க

உதயநிதி ஸ்டாலின் கைது: ``விசாரணை நடத்துவதுதான் நோக்கம் என்றால்..." - ஸ்டாலின் கேள்வி

உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், ``காவிரி உரிமையை நிலைநாட்ட துப்பு இல்லாத, த.வெ.க. அரசின் அலட்சிய ஆணவப் போக்கை... மேலும் பார்க்க