செய்திகள் :

TN Budget 2026: தவெக அரசின் முதல் பட்ஜெட்; தவெகவின் வாக்குறுதிகளும், மக்கள் எதிர்பார்ப்பும் என்ன? | Live Updates

post image

என்னென்ன எதிர்பார்ப்புகள்?

தவெக ஆட்சியின் முதல் பட்ஜெட் இது.

தேர்தல் வாக்குறுதிகளில் தவெக பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்திருந்தது. அதில் பெண்களுக்கு...

மதிப்புமிகு மகளிர் திட்டம் - 60 வயது வரை உள்ள அனைத்துக் குடும்பத் தலைவிகளுக்கும் மாதம் 2500 ரூபாய்,

அன்னபூரணி சூப்பர் சிக்ஸ் திட்டம் - ஒவ்வொரு குடும்பத்திற்கும் வருடத்திற்கு ஆறு கேஸ் சிலிண்டர்கள் கட்டணமின்றி வழங்கல்,

வெற்றிப் பயணம் திட்டம் - தமிழ்நாடு அரசுப் போக்குவரத்தின் அனைத்துப் பேருந்துகளிலும் பெண்கள் கட்டணமின்றிப் பயணிக்கலாம்,

அண்ணன் சீர் திட்டம் - பெண்களின் திருமணத்திற்காக எட்டு கிராம் (ஒரு பவுன்) தங்கமும், தரமான பட்டுச் சேலையும் தாய் வீட்டிலிருந்து அண்ணன் சீர்.

இளைஞர்களுக்கு...

வேலைவாய்ப்பு தாமதச் சூழல் நிதி உதவி - வேலை தேடும் பட்டதாரிகளுக்கு ரூ. 4,000 மற்றும் டிப்ளமோ முடித்தவர்களுக்கு ரூ. 2,500 இளைஞர் நல நிதி,

தவெக வாக்குறுதிகள்
தவெக வாக்குறுதிகள்

இளைஞர்கள் பங்களிப்பில் நமது நல்லாட்சி - ஒவ்வொரு கிராமப் பஞ்சாயத்து மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பிலும் 'முதல்வர் மக்கள் சேவை நண்பர்' பதவியின் மூலம் 5 லட்சம் இளைஞர்களுக்குத் தலா ரூ. 18,000 ஊதியத்தில் வேலைவாய்ப்பு,

வெற்றி தொழில் முனைவோர் திட்டம் - இளைஞர்களைத் தொழில் முனைவோர்களாக மாற்ற ரூ. 25 லட்சம் வரை பிணையமில்லாத் தொழில் கடன்.

அரசுப் பணியாளர்கள்...

மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம்,

5 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் பணியாற்றிய தற்காலிக ஆசிரியர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவருக்கும் பணி நிரந்தரம்.

இப்படியான வாக்குறுதிகள் இடம்பெற்றிருந்தன.

இந்த வாக்குறுதிகளில் என்னென்ன நாளைய பட்ஜெட்டில் இடம்பெற உள்ளது என்பதில் மக்கள் எதிர்பார்ப்புடன் இருக்கிறார்கள்.

யார்? எப்போது?

நாளை தமிழ்நாட்டின் 2026-27-ம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டைத் தமிழ்நாட்டின் நிதியமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்கிறார்.

இந்தப் பட்ஜெட் தாக்கல் நாளை காலை 10 மணிக்குத் தொடங்க உள்ளது.

நாளை மறுநாள் (ஆகஸ்ட் 6), தமிழ்நாட்டின் வேளாண் பட்ஜெட்டை வேளாண் துறை அமைச்சர் வினோத் தாக்கல் செய்கிறார்.

நாளை பட்ஜெட் தாக்கல்!

நாளை (ஆகஸ்ட் 5) தமிழ்நாடு சட்டமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் ஆகிறது. இது தமிழக வெற்றிக் கழக ஆட்சியின் முதல் பட்ஜெட் தாக்கல் ஆகும்.

இதனால், எப்போதையும் விட, நாளை நடக்க உள்ள பட்ஜெட் தாக்கலுக்கான எதிர்பார்ப்பு தமிழ்நாட்டில் அதிகம் உள்ளது.

உதயநிதி கைது: ``காவிரி விவகாரத்தில் காட்டாத வேகம் கைது நடவடிக்கைக்கு காட்டுவது ஏன்?"- சீமான் காட்டம்

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ``காவிர... மேலும் பார்க்க

உதயநிதி ஸ்டாலின் கைது: ``விசாரணை நடத்துவதுதான் நோக்கம் என்றால்..." - ஸ்டாலின் கேள்வி

உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், ``காவிரி உரிமையை நிலைநாட்ட துப்பு இல்லாத, த.வெ.க. அரசின் அலட்சிய ஆணவப் போக்கை... மேலும் பார்க்க

"அமைச்சர் வன்னிஅரசு சொல்வது வேறு... நான் எழுப்புகிற கேள்விகள் வேறு!" - விளக்குகிறார் ஆளூர் ஷாநவாஸ்

த.வெ.க அரசின் மூன்று மாதகால ஆட்சி குறித்து பல்வேறு அதிரடி விமர்சனங்களை முன்வைத்து வருகிறார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முதன்மைச் செயலாளர் ஆளூர் ஷா நவாஸ். இந்தச் சூழலில், நமது சந்தேகங்களை கேள்விகள... மேலும் பார்க்க

உதயநிதி ஸ்டாலின் கைது விவகாரம்: `விடுவிக்க உத்தரவிட்ட நீதிமன்றம்' - என்ன நடந்தது?

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர வழக்காக பதிவு செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து நீதிமன்றம், ``நாளை சட்டமன்றம் கூட உள்ள நிலையில், இன்றே வ... மேலும் பார்க்க

உதயநிதி கைது: ``நாங்க என்ன தீவிரவாதிகளா... இப்படி அடிச்சிருக்கீங்க?" - மேயர் பிரியா

எதிர்க்கட்சித் தலைவர் கைதை கண்டித்து தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் திமுக தொண்டர்கள் சாலை மறியல், அரசுக்கு எதிரான போராட்டம் போன்றவைகளில் ஈடுபட்டனர். அதைக் கலைக்கும் வகையில் சில இடங்களில் தடியடி நடத்... மேலும் பார்க்க

உதயநிதி : ``இரட்டை பொருள் தரும் வகையில் பேசுவதை தவிர்த்திருக்க வேண்டும்" - திருமாவளவன்

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் உரையில் ஒரு பகுதி சர்ச்சையானது. அது தொடர்பாக ஆளும் தவெக அரசு உதயநிதி ஸ்டாலினை கைது செய்திருக்கிறது. இது தொடர்பாக நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு அவசர வழக்காக வி... மேலும் பார்க்க