சர்தார் வல்லபபாய் படேல் பிறந்தநாள்: தலைவர்கள் மரியாதை!
சர்தார் வல்லபபாய் படேலின் பிறந்தநாளையொட்டி குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் அவருக்கு மரியாதை செலுத்தினர்.
குடிரசுத்தலைவர்
வல்லபபாய் படேலின் உருவப் படத்துக்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு மரியாதை செலுத்தினார்.
குடியரசுத் தலைவர் மாளிகையில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த படேலின் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதன் புகைப்படங்களை குடியரசுத் தலைவர் மாளிகை பகிர்ந்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி
படேலின் பிறந்தநாளையொட்டி தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள அவர்,
பாரத ரத்னா சர்தார் வல்லபபாய் படேலின் பிறந்தநாளில் அவருக்கு எனது மனமார்ந்த அஞ்சலி. தேசத்தின் ஒற்றுமை மற்றும் இறையாண்மையைப் பாதுகாப்பதே அவரது வாழ்க்கையின் முதன்மையானதாக இருந்தது. அவரது ஆளுமையும் பணியும் நாட்டின் ஒவ்வொரு தலைமுறையினருக்கும் தொடர்ந்து ஊக்கமளிக்கும் எனப் பதிவிட்டுள்ளார்.
சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாளையொட்டி அவரின் உருவச்சிலை அமைந்துள்ள குஜராத் மாநிலம் கேவாடியா பகுதியில் விமானப் படை சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு வீரர்களின் சாகசங்களைக் கண்டு ரசித்தார்.
இதேபோன்று குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர், தில்லி துணை நிலை ஆளுநர் வி.கே. சக்சேனா, ஆகியோர் மலர் தூரி மரியாதை செலுத்தினர்.