செய்திகள் :

``சர்கார் பேனரை கிழித்ததால் அதிமுக ஆட்சியை இழந்தது!'' - அமைச்சர் ஆனந்த் கடும் விமர்சனம்

post image

சட்டமன்றத்தில் இன்று நீர்வளத்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடந்திருந்தது. இதில் பதிலளித்து பேசிய அமைச்சர் ஆனந்த் சர்கார் பட சமயத்தில் நடந்த விவகாரத்தை குறிப்பிட்டு அதிமுகவை கடுமையாக விமர்சித்திருந்தார்.

Anand
Anand

அவர் பேசியதாவது, ``நான் புதுச்சேரியில் எம்.எல்.ஏவாக இருந்தேன். சாதாரண ஆள். கவுன்சிலர் அளவுக்குதான் அங்கே ஓட்டு. இங்கே நான் அமைச்சராக இருக்கிறேன் என்றால் தலைவர்தான் காரணம்.

துணை சபாநாயகரை தேர்தலில் நிறுத்திய போது என்னிடம் 75000 ரூபாய்தான் இருக்கிறது என்றார். 'அது போதும் நீ நில்லு நான் பார்த்துக் கொள்கிறேன்' என தலைவர் சொன்னார்.

திண்டுக்கல் மாவட்டத்தில் யார் யாரெல்லாமோ சீட் கேட்டார்கள். அங்கே ஒன்றியத்தில் இருப்பவர்களுக்கு கொடுக்கமால் யார் யாருக்கோ ஏன் கொடுக்க நினைக்கிறாய் என தலைவர் கேட்டார். 'பணம் இல்லை' என்கிறார்கள் என்றேன். 'கட்டுத்தொகைக்கு பணம் இருந்தால் போதும். வரச் சொல்' என்றார்

சென்ட்ரிங் வேலைக்கு 1500 ரூபாய் சம்பளத்துக்கு செல்லும் தொழிலாளியை எம்.எல்.ஏ ஆக்கியிருக்கிறோம். சாதி, மதம் எல்லாவற்றையும் கடந்தது தலைவருக்காக விழுந்த வாக்குகள் அவை.

Anand
Anand

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அல்லேரி கிராமத்தில் ஒரு கர்ப்பிணி பெண்ணை கட்டிலில் தூக்கி வந்தார்கள். அந்த வீடியோவை அனுப்பி, 'கலெக்டரிடம் பேசிவிட்டேன். உடனடியாக வேண்டியதை செய்து கொடுங்கள்' என்றார். இதோ இப்போது அங்கே 21 கோடியில் ரோடு போடப் போகிறோம்.

ஒரு மனிதனை எப்படியெல்லாம் புண்படுத்த முடியுமோ புண்படுத்தினார்கள். சர்கார் பேனரை கிழிக்காமல் இருந்திருந்தால் அவர்கள் (அதிமுகவை நோக்கி) இந்த இடத்தில் இருந்திருப்பார்கள். பேனரை கிழித்ததால் அவர்கள் (அதிமுகவை நோக்கி) அங்கே இருக்கிறார்கள்." என்றார்.

'சீட் கேட்ட பிரபல சினிமா இயக்குநர்; உடனே மறுத்த முதல்வர் விஜய்!' - அமைச்சர் ஆனந்த் பகிரும் ரகசியம்

சட்டமன்றத்தில் இன்று நீர்வளத்துறையின் மானியக் கோரிக்கையின் மீதான விவாதம் நடந்தது. மானியக் கோரிக்கையில் பதிலளித்து பேசிய அமைச்சர் ஆனந்த், தேர்தலின் போது திரைமறைவில் நடந்த சில விஷயங்களையும் பேசியிருந்தா... மேலும் பார்க்க

'தலைவர் ஏண்டா அரசியலுக்கு வந்தார் என நினைத்தேன்...' - அமைச்சர் ஆனந்த் ஓபன் டாக்!

சட்டமன்றத்தில் இன்று நீர்வளத்துறைக்கான மானியக் கோரிக்கை விவாதம் நடந்திருந்தது. இதில் பதிலளித்து பேசிய அமைச்சர் ஆனந்த், 'முதல்வர் ஏண்டா அரசியலுக்கு வந்தார் என நினைத்தேன்?' என்று சுவாரஸ்யமாக பேசியிருக்க... மேலும் பார்க்க

நள்ளிரவு டெல்லி ஃபோன்கால்... கேன்சலாகிறதா அமித் ஷா - எடப்பாடி சந்திப்பு?

தென்னிந்திய முதல்வர்கள் மாநாட்டில் கலந்துக்கொள்வதற்காக, இன்றிரவு சென்னை வருகிறார் அமித் ஷா. கோவளத்திலுள்ள ஒரு தனியார் நட்சத்திர விடுதியில் தங்குபவர், பின்னிரவில் அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனி... மேலும் பார்க்க

"100 நாள் ஆட்சியில், 6 காவல் நிலைய மரணங்கள்; அரசின் ஈடு இணையற்ற சாதனை"- சீமான் கண்டனம்

"100 நாள் ஆட்சியில், 6 காவல் நிலைய மரணங்கள் நிகழ்த்தப்பட்டுள்ளதுதான் தவெக கொடுங்கோன்மை அரசின் ஈடு இணையற்ற சாதனை" என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்திருக்கிறார். இதுதொடர்பாக அ... மேலும் பார்க்க

மாணவர்கள் போராட்டம் குறித்த சுற்றறிக்கை: "பாசிச அரசியலைத் தொடங்க ஆழம் பார்த்ததா தவெக அரசு?"- கனிமொழி

காக்ரோச் ஜனதா கட்சி மற்றும் இடதுசாரி போராட்டங்களில் மாணவர்கள் பங்கேற்பதைத் தடுக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. ஆனால் இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து சில நிமிடங்களிலேயே இந்த ... மேலும் பார்க்க

`ஆளுங்கட்சி ஆகிவிட்டோம்' தவெக கூட்டணியை உறுதி செய்த திருமா; பாமக-வுக்கு வைத்த செக்! - பின்னணி என்ன?

தவெக அமைச்சரவையில் அமைச்சர் வன்னி அரசு இடம்பெற்றிருந்தாலும் எந்தக் கூட்டணியில் விசிக இருக்கிறது என்பதை தெளிவாக கூறாமல் திருமாவளவன் குழப்பி வந்தார். 'திமுகவுடன் எங்களது நட்பு தொடர்கிறது' என்று திமுகவிற... மேலும் பார்க்க