செய்திகள் :

பெண் தொழிலாளியின் வங்கிக் கணக்கில் ரூ 100 கோடி! - கியாஸ் மானியத்தை செக் செய்தபோது அதிர்ச்சி

post image

மேற்கு வங்காளம் தெற்கு 24 பர்கானா மாவட்டத்திலுள்ள கல்டலியைச் சேர்ந்தவர் காஷ்மிரா ஷேக். பட்டுச் சேலையில் ஜரிகை நெய்யும் வேலை செய்து வருகிறார். கணவர் பை தைக்கும் தொழில் செய்து வருகிறார்.

பணம்
பணம்

மூன்று குழந்தைகளுடன் வறுமையான வாழ்க்கை வாழ்ந்து வரும் இவருக்கு அங்குள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில் சேமிப்பு கணக்கு உள்ளது. தான் வாங்கிய கியாஸ் சிலிண்டருக்கு அரசு தரும் மானியம் சேமிப்பு கணக்கில் வரவாகியுள்ளதா என்பதை சரிபார்க்க கடந்த 1 ஆம் தேதி வங்கிக்கு சென்று சேமிப்பு புத்தகத்தை எண்ட்ரி செய்து பார்த்தவருக்கு பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

அவரது சேமிப்பு கணக்கில் ரூ 99,99,99,997 வரவாகியிருந்தது. ரூ 100 கோடிக்கு, ரூ 3 மட்டும் குறைத்து வரவு வைக்கப்பட்டிருந்தது.

கஷ்டமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் தனக்கு எப்படி இவ்வளவு பணம் வந்தது என்பது தெரியாமல் பதற்றமானவர், பயத்துடன் அங்கிருந்த வங்கி அதிகாரிகளிடம் முறையிட்டார்.

காஷ்மீரா ஷேக்

அவரைப்போலவே பதறிப்போன வங்கி அதிகாரிகள், உடனே காஷ்மிரா ஷேக்கின் கணக்கை முடக்கி, பின்பு அவரிடம் விசாரணை நடத்தினர். இந்த பணம் எப்படி அவர் வங்கிக் கணக்கிற்கு வந்தது? யார் அனுப்பினார்கள் என்பதை வங்கி அதிகாரிகளுடன் பல்வேறு அரசுத் துறை அதிகாரிகளும் விசாரித்து வருகின்றனர்.

இதில் கொடுமை என்னவென்றால் அன்றாட ஜீவனத்திற்கு உதவும் அவர் செய்து வந்த நெசவுத் தொழிலுக்கான ஜரிகை வாங்க அவர் சேமிப்புக் கணக்கில் உள்ள சிறிய தொகையை எடுக்க முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்.

கடனாளிகளாகும் பெரும்பான்மை இந்தியர்கள்... காப்பாற்ற என்ன வழி?

ஃபோர்ப்ஸ் (Forbes) தரவுகளின்படி, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக உலகிலேயே அதிக பில்லியனர்களைக் கொண்ட நாடாக இந்தியா விளங்குகிறது. அதே இந்தியாவில்தான், பெரும்பாலான குடும்பங்களின் மாதச் சம்பளம், அவர்க... மேலும் பார்க்க

NRI களுக்கான மியூச்சுவல் ஃபண்ட்ஸ் முதலீட்டு வழிகாட்டல் - கட்டணமில்லா வகுப்பு!

இந்தியாவில் இதுவரை 10 கோடி SIP (மாதாந்திர முதலீடு) துவங்கப்பட்டு விட்டதாக அசோசியேஷன் ஆஃப் மியூச்சுவல் ஃபண்ட்ஸ் இன் இந்தியா (AMFI) அமைப்பு அறிவித்துள்ளது. 6 கோடி இந்தியர்கள் மியூச்சுவல் ஃபண்ட்ஸ்-ல் முத... மேலும் பார்க்க

ரிஸ்க் எடுக்காமல் பணக்காரர் ஆக முடியுமா? Ergodicity என்றால் என்ன?

“பங்குச்சந்தையில் முதலீடு பண்ணி அந்த ஆள் கோடீஸ்வரன் ஆயிட்டாராம், இந்த ஆள் ஜீரோ ஆயிட்டாராம்!” – டீக்கடை முதல் சோஷியல் மீடியா வரை தினமும் கேட்கும் வார்த்தை இது.ஆளுக்காள் ஓடி ஓடி சம்பாதிக்கிறோம், ஆசை ஆசை... மேலும் பார்க்க

பணவீக்கத்தால் சவாலாகும் எதிர்காலம்... இப்போதே விழித்துக்கொள்ள வேண்டும்!

கடந்த சில ஆண்டுகளாக கட்டுக்குள் இருந்த, பணவீக்கம் மீண்டும் உயர ஆரம்பித்திருக்கிறது. கொரோனா, போர்கள், கச்சா எண்ணெய் விலை உயர்வு, காலநிலை மாற்றம், விநியோகச் சங்கிலி பாதிப்புகள் என ஒன்றன் பின் ஒன்றாக வந்... மேலும் பார்க்க